SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2741 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

இன்றைய செய்திகள்: 13 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 13.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (13 November 2026 - Friday)

விக்டோரியாவில் பரீட்சைக் காலத்தில் கல்வி இணையத்தளம் மீது இணைய ஊடுருவல் 12.11.2026

விக்டோரியா மாநிலத்தில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், பரீட்சைகளை நிர்வகிக்கும் VCAA நிறுவனத்தின் இணையத்தளம் இணைய ஊடுருவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய ஊடுருவி ஒருவர் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #...

Glaucoma-கண் அழுத்த நோயைத் தடுக்க முடியுமா? 12.11.2026

பார்வை இழப்பு ஏற்படுவதில் Glaucoma என்று அழைக்கப்படும் கண் அழுத்த நோயும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தநிலையில் Glaucoma பற்றியும் அதைத் தடுக்க முடியுமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What causes glaucoma?

நீண்ட தூர கார் பயணமா? இவற்றை தெரிந்துவைத்திருப்பது அவசியம் 12.11.2026

விடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் மற்றும் மெல்பனில் வசிக்கும் கந்தையா குமாரதாசன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Before a long drive: What eve...

இந்த தடகள சாதனைப் பெண் - காலணி அணிவதில்லை, வயது ஒரு எல்லையில்லை 12.11.2026

பிலிப்பைன்ஸ் இல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரை நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி சிறீசேயாநந்தபவன் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தில் வென்றார். அப்போது 72 வயதாகியிருந்த இவர்...

850 வேலைகள் இந்தியாவுக்குப் பறக்கின்றன - Qantasஸின் பணியிடக் குறைப்பு 12.11.2026

‘Spirit of Australia’ – ‘ஆஸ்திரேலியாவின் ஆன்மா’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நம் விமான நிறுவனம் Qantas தனது அலுவலகப் பிரிவுகளில் சுமார் 850 பணியிடங்களைக் குறைத்து, அந்தப் பணிகளில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Qantas jobs take flight - 850 roles head to India

இன்றைய செய்திகள்: 12 நவம்பர் 2026 - வியாழக்கிழமை 11.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (12 November 2026 - Thursday)

பாத்திரம் கழுவத் தேவையில்லை - Airbnb-இன் புதிய விதிகள் 11.11.2026

விடுமுறை முடிந்து புறப்படும் காலை. விமானத்துக்கு நேரமாகிறது. ஆனால் நீங்களோ பாத்திரங்களைக் கழுவி அடுக்குகிறீர்கள், படுக்கை விரிப்புகளைக் கழற்றுகிறீர்கள், குப்பைப் பையுடன் தெருவுக்கு ஓடுகிறீர்கள். அதுவும், சுத்தம் செய்யும் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகு. Airbnb-இல் தங்கியவர்களுக்கு இது பழக்கமான காட்சி. ஆனால் இது மாறப்போகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி முதல், Airbnb உலகம் முழுவதும் புதிய (House Rules)...

அரசு முன்மொழிந்துள்ள இரு சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு 10.11.2026

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் என அரசால் முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு.இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Strong opposition to two proposed laws in Sri Lanka

இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2026, புதன்கிழமை 10.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (11 November 2026 - Wednesday)

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி? 10.11.2026

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம், அதாவது PR, பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்களா? உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்வதற்கான அழைப்பு - Registration of Interest, நவம்பர் 6 முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தால் ஏற்கப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Live regional, head for PR - Queensland's 491 explained

பாதுகாப்பு விசா நிராகரிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கட்டாயக் கட்டணம்! 10.11.2026

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர், அவர்களது பாதுகாப்பு விசா நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Asylum seekers face $1,863 upfront fee to challenge visa refusals

இன்றைய செய்திகள்: 10 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 10.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (10 November 2026 - Tuesday)

கண் முன்னே ஒரு கள்ளச்சந்தை - பணத்துக்கு விற்கப்படும் Demerit points 09.11.2026

Demerit points எனப்படும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் விழும் தண்டப் புள்ளிகளைப் பணம் கொடுத்து நீக்கி விடலாம் என்று சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்திருக்கிறது. அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதில் சிக்கினால் என்ன நடக்கும் என்பதன் செய்தியின் பின்னணியையும் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 'We'll wipe your points' - the offer that could cost you your...

இன்றைய செய்திகள்: 09 நவம்பர் 2026 - திங்கட்கிழமை 08.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (09 November 2026 - Monday)

16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சவால் 08.11.2026

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் ஊடகத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast Australia’s social media ban faces high court challenge

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 08.11.2026

தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்; தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் கோவை பெரியார் அறிவுலகம் நூலக புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரம்; மணல் குவாரி முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு விரைவில் சம்மன்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 day...

"பெயர் உங்களதாக இருக்கலாம், ஆனா நிலம் எப்போதும் எங்களது தான்!" 07.11.2026

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01 நவம்பர் – 07 நவம்பர் 2026) 07.11.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (01 நவம்பர் – 07 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (01 November – 07 November 2026)

யாருடைய அறியாமை? சொல்லப்படாத தீபாவளியின் கதை 06.11.2026

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தீபாவளித் திருவிழாக்கள் சிலவற்றில், இராவணனின் பிரம்மாண்டமான உருவ பொம்மை எரிக்கப்படுவதோடு அந்த இரவு நிறைவடைகிறது. பலருக்கு இது தீயவற்றின் மீது நன்மைகள் பெற்ற வெற்றியைக் குறிக்கும் மகிழ்ச்சியான அடையாளமாகும். ஆனால், பல தமிழ் மற்றும் இலங்கை வம்சாவளி ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, இது போற்றத்தக்க ஒரு மன்னன் எரிக்கப்படுவதாகவே அமைகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் கு...

இன்றைய செய்திகள்: 06 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 05.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (06 November 2026 - Friday)

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 31– நவம்பர் 06, 2026) 05.11.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 31 – நவம்பர் 06 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 31 – November 06, 2026)

உடல் எடை குறைப்பில் புதிய மாற்றம் – புதிய வடிவில் வெகோவி 05.11.2026

ஆஸ்திரேலியாவில் உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெகோவி (Wegovy) மருந்து மாத்திரை வடிவில் கிடைப்பதற்கு Therapeutic Goods Administration (TGA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new era in weight loss – Wegovy in a new form

வீழ்ச்சியில் David Jones - நடந்தது என்ன? ஊழியர்கள், Gift Cards வைத்திருப்போரின் நிலை? 05.11.2026

188 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் பிரபல David Jones நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சுமார் 6,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast David Jones in Crisis: Customers rush to spend gift cards as David Jones goes into adm...

உறவுகளின் நினைவுகளோடு… புதிய உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் தீபாவளி 05.11.2026

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உறவினர்களைப் பிரிந்து, ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவங்கள் எப்படிப்பட்டவை? சிட்னியில் North Kellyville-இல் வசிக்கும் தம்பதியனர் ஹரிஹரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜனனி ஹரிஹரன் இருவரும் தங்கள் உறவுகள் தொலைவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தாங்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம், புதிய குடும்பப் பாரம்பரியங்களை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து செல்வி இன்பச...

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.