SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
வயது வேறுபாடின்றி, பெருமை சேர்க்கும் சிட்னி பெண்கள் 05.03.2026 13:50
அனைத்துலக பெண்கள் நாள் - International Women's Day, 2023ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் SydWest பல்கலாச்சார சேவை இணைந்து, Blacktown நகரில் கொண்டாடிய ‘பெண்கள் தின’ விழாவில் கௌரவிக்கப்பட்ட கேஷிகா அமிர்தலிங்கம் மற்றும் காயா ராஜேஷ் ஆகியோரது கருத்துகளுடன் நாம் ஒலிபரப்பிய நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது. 2023ஆம் ஆண்டு நிகழ்ச்சியைத் தயாரித்தவர், குலசேகரம் சஞ்சயன்.
அடுக்குமாடி குடியிருப்பிலும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவி 05.03.2026 10:46
IMPLUX காற்று விசை சுழலி பல மாடி கட்டிடங்கள் மீது பொருத்தி சுத்தமான மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு புதுமையான கருவி. இக் கருவி தன்மீது வீசும் காற்றை உள்வாங்கி அதனை வெளியில் விடாமல் அக்காற்றை ஒரு சுழலிக்கு அனுப்பி மின்சாரமாக உற்பத்தி செய்கிறது. இக்கருவியை கண்டுபிடித்தவர் இலங்கையில் பிறந்து தற்பொழுது சிட்னியில் வசித்து வரும் திரு சுரேஷன் வாகீஸ்வரன். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
செய்தியின் பின்னணி: நாட்டின் பொருளாதாரம் (வி)வேகமாக வளர்கிறதா? ஆஸ்திரேலிய குடும்பங்கள் மீதான தாக்கம் என்ன? 05.03.2026 8:40
நாட்டின் பொருளாதாரம் ‘அதிரடி வேக’ வளர்ச்சியைக் காட்டும் அதே நேரத்தில் வீட்டு விலைகளும் பல நகரங்களில் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இன்னொரு பக்கம் - மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளதால், எண்ணெய் விலையேறப்போகிறது. இவையெல்லாம் விலைவாசி உயர்வு (inflation) மற்றும் வட்டி விகிதம் (interest rate) குறித்த முடிவுகளை மேலும் சிக்கலாக்குகிறது. இது குறித்த செய்திகளின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்ச...
இன்றைய செய்திகள்: 05 மார்ச் 2026 - வியாழக்கிழமை 05.03.2026 4:07
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
'Home Across Horizon' - சிறுகதை தொகுப்பு 04.03.2026 12:39
Indian Literary and Art Society of Australia சிட்னியில் வெளியிடும் “Home Across The Horizon” ஆங்கில சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் சிறுகதை எழுதி பங்களித்துள்ள இரண்டு எழுத்தாளர்கள் உமா சீனிவாசன் மற்றும் சுமதி கிருஷ்ணன் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 04 மார்ச் 2026, புதன்கிழமை. 04.03.2026 3:28
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: இரவு பகலாக எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் 03.03.2026 8:36
அரசின் அறிவிப்பினையும் மீறி பல பகுதிகளிலும் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
செய்தியின் பின்னணி: மத்திய கிழக்கு மோதல் சர்வதேச விமானப் பயணங்களை எவ்வாறு பாதித்துள்ளது 03.03.2026 7:25
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை உலகளாவிய ரீதியில் விமானப்பயணிகளுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஈரான் மீதான தாக்குதல் : பெட்ரோல் விலை இன்னும் உயருமா? 03.03.2026 2:55
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் காரணமாக சற்று உயர்ந்துள்ள பெட்ரோல் விலை மேலும் உயருமா என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
முன்னாள் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ஆஸ்திரேலியாவில் குடியேறுகிறார் 03.03.2026 2:28
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் Jacinda Ardern ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 03 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை 02.03.2026 4:59
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
சிட்னியில் சட்டவிரோத மதுபான இறக்குமதி : இரு இந்தியர்களின் விசா ரத்து 02.03.2026 3:23
சிட்னியில் சட்டவிரோதமாக மதுபான இறக்குமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
What lies beneath Keeladi: The uneasy politics of India’s past - கீழடிக்குக் கீழே புதைந்திருப்பது என்ன? இந்திய அரசியலைக் கலங்கடிக்கும் கடந்தகாலம் 02.03.2026 19:19
Since its discovery in 2014, the Keeladi excavation near Madurai has emerged as one of India’s most contested archaeological sites – celebrated by some as evidence of an early urban civilisation in South India, and dismissed by others as an exercise in political mythmaking. In her latest book, The Dig: Keeladi and the Politics of India’s Past, journalist Sowmiya Ashok traces the accidental unearth...
இன்றைய செய்திகள்: 02 மார்ச் 2026 - திங்கட்கிழமை 02.03.2026 4:32
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலிய சர்வதேச மாணவர்களை பாதுகாக்க ஒரு புதிய இணையதளம் 01.03.2026 7:20
ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க உதவும் வகையில், புதிய இணையதளம் மற்றும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டார் – ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு மீண்டும் ஏறுமா? 01.03.2026 13:05
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மற்றும் அரசு தொலைக்காட்சி உட்பட பல அதிகாரப்பூர்வ உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணியில், ஈரானின் எதிர்காலம் என்ன என்று Arab News என்ற பத்திரிகையின் ம...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 28 பெப்ரவரி 2026) 27.02.2026 6:32
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22– 28 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.
சமூகத்தில் வாழ்ந்த புகலிடக் கோரிக்கையாளர் திலீவரன் தடுப்புக்காவலுக்கு சென்றது எப்படி? 27.02.2026 16:40
தற்போது Villawood தடுப்பு மையத்தில் இருக்கும் திலீவரன் பகிர்ந்து கொண்ட கருத்துகளோடு, குடியேற்ற தடுப்பு மையங்களில் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோருவோரின் நிலை குறித்தும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கும் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
செய்தியின் பின்னணி: பிரதமரை சிக்கலில் மாட்டிய ஒரு வார்த்தை 27.02.2026 7:55
பிரதமர் இந்த வாரம் கூறிய ஒரு வார்த்தை அவரை பலத்த விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 27 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை 27.02.2026 4:54
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
NSW சாலைகளில் உள்ள மொபைல் கேமராக்களில் வரும் புதிய மாற்றங்கள் 26.02.2026 2:15
NSWஇல் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய கேமரா திட்ட மாற்றத்தை முன்னிட்டு, மில்லியனுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
மறைந்தார் மக்கள் போராளி நல்லகண்ணு: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் 26.02.2026 11:08
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா்.நல்லகண்ணு அவர்கள் பெப்ரவரி 25 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 101. நல்லக்கண்ணு அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறுபதிவு இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்
உலக விருது பெறும் தமிழ்ப் பெண்மணி மனம் திறக்கிறார் 26.02.2026 11:21
ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மாக்சசே விருதுகளுக்கான 2017ஆம் ஆண்டின் வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, (அப்போது) 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும்,...
மூலதன ஆதாய வரிச் சலுகைகள்: ‘இளைய தலைமுறையினருக்குக் கொடூரமானவை’ 26.02.2026 9:05
வீட்டு வசதிகள் குறித்த செனட் விசாரணையில், வரி சீர்திருத்தத்திற்கான அவசர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய மூலதன ஆதாய சலுகைகள் பணக்கார முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ள அதே நேரத்தில் இளைய தலைமுறையினர் வீடு வாங்க முடியாமல் செய்கிறது என்று அதற்காகக் குரல் கொடுப்பவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வரிச் சலுகைகளைக் குறைப்பது வீட்டு உரிமையை நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்க சம்ம...
நாம் வீணடித்து வீசும் உணவினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுமா? 26.02.2026 13:34
வீட்டில் நாம் வீணடித்து வீசும் உணவு பொருட்களினால் நமது பணம் மட்டும் வீணாவது கிடையாது அது நமது சுற்றுசூழலையும் பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? விளக்குகிறது இந்த விவரணம். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.