SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இன்றைய செய்திகள்: 14 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை 13.04.2026 3:50
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
மெல்பன் தமிழ் சந்தை: வணிகமும் கலாச்சாரமும் இணையும் பெருவிழா! 13.04.2026 10:38
Australian Tamil Chamber of Commerce - Victorian Chapter ஏற்பாட்டில் 'மெல்பன் தமிழ் சந்தை' விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் வேல்-Executive Vice President மற்றும் திருமலை செல்வி சண்முகம்-Vice President of Membership ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
மின்சார மிதிவண்டிகள் (e-Bikes) வரமா சாபமா? 13.04.2026 10:41
நம் நாட்டின் சாலைகளில் மின்சார மிதிவண்டிகள் – e-Bikeகளின் பாவனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர், எரிபொருள் விலை மீது நேரடித்தாக்கம் செலுத்துகிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஒரு வழியாக, மக்கள் வாகனங்களை ஓட்டுவதை விடுத்து மின்மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிகரிக்கும் e-Bikeகள் சாலைப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இந்த மின்ம...
செய்தியின் பின்னணி: அமெரிக்கா – ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தைகள் - உடன்பாடு ? 13.04.2026 9:19
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான, இருபத்தொரு மணி நேரம் நீடித்த, பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உயரும் வட்டி விகிதங்களை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது மிகவும் விரும்பத்தகாத செய்தி. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 13 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை 13.04.2026 4:32
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
‘திராவிட முன்னேற்றக் கழகம் சவாலை சமாளிக்கும், களத்தில் வெல்லும்’ - பேராசிரியர் ரவீந்திரன் 12.04.2026 11:05
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பின்னணியில் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து கலந்துரையாடுகிறார் அண்மையில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 – 11 ஏப்ரல் 2026) 11.04.2026 5:38
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (5 – 11 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
தீ அபாயம்: ஆயிரக்கணக்கான வாகனங்களை திரும்பப்பெறும் Hyundai 10.04.2026 2:16
Hyundai நிறுவனம் ஆஸ்திரேலியாவில் சுமார் 5,000 மின் வாகனங்களுக்கு recall-திரும்பப்பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Chasing Dreams in Baggy Green: Nitesh Samuel’s Cricket Journey - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழனின் கதை 10.04.2026 17:17
Nitesh Samuel is a rising Australian U19 opening batsman from NSW, known for his heavy run-scoring in national championships and selection for the 2026 U19 World Cup. With strong technique and temperament, he’s considered one of the promising young players coming through Australia’s cricket system. Nitesh shares his experience and future goals with Praba Maheswaran. - ஆஸ்திரேலியா Under-19, உலகக்கோ...
செய்தியின் பின்னணி: ஆப்கான் போர்க் குற்றங்கள் - ஆஸ்திரேலியாவின் வேறுபட்ட அணுகுமுறை 10.04.2026 6:57
ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முறையில், ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை அதன் முக்கிய கூட்டாளிகளிலிருந்து வேறுபட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் பெற்ற முன்னாள் வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது, இந்த விசாரணைகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், ஆஸ்திரேலியாவின் தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துவதாகவு...
இன்றைய செய்திகள்: 10 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை 10.04.2026 5:06
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
தமிழ்நாட்டில் தந்தை & மகன் கொலை வழக்கில் 9 காவலர்களுக்கு தூக்குத் தண்டனை! 09.04.2026 8:14
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை & மகன் காவல் நிலைய படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை தூக்குத்தண்டனை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஆஸ்திரேலிய விசா விண்ணப்பத்தில் இழைத்த தவறினால் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பெண் 09.04.2026 2:34
தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பெண் ஒருவர் விசா விண்ணப்பம் தொடர்பில் இழைத்த தவறொன்றினால் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியா அறிவோம்: நமது விளையாட்டு அணிகளின் செல்லப்பெயர்கள் தெரியுமா? 09.04.2026 9:58
ஆஸ்திரேலியா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. விளையாட்டு என்பது மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் கலந்த ஒன்று. ஆஸ்திரேலியாவின் பல விளையாட்டு அணிகள் நமக்கு தெரியும். ஆனால் இந்த விளையாட்டு அணிகளுக்கு தரப்பட்டிருக்கும் செல்லப்பெயர்கள் தெரியுமா? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சிவழி விவரிக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
மொபைல் பேசியதால் சிறுவன் உயிரிழப்பு! தண்டனை போதுமானதல்ல என்கிறது குடும்பம் 09.04.2026 5:10
Bryson Dimovski என்ற 14 வயது சிறுவன் உயிரிழக்க காரணமான ஓட்டுநருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு Bryson Dimovski குடும்பத்தை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து குறித்தும், நடைபெற்ற விசாரணை, அளிக்கப்பட்ட தீர்ப்பு என்றும் பல அம்சங்கள் குறித்தும் விளக்குகிறார் உயிர்மெய்யார்.
நீங்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா? 09.04.2026 7:54
முதுகுவலி என்பது நம்மை அடிக்கடி பாதிக்கும் ஒரு பிரச்சினையகும். இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.
மன்னார் மண்ணில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தேடல் சர்ச்சையாகிறது 09.04.2026 15:21
இலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னார் தீவிலிருந்து ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணலைத் தோண்டியெடுக்கத் திட்டமிடுகிறது. இது குறித்து Bridging Lanka என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Jeremy Ahamed Liyanage மற்றும் அதில் பணியாற்றும் றோஜன் ஆகியோரது கருத்துகளுடன் 2020ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் படைத்த விவரணம் இது. இல்மனைட் சுரங்கங்கள் மன்னார் தீவில் அமைக்கப்படுவது குறித்து...
செய்தியின் பின்னணி: பெட்ரோல் நிலையங்கள் திட்டமிட்டே விலையை உயர்த்துகின்றனவா? மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? 09.04.2026 10:34
நாட்டில் பெட்ரோல் நிலையங்கள் திட்டமிட்டே விலையை உயர்த்துகின்றனவா? ஆஸ்திரேலிய மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார் றைசெல்.
இன்றைய செய்திகள்: 9 ஏப்ரல் 2026 வியாழக்கிழமை 09.04.2026 5:33
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 9/04/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
வெளிநாட்டு மருந்துகளுக்கு அமெரிக்காவின் 100 சத வரி அறிவிப்பு ஆஸ்திரேலியாவை பாதிக்குமா? 08.04.2026 8:18
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதம் வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது ஆஸ்திரேலிய மருந்து நிறுவனங்கள், மற்றும் ஆஸ்திரேலியர்கள் மலிவாக மருந்துகள் வாங்கும் திட்டமான PBS திட்டத்தை பாதிக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இது குறித்து விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
சூதாட்ட விளம்பரங்களுக்கான அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் எப்படி இருக்கும்? 08.04.2026 8:23
ஆஸ்திரேலியாவில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சூதாட்ட விளம்பரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். ஆஸ்திரேலிய வரலாற்றில் சூதாட்டம் தொடர்பான மிக முக்கியமான சீர்திருத்தம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலர் இது போதாது என்று விமர்சிக்கிறார்கள். என்னென்ன புதிய கட்டுப்பாடுகள்? ஏன் இந்தத் தடைகள்? ஊடகங்கள் தரும் செய்திகளை விளக்குகிறார் உயிர்மெய்யார்.
சிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு விழா! 08.04.2026 11:02
சிட்னி தமிழர் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் சிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு விழா ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை NSW மாநிலத்தின் Merrylands, Pitt Street யில் அமைந்துள்ள Holroyd Gardens எனுமிடத்தில் நடைபெறுகிறது. இது குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: ஜேம்ஸ் வடிவேலு சுகுமார் மாறும் ஞானமகள் அசோகன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
தமிழக தேர்தல் களம் – 8 ஏப்ரல் 2026 08.04.2026 8:40
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 08 ஏப்ரல் 2026, புதன்கிழமை 08.04.2026 3:17
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: ஏற்றம் காணும் விலைகள், திண்டாடும் மக்கள் 08.04.2026 8:30
மத்திய கிழக்கு யுத்த நிலையை அடுத்து பிற நாடுகளைப் போலவே இலங்கையிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.