ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Author
ODB India Tamil
Category
Podcast website
Latest episode
Jul 4, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தேவன் காயங்கட்டுகிறார் 18.11.2021 4:18
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசியர் 2:8 தேவனே, என் மீது இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருந்ததற்காக நன்றி! கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு, உம்மிலும் உம்முடைய இரட்சிப்பிலும் நான் மேன்மைப்பாராட்ட எனக்கு உதவிசெய்யும்.
ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதும் 17.11.2021 3:27
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய் ; நானும் உன்னைச் சிநேகித்தேன். ஏசாயா 43:4 பரலோகப் பிதாவே, நீர் என்னை நேசிக்கிறீர், ஏற்றுக்கொண்டீர், மகிழ்விக்கிறீர் என்பது எனக்கு தெரியும். என்னை உம்முடைய பிள்ளையாய் ஏற்றுக்கொண்டதற்காகவும், நிபந்தனையில்லாமல் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவும் உமக்கு நன்றி.
நம் மெய்யான அங்கீகாரம் 16.11.2021 4:20
அப்பொழுது இயேசு... “பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்றார். லூக்கா 5:10 தகப்பனே, என்னுடைய மெய்யான அங்கீகாரத்தை அறியமுடியாமல் நான் தடுமாறும்போது உம்மைப் பின்பற்றி, உம்மில் என்னுடைய அங்கீகாரத்தை அறிந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.
உம் பிரசன்னத்தில் தங்கியிருக்க! 15.11.2021 4:02
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்... நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். சங்கீதம் 27:4 தகப்பனே, நீரே என் விருப்பமும் என் மகிழ்ச்சியுமானவர். எந்த தடங்கலும் தடையுமில்லாமல் உம்மை நான் ஆராதிக்க விரும்புகிறேன்.
வல்லமையுள்ளதும் நேசிக்கக்கூடியதும் 13.11.2021 4:20
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள் ; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. உபாகமம் 4:11 தேவனே, நான் அதிகம் எதிர்பார்த்து, உம்மை சாதாரணமாய் கருதினேன். உம்முடைய பொறுமைக்காக நன்றி. உம்முடைய அன்பிற்காகவும் நன்றி.
யாராலும் பிரிக்கமுடியாது 12.11.2021 4:38
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? ரோமர் 8:36 பரலோகப் பிதாவே, உம்முடைய அன்பை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள என் கண்களையும் இருதயத்தையும் திறந்தருளும். உம்முடைய அன்பு ஒன்றே என் வாழ்க்கைக்கு போதுமானது என்பதை நான் உணர எனக்கு உதவி செய்யும்.
தேவனின் ஆச்சரியமான படைப்பு 11.11.2021 4:40
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. யோபு 38:4 அன்பான தேவனே, இத்தகைய அற்புதமான, மாறுபட்ட, அழகான உலகத்தை சிருஷ்டித்தமைக்காக நன்றி. உம்முடைய படைப்புத்திறனை உணரவும் அனைத்தும் உம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதை அறியவும் எனக்கு உதவிசெய்யும்.
நற்செய்தி 10.11.2021 4:24
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம். அப்போஸ்தலர் 13:32-33 இயேசுவே, என்னுடைய மீட்பரே, உம்முடைய நீதியான ஆளுகைக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.
நீங்கள் தனியாய் இல்லை 09.11.2021 5:00
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும்… ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன். 1 இராஜாக்கள் 19:18 அன்பான தேவனே, உமக்கு ஊழியம் செய்யும்போது நான் தனிமையாய் உணரும் தருணத்தில், உமக்கு செய்யும் ஊழியத்தில் என்னோடு மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை எனக்கு நினைவுபடுத்தும்.
இயேசுவின் உண்மையான சீஷன் 08.11.2021 4:03
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். யோவான் 15:5 இயேசுவே, திராட்சைச் செடியில் ஒன்றியிருக்கும் கிளைபோல உம்மோடு ஒன்றியிருக்க விரும்புகிறேன்.
திரளான ஜனங்கள் 08.11.2021 3:49
இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... நிற்கக்கண்டேன். வெளிப்படுத்தின விஷேஷம் 7:9 ஆட்டுக்குட்டியானவரே, நீர் இந்த உலகத்தின் பாவத்தையும் என்னுடைய பாவத்தையும் நீக்கிவிட்டீர். பரலோகத்தின் இந்த கலியாணவிருந்துக்கு எனக்கு அழைப்பு கொடுத்ததற்காக நன்றி.
தேவனை துதித்து பாடு 07.11.2021 3:02
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1 நாளாகமம் 16:8 சிருஷ்டி கர்த்தாவே, எல்லா நாமங்களுக்கு மேலாக உம்மை உயர்த்துகிறோம். நீர் துதிகளுக்கு பாத்திரர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம்.
இயேசுவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் 06.11.2021 4:35
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து... கொலோசெயர் 3:17 தகப்பனே, நான் கிறிஸ்துவை தெளிவாய் பிரதிபலிக்காததற்காக என்னை மன்னியும். உம்முடைய நாம மகிமைக்காகவும் கிறிஸ்துவின் நாம மகத்துவத்திற்காகவும் நேர்த்தியான ஆடையை அணிந்துகொள்ள எனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தாரும்.
துக்கத்தின் சொற்களஞ்சியம் 05.11.2021 3:42
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். லூக்கா 23:46 அன்பான பரலோகப் பிதாவே, என்னுடைய தகப்பனாய் இருப்பதற்காகவும், என்னை உம்முடைய பிள்ளையாய் ஏற்றுக்கொண்டதற்காகவும் நன்றி.
மாயையில் மகிழ்ச்சியைத் தேடுதல் 04.11.2021 5:55
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பிரசங்கி 2:11 தேவனே, உம்மால் மாத்திரமே சாதாரணமானவைகளை அர்த்தமுள்ளவைகளாக்க முடியும். என்னுடைய வாழ்க்கையின் சலிப்பான தருணங்களை உம்முடைய அர்த்தம், மகிழ்ச்சி, மற்றும் ஆச்சரியத்துடன் இணையச் செய்யும்.
மழைக்காலம் 03.11.2021 5:04
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். நீதிமொழிகள் 11:25. கிருபையுள்ள தேவனே, தேவையிலுள்ளவர்களுக்கு இரங்கும் மென்மையான இருதயத்தை எனக்குத் தாரும். உம்முடைய அன்பையும் தயாள குணத்தையும் அவர்களுக்கு பகிர்ந்துகொள்வது எப்படி என்று எனக்குக் காண்பியும்.
ஆறுதல் பகிர்தல் 02.11.2021 4:57
எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். 2 கொரிந்தியர் 1:4 தேவனே, என் உபத்திரவத்தில் உம்முடைய ஆறுதலை பெறுவதற்கும் மற்றவர்களை ஆறுதல் படுத்துவதற்கும் எனக்கு உதவிசெய்யும்.
இயேசுவுக்காக மற்றவர்களை சந்தித்தல் 01.11.2021 4:05
நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி... மத்தேயு 28:19 தகப்பனே, உம்முடைய சத்தியத்தையும் அன்பையும் கொண்டு, சந்திப்பதற்கு கடினமான நபர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவான பாதையில் என்னை எடுத்து பயன்படுத்தும்.
மணியை அடி 31.10.2021 3:59
தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். சங்கீதம் 47:1 நீர் எனக்குக் கொடுத்த பல ஆசீர்வாதங்களுக்காய் நன்றி ஆண்டவரே. நீர் என்னுடைய வாழ்க்கையில் செய்யும் கிரியைக்காய், நான் கைகொட்டி, கெம்பீரசத்தத்தோடே ஆர்ப்பரிக்கிறேன்.
காலங்களை மீட்டெடுத்தல் 30.10.2021 4:43
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார். சங்கீதம் 104:19 நலமான காரியங்களை உலகத்தில் வைத்ததற்காய் நன்றி தகப்பனே. என்னுடைய ஜீவியத்தை உமக்குகந்த ஜீவபலியாய் மாற்றும்.
புதிய அழைப்பு 29.10.2021 4:53
அவர்... நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1:9 அன்பான தேவனே, உம்முடைய குமாரன் மூலமாக புதிய அழைப்பை எங்களுக்கு கொடுத்ததற்காய் நன்றி. எங்களை ஊக்கப்படுத்தி உமக்கு ஊழியம்செய்யும் பொருட்டு உம்முடைய ஆவியானவரை எங்களுக்குள் வாசம்பண்ணும்படியாக கொடுத்ததற்காக நன்றி.
நம்மேல் தேவனின் களிகூறுதல் 28.10.2021 3:28
உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, ... கெம்பீரமாய்க் களிகூருவார். செப்பனியா 3:17 நல்ல தகப்பனே, நீர் என்னைக் குறித்து கெம்பீரமாய் களிகூருகிறீர் என்ற உணர்வு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நன்றி!
தேவன் கேட்கிறாரா? 28.10.2021 3:38
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 1 யோவான் 5:14 தகப்பனே, நீர் செய்வேன் என்று சொன்னதினால், நீர் கேட்கிறீர் என்கிற நம்பிக்கையோடே உம்மிடத்தில் விண்ணப்பிக்கிறேன்.
உபத்திரவத்தின் நோக்கம் 26.10.2021 4:42
உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. யோபு 42:7 பரம வைத்தியரே, வலி மிகுந்த தருணங்களில், வேதனையை கொடுக்காமல் குணமாக்கக்கூடிய வார்த்தைகளைத் தாரும்.
பிரித்தெடுத்தல் 25.10.2021 3:39
தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்... ரோமர் 1:1 இயேசுவே, உம்முடைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் கருவியாய் என்னை வடிவமைத்ததற்காய் நன்றி. உம்மைக் குறித்து மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ள தேவையான தைரியத்தையும் அன்பையும் உம்முடைய ஆவியானவர் தந்தருளுவாராக.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.