SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆஸ்திரேலியாவுக்கு ஆடு வந்த கதையும், இப்போதுள்ள நிலையும்! 04.12.2025

ஆடு ஆஸ்திரேலிய மண் சார்ந்த விலங்கு அல்ல. ஆடு, தாவரங்களை அழிக்கிறது என்பதால் ஆடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆடுகளை சுட்டுத்தள்ள அரசு திட்டங்களை வகுக்கின்றன. இந்த நாட்டுக்குள் ஆடு எப்படி வந்தது அல்லது ஏன் வந்தது, விருந்தாளியாக வந்த ஆடு எப்படி வில்லனானது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.

துளசியின் மருத்துவ குணங்கள்! 04.12.2025

துளசியின் மருத்துவ நலன்கள் மற்றும் அதனை உபயோகமாக பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.

20 ஆண்டுகளுக்கு முன் தவறாக வசூலித்த பணம் — திருப்பி செலுத்தும் Services Australia! 04.12.2025

ஆஸ்திரேலியாவில் சுமார் 44,000 பேருக்கு சென்ட்ரலிங்க் மூலம் தவறாக வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று Services Australia தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி : உடல் பருமன் சிகிச்சை - WHOவின் முதல் மருந்து பரிந்துரைகள் 04.12.2025

உடல் பருமன் சிகிச்சைக்கு முதன்முறையாக மருந்து பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் WHO வெளியிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிகாட்டுதல் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

ஆஸ்திரேலியாவின் தேசிய புற்றுநோய் அமைப்பின் தலைவராகியுள்ள தமிழன் 04.12.2025

Clinical Oncology Society of Australia ( COSA) எனும் தேசிய அமைப்பின் தலைவராக பேராசிரியர் சபே சபேசன் அவர்கள் தெரிவாகியுள்ளார். Townsville cancer centre இயக்குனராகவும், James Cook (JCU) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் எனப் பன்முகம் கொண்ட தமிழரான Dr சபே சபேசன் அவர்கள் தலைமைத்துவப் பண்புகள், அவரின் வேலைத்திட்டங்கள் மற்றும் பல விடயங்கள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன்...

இன்றைய செய்திகள்: 04 டிசம்பர் 2025 வியாழக்கிழமை 04.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 04/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

போலி Wi-Fi உருவாக்கி தகவல்களை திருடிய நபருக்கு சிறைத் தண்டனை! 03.12.2025

‘ஈவில் ட்வின்’ எனப்படும் போலி வைஃபை வலையமைப்புகளை உருவாக்கி தனிப்பட்ட தகவல்களை திருடிய மேற்கு ஆஸ்திரேலிய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறை தொடர்பில் ஐ.நா ஆய்வு 03.12.2025

ஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறைமை இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்குழுவொன்றின் தீவிர ஆய்வுக்குட்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Gabrielle Katanasho.

இன்றைய செய்திகள்: 03 டிசம்பர் 2025 புதன்கிழமை 03.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Managing Cholesterol: Key Insights from a Specialist - கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: புதிய ஊசி மூலமான மருந்துகள் 02.12.2025

Cholesterol plays an essential role in our health, but when its balance is disrupted, it can lead to various health issues. We are speaking with a Consultant Cardiologist, staff specialist in General Medicine Dr Victor D Joseph to gain important insights about cholesterol and its impact on our wellbeing. The interview is conducted by Praba Maheswaran. - கொலஸ்ட்ரால் என்பது நமது உடல்நலத்தில் முக்கிய...

இலங்கை: முழு நாட்டையும் உலுக்கி எடுத்துள்ள இயற்கைப் பேரழிவு! 02.12.2025

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களும் சீரற்ற காலநிலையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் 400 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் 300ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். இந்த அனர்த்தத்தில் மத்திய மலைநாட்டு பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இலங்கை வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு! 02.12.2025

இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய Ditwah புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

2025 உலகில் அழகான பயணிகள் நிலைய பட்டியலில் சிட்னி Gadigal Metro 02.12.2025

சிட்னியில் புதிய மெட்ரோ நிலையமான Gadigal Metro Station, 2025 ஆம் ஆண்டின் உலகின் அழகான பயணிகள் நிலையங்கள் பட்டியலில் Prix Versailles மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 02 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 02.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 2/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

முதியவர்களுக்கு சாலை பாதுகாப்பை கற்றுக்கொடுக்கும் திட்டம்! 01.12.2025

Ethnic Communities Council of NSW (ECCNSW) முன்னெடுத்துள்ள சமூக சாலை பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்குகிறார் ECCNSW-இல் தமிழ் இருமொழி ஆசிரியராக கடமையாற்றும் மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

நியூசிலாந்தை விட்டு பலர் வெளியேறுவதற்கான காரணம் என்ன? 01.12.2025

2025 செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் 73,000க்கும் மேற்பட்ட நியூசிலாந்து குடிமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி : A320 விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு - பின்னணியும் பாதிப்பும் 01.12.2025

Airbus A320 விமானங்களில் அவசர மென்பொருள் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உலகளவில் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 01 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை 01.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 30.11.2025

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள்; அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

தோல் புற்றுநோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது? 30.11.2025

தோல் புற்றுநோய் குறித்து நம்மிடையே நிலவும் தவறான புரிதல்கள் குறித்தும், தோல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

ஐந்து புதிய ரயில் நிலையங்களை உள்ளடக்கிய மெல்பன் மெட்ரோ சுரங்கப்பாதை திறக்கப்பட்டது! 30.11.2025

மெல்பனின் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட metro tunnel- சுரங்கத்திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Physiotherapist: ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு எந்தளவில் உள்ளது? 30.11.2025

ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளோம். அந்தவகையில் Physiotherapy தொடர்பில் அறிந்துகொள்வோம். Physiotherapy சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த physiotherapist பிரியா ஞானகுமாரன் அவர்கள்....

வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? பின்னணி என்ன? 29.11.2025

அமெரிக்கா, வெனிசுவேலா மீது தாக்குதலை நடத்த ஆயத்தமாக இருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதன் பின்னணி தொடர்பிலும் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese! 29.11.2025

ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் அவரது இணையான Jodie Haydonனும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (23 – 29 நவம்பர் 2025) 28.11.2025

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (23 – 29 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.