SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

யார் டெஸி ஃப்ரீமன்? காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? 01.04.2026

விக்டோரிய மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய மனிதவேட்டைகளில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம் முதல் தேடப்பட்டு, பிடிக்க உதவினால் 10 இலட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த டெஸி ஃப்ரீமன், திங்கட்கிழமை (30 March) காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த சிறிய நகரமான போர்பங்காவில் காவல்துறை அதிகாரிகள் நீல் தாம்சன் மற்றும் வடிம் டி வார்ட்-ஹொட்டார்ட் ஆகியோரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ஃப்...

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் கூறியது என்ன? 01.04.2026

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க ஆஸ்திரேலியர்கள் எவ்வாறு உதவலாம் என்பதை பிரதமர் Anthony Albanese விளக்கியுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலிய வானில் தோன்றவுள்ள ‘Pink நிலா’ 01.04.2026

ஆஸ்திரேலிய வானில் ‘சூப்பர் பிங்க் மூன்’ காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழக தேர்தல் களம் – 1 ஏப்ரல் 2026 01.04.2026

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

சட்டம்: Australian Federal Police-ஐ எப்போது, எப்படி தொடர்புகொள்வது? 01.04.2026

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் Australian Federal Police-AFP தொடர்பில் அறிந்துகொள்வோம். இந்நிகழ்ச்சியில் இணைந்துகொள்கிறார்கள் AFPஐச் சேர்ந்த Dean Reynolds, Anisha Sharif மற்றும் விக்டோரிய காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்! 01.04.2026

SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

இன்றைய செய்திகள்: 01 ஏப்ரல் 2026, புதன்கிழமை 01.04.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: இனப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் கட்சிகள் இணைகின்றன 31.03.2026

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள குழு நியமனம்; இணைந்து வரும் தமிழ் கட்சிகளிடையே இணக்கம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

செய்தியின் பின்னணி: அரசின் வரிக் குறைப்பால் பெட்ரோல் விலை எவ்வளவு குறையும்? 31.03.2026

நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு fuel excise- எரிபொருள் மீதான வரியை பாதியாகக் குறைத்துள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Anna Henderson மற்றும் Sydney Lang எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்

மெல்பன் நகரத்தில் உருவாகிறது புதிய 'Little India'! 31.03.2026

மெல்பன் நகரத்தில் “Little India” கலாசார மையத்தை அமைப்பதற்கு மெல்பன் City Council நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நகரங்களை விட்டு பிராந்தியங்களுக்கு குடிபெயரும் ஆஸ்திரேலியர்கள்: காரணம் என்ன? 31.03.2026

ஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து முக்கிய தலைநகரங்களை விட்டு பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 31 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை 30.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 31/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

செய்தியின் பின்னணி: உயரும் பெட்ரோல் விலை – ஈஸ்டர் விடுமுறை பயணத் திட்டங்களை மாற்றுகிறதா? 30.03.2026

அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மற்றும் தொலை தூர இடங்களுக்குப் பயணிக்கும் போது அது போதியளவில் கிடைக்குமா என்பது குறித்த அச்சம் காரணமாக, வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறையின் போது பலர் நீண்ட தூர கார் பயணத் திட்டங்களைக் கைவிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிலர் பயணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். வேறு சிலர் பயணத்திட்டத்தைச் சுருக்குகிறார்கள். இன்னும் சிலர், மிகக் கவனமாகப் பயணிக்கிறார்கள். இது குறித்த செய்திய...

ஆஸ்திரேலியா அறிவோம்: டிங்கோ வேட்டை நாய் 30.03.2026

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய காட்டு நாய் டிங்கோ. அதிபயங்கரமாக வேட்டையாடும் நாய் என்றும், பூர்வீக குடி மக்களின் கலாச்சாரத் துணை என்றும், சிலருக்குச் சர்ச்சைக்குரிய Pest என்றும் அறியப்படுகின்ற, ஆஸ்திரேலியாவின் சின்னமான டிங்கோவைப் பற்றிய சிறப்பு தரவுகளைக் கொண்டு வருகிறார் உயிர்மெய்யார்.

இன்றைய செய்திகள்: 30 மார்ச் 2026 - திங்கட்கிழமை 30.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலத்தவர்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து சலுகை 29.03.2026

மத்திய கிழக்குப் போரின் தாக்கத்தால் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய மாநிலங்கள் இலவச பொதுப் போக்குவரத்து குறித்து வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (22 – 28 மார்ச் 2026) 28.03.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22 – 28 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

How public and community housing works in Australia - Social housing: குறைந்த செலவில் உங்களுக்கான வீடொன்றைப் பெறுவது எப்படி? 27.03.2026

In Australia, government-subsidised rental housing is available for eligible households. Assessment is based on need under criteria that vary depending on your state or territory. Here’s what to expect when applying for different types of housing assistance, some common myths around social housing and where to reach out for help. - ஆஸ்திரேலியாவில் நீண்டகால அடிப்படையில் வாடகை வீடொன்றைப் பெற்றுக்கொள...

உலக மேடையில் இந்திய குரல்: FIFA உதவி நடுவர் டோனி ஜோசப் லூயிஸ் 27.03.2026

டோனி ஜோசப் லூயிஸ் அவர்கள், 2016 முதல் சர்வதேச அளவில் திறமையான FIFA உதவி நடுவராக பணியாற்றிவருகிறார். துல்லியமான முடிவுகள் மற்றும் நிலையான செயல்திறன் மூலம் பல சர்வதேச போட்டிகளில் பணியாற்றி, உலக கால்பந்து சமுதாயத்தில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பயணம், அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் போன்ற பல விடயங்களை அவர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன...

தமிழ்த் தடம்: ஒளவையார்கள் 27.03.2026

தமிழ் இலக்கிய மரபில் ஔவையார்களின் பங்களிப்புகள் குறித்த தகவலை முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.

செய்தியின் பின்னணி: E10, E15, E20 போன்ற எதனோல் எரிபொருள்: மலிவான மாற்றுத் தீர்வா? 27.03.2026

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை பொதுமக்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்கான மாற்றுத் தீர்வாக எதனோல் கலந்த பெட்ரோல் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது உண்மையில் பெட்ரோல் விலையைக் குறைக்குமா என்பதே தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 27 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை 26.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியா அறிவோம்: Tasmania, பெருந்தீவில் ஒரு குட்டித் தீவு! 26.03.2026

ஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலம் டாஸ்மேனியா. இலங்கையை விடவும் சற்றே பெரிய தீவான டாஸ்மேனியா சுமார் 64,000 சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் 26-வது பெரிய தீவாக உள்ளது. இந்த தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய இளைஞர் மரணம் 26.03.2026

விக்டோரியாவின் Bendigo அருகில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பின்னணி கொண்ட இளைஞர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

விக்டோரியர்களுக்கு தினமும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம்! 26.03.2026

விக்டோரியாவில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.