SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
முதியோர் பராமரிப்பு திட்டம்: விமர்சனமும், அரசின் தீர்வுகளும் 06.07.2026 9:00
முதியோர் பராமரிப்பில் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Integrated Assessment Tool ஒருங்கிணைந்த மதிப்பீட்டு கருவி கணினி கணக்கீட்டு வழிமுறை (Algorithm) கொண்டு மேற்கொள்ளும் முதியோர் பராமரிப்பு மதிப்பீடுகள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெடரல் அரசு அதில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 06 ஜூலை 2026 - திங்கட்கிழமை 06.07.2026 4:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 05.07.2026 9:26
தமிழக அரசியலை உலுக்கி வரும் "குதிரை பேரம்"; தமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வரும் 'நெல்லை, இரட்டை கொலை' சம்பவம்; திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என்று விசிக தீர்மானம் உள்ளிட்ட செய்திகளோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (28 ஜூன் – 4 ஜூலை 2026) 04.07.2026 6:38
ஆஸ்திரேலியாவின் இந்த வார (28 ஜூன் – 4 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
உலகக் கோப்பை தினசரி: குரோஷியாவின் இதயங்களைப் போத்துக்கல் அணி உடைத்தது, ஸ்பெயின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது 03.07.2026 4:19
FIFA உலகக் கோப்பையின் இருபத்திரண்டாம் நாள் ஆட்டங்களில், (Luka Modrić) லூகா மோட்ரிச் ஆடிய கடைசி கால்பந்துப் போட்டியில், குரோஷியாவை போத்துக்கல் வீழ்த்தியது, ஸ்பெயின் ஆஸ்திரியாவை எளிதாக வென்றது, மற்றும் சுவிட்சர்லாந்து அல்ஜீரியாவைத் தோற்கடித்து Group of 16 என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்திரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
தினமும் 3 மணி நேரம் இலவச மின்சாரம் - யாருக்கு? எப்படி பெறலாம்? 03.07.2026 6:57
ஆஸ்திரேலியாவில் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், சில மாநிலங்களில் புதிய இலவச மின்சாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, யார் தகுதி பெறுகிறார்கள், இதன் மூலம் எவ்வளவு சேமிக்க முடியும் போன்ற விடயங்களை செய்தியின் பின்னணியாக முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
ட்ரோன் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் எவை? 03.07.2026 14:57
ஆஸ்திரேலியாவில் பலரும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதை நாம் அவதானித்திருப்போம். இப்படியாக ட்ரோன்களை பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் என்னென்ன என்பது உட்பட மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ட்ரோன் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்டவரும் SynTel Corp என்ற நிறுவனத்தின் Chief Technology Officer-ஆகவும் உள்ள Dr பிருந்தன் கீர்த்திநாதன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
இன்றைய செய்திகள்: 03 ஜூலை 2026 - வெள்ளிக்கிழமை 03.07.2026 4:40
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை (03/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
What to expect when visiting the veterinarian - உங்கள் செல்லப்பிராணியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் போது கவனிக்கவேண்டியவை 03.07.2026 9:30
Regular veterinary visits play an important role in keeping your pet healthy and happy. Find out what to expect at a veterinary clinic in Australia, from routine check-ups and vaccinations to advice on caring for your pet’s wellbeing. - ஆஸ்திரேலியாவில் விலங்குகள் நல மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னென்ன எதிர்பார்க்கலாம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சை பற்றி Phil Tucak ஆங்கிலத்தில் தய...
ஆஸ்திரேலியாவில் குளிர்கால விவசாயமும் ஆரோக்கியமான வாழ்வும் 03.07.2026 13:33
நாட்டின் குளிர்கால விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் பற்றி எம்முடன் உரையாடுகிறார் ஆஸ்திரேலிய வேளாண்மைத் துறையைச் சேர்ந்த பாரதி சண்முகன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 02.07.2026 8:21
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 06 மாதங்களில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு. 32 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுடன் 35 நாட்களுக்கும் மேலாக இணைந்தே பயணம் செய்யும் சுப்ரமணியன் என்ற நாயின் கதை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலகக் கோப்பை தினசரி: பெரும் சவால்களிலிருந்து இங்கிலாந்தும் பெல்ஜியமும் மீண்டன, அமெரிக்கா முன்னேறிச் செல்கிறது 02.07.2026 4:55
நாயகர்களான Harry Kane மற்றும் Youri Tielemans ஆகியோர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தை Group of 16 என்ற சுற்றுக்கு முன்னேற்றினர், அதே நேரத்தில் Bosnia / Herzegovina வை வென்று அமெரிக்கா தனது இடத்தை பாதுகாப்பாக உறுதி செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தோராம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
மாணவர் கடன் – திருப்பிச் செலுத்துவது ஏன் இப்போது இலகுவாகிறது 02.07.2026 9:34
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகம், TAFE எனும் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் மேற்கல்வி படிப்பதற்காக அரசிடம் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை முப்பது இலட்சத்திற்கும் அதிகம். இந்தக் கடன், HECS அல்லது HELP கடன் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் திருப்பிச் செலுத்தும் முறை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. பலருடைய கடனின் அளவே, ஒரே தடவையில் இருபது சதவீதம் குறைந்திருக்கிறது. புதிய நிதியாண்டு நேற்று தொடங்கிய...
அயலவருடனான தகராறுகளை அதிகரிக்காமல் தீர்ப்பது எப்படி? 02.07.2026 11:37
ஆஸ்திரேலியாவில் அயலவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? விளக்குகிறார் வழக்கறிஞர் ஞானாகரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
ஞானப்பற்களை(wisdom teeth) கட்டாயம் அகற்ற வேண்டுமா? 02.07.2026 12:52
Wisdom Teeth எனப்படுகின்ற ஞானப்பற்களால் நாம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கலாம். இந்தப் பற்களைப் பிடுங்குவது அவசியமா என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பிரிஸ்பேனில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 02 ஜூலை 2026 - வியாழக்கிழமை 02.07.2026 4:23
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியாவை வந்தடைந்த புகலிடக்கோரிக்கையாளர் படகு! 01.07.2026 2:19
புகலிடக்கோரிக்கையாளர் படகொன்று வடக்கு குயின்ஸ்லாந்தின் தொலைதூரப் பகுதியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் இந்திய விசா, Passport, OCI சேவைகள் இடைநிறுத்தம் 01.07.2026 2:29
ஆஸ்திரேலியாவில் செயல்படும் இந்தியாவின் Passport மற்றும் Visa சேவைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.
கோழியும் அல்ல, வான்கோழியுமல்ல,: ஆஸ்திரேலிய புதர்க்கோழியின் அதிசய வாழ்க்கை 01.07.2026 8:53
ஆஸ்திரேலியாவில் பலருக்கும் தெரிந்த ஆஸ்திரேலிய புதர்க்கோழியின் வாழ்க்கை முறை இயற்கையின் வியப்பூட்டும் அதிசயங்களில் ஒன்று. இவை வான்கோழியுமல்ல, கோழியினத்தைச் சார்ந்தவையும் அல்ல. அப்படி என்றால் இந்த பறவை எது? ஆஸ்திரேலிய புதர்க்கோழி குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி 01.07.2026 5:29
உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, Round of 16 என்ற சுற்றுக்கு முன்னேறியது, அதே நேரத்தில் சூப்பர்ஸ்டார் முன்கள வீரர்களான Erling Haaland மற்றும் Kylian Mbappé இருவரும் ஆளுக்கு இரண்டு கோல்களை அடித்து நார்வே மற்றும் பிரான்ஸை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்கின்...
கொழும்பு – மெல்பன் விமான சேவைகளை விரிவுபடுத்தும் SriLankan Airlines 01.07.2026 2:24
ஆகஸ்ட் 2 முதல் கொழும்பு – மெல்பன் இடையிலான விமானசேவைகளை அதிகரிக்கவுள்ளதாக SriLankan Airlines அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
உறவுகளை சீரழிக்கும் நார்சிஸ்ட் உங்களை சுற்றி இருக்கிறாரா? அவரை அடையாளம் காண்பது எப்படி? 01.07.2026 12:29
Narcissistic Personality Disorder என்பது ஒருவருக்கு தன்னை மிக உயர்வாக எண்ணுதல், பிறரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் கருணை குறைவு மற்றும் எப்போதும் பாராட்டை எதிர்பார்ப்பது போன்ற தன்மைகளால் வெளிப்படும் ஒரு மனநலக் கோளாறு என கூறப்படுகிறது. Narcissistic Personality Disorder (NPD) என்றால் என்ன? NPD உள்ளவர்களின் பண்புகள் என்ன ? அவர்களை கையாளும் சில யுத்திகள் குறித்து உரையாடுகிறார் சிட்னியில் உள்ள உளவியல்...
AI - செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பாக பயன்படுத்த ஆளுகை ஏன் அவசியம்? 01.07.2026 15:56
AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று பல நிறுவனங்களின் அன்றாடப் பணிகளில் வேகமாக நுழைந்து வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு ஆளுகை இல்லாமல் பல நிறுவனங்கள் இயங்கும் பின்னணியில், AI-ஐ பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த என்ன மாதிரியான ஆளுகை தேவை? AI முடிவுகள் தவறாக இருந்தால் யார் பொறுப்பு? உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள் குறித்து விளக்குகின்றனர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் முனைவர்...
இலங்கை: ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை 01.07.2026 8:36
ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இன்றைய செய்திகள்: 01 ஜூலை 2026, புதன்கிழமை 01.07.2026 3:35
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.