ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Author
ODB India Tamil
Category
Podcast website
Latest episode
Jul 4, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சோதித்தல் 24.10.2021 5:09
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். ஆதியாகமம் 22:1 தேவனே, நாம் உம்மால் சோதிக்கப்படுகிற அனுபவத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் உம்மையே நாம் நம்புகிறேன். என் எதிர்காலத்தை உம்முடைய கரத்தில் ஒப்புவிக்கிறேன்.
பேசு, நம்பு, உணர்வடை! 24.10.2021 3:50
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல்... ரோமர் 8:15 அன்பான தேவனே, நான் நேசிக்கப்படாமல் போய்விடுவேனோ என்ற பயத்தில் என்னோடும் மற்றவர்களோடும் நேர்மையாய் வாழ பயப்படுகிறேன். என் இருதயத்தை மாற்றி, உம்முடைய அன்பு சாத்தியமாக்கக்கூடிய தேவ நாம மகிமைக்காய் வாழும் வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் நம்ப எனக்கு உதவிசெய்யும்.
ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் 23.10.2021 4:49
இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். லூக்கா 16:8 இயேசுவே, உமக்காக மற்றவர்களுக்கு நான் கொடுக்க விரும்புகிறேன்.
சேவை செய்ய வாழுங்கள் 22.10.2021 3:31
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். 1 பேதுரு 4:10 உண்மையுள்ள தகப்பனே, என் வார்த்தைகளின் மூலமாகவும் செயல்களின் மூலமாகவும் மற்றவர்களுக்கு சேவை செய்ய தேவையான அனைத்தையும் எனக்கு தந்தருளும்.
வேதத்தைப் படித்தல் 21.10.2021 3:50
(இயேசு சொன்னார்) என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. யோவான் 5:39 தகப்பனே, வேதத்தின் எல்லா பகுதிகளிலும் இயேசுவைப் பார்க்க என் கண்களை திறந்தருளும்.
உள்ளான உடைதல் 20.10.2021 4:08
என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். சங்கீதம் 32:5 தகப்பனே, என் பாவத்தைக் குறித்த குற்றமனசாட்சியிலிருந்து என்னை விடுதலையாக்கிய உம்முடைய மன்னிப்பிற்காய் நன்றி. மற்றவர்களுடைய பாவத்தை விமர்சிப்பதற்கு முன்பாக, என்னுடைய பாவத்தைப் பார்க்க எனக்கு உதவிசெய்யும்.
எப்போது தியாகம் செய்வது? 19.10.2021 3:20
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். கலாத்தியர் 5:22-23 பரிசுத்த ஆவியானவரே, இன்று என்னை நிரப்பி, கனியுள்ள ஒரு மனிதனாய் என்னை மாற்றும்.
பேசுகிற காலம் 18.10.2021 4:05
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு... மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு. பிரசங்கி 3:1,7 அன்பான தேவனே, என் சத்துருக்களின் பிடியிலிருந்து என் நாவையும் இருதயத்தையும் விடுவியும். இனப் பாகுபாட்டின் தீங்கை உணர என்னை பெலப்படுத்தும். அந்த பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் பேச எனக்கு உதவிசெய்யும்.
ஆவியானவரின் நடத்துதல் 16.10.2021 2:59
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். யோவான் 16:13 சத்தியத்தின் தேவனே, உம்முடைய ஞானத்தை நான் சரியாய் விளங்கிக்கொள்ளும்பொருட்டு சத்திய ஆவியானவரை சார்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.
நன்றாய் வாழ்தல் 15.10.2021 3:16
இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்;உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். பிரசங்கி 7:2 அன்பான தேவனே, வாழ்க்கையின் சொற்ப தன்மையை நினைவுகூரவும், இன்று என் வாழ்க்கையை நேர்த்தியாய் வாழவும் உதவிசெய்யும்.
உன்னைக் குறித்த தேவதிட்டம் 14.10.2021 3:29
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4 சிருஷ்டி கர்த்தாவே, நீர் என்னை உம்முடைய சாயலாக சிருஷ்டித்துள்ளீர். உம்மை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், உமக்கு ஊழியம் செய்யும்படியாகவும் என் அழைப்பை உறுதியாய் பற்றிக்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.
துவக்ககால வாழ்க்கைக் கையேடு 13.10.2021 4:40
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23 இயேசுவே, என்னை நேசித்ததற்காகவும் மன்னித்ததற்காகவும் உமக்கு நன்றி. என்னால் செலுத்தமுடியாத விலைக்கிரயத்தை நீர் செலுத்தினீர்; என்னால் வாங்கமுடியாத ஒன்றை நீர் எனக்கு பரிசாகக் கொடுத்தீர்.
நிலைநிற்கும் விசுவாசம் 13.10.2021 4:52
கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை... எரேமியா 36:1 தகப்பனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்பது கடினமாய் தோன்றினாலும் அதை இருதயத்தில் ஏற்றுக்கொள்ள உதவிசெய்யும். மீறுதலின் இருதயத்தை அல்ல, மனந்திரும்புதலின் இருதயத்தைத் தாரும்.
சிறந்த ஆசிரியர் 11.10.2021 3:44
தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்க... அவர் யாரோடே ஆலோசனைப் பண்ணினார்? ஏசாயா 40:14 இயேசுவே, நீர் எல்லாம் அறிந்தவராயிருப்பதால் உம்மை துதிக்கிறேன். நான் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீரோ அதை எனக்குக் கற்றுத்தாரும். முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்க எனக்கு உதவிசெய்யும்.
ராஜாவின் பந்தியில் 10.10.2021 4:59
ராஜ குமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான். 2 சாமுவேல் 9:11 அன்பான இயேசுவே, என்னை இரட்சித்து உம்முடைய பந்தியில் நித்தியமாய் சேர்ந்துக்கொண்டதற்காய் நன்றி. நான் உமக்கு அன்பான பிள்ளை என்பதை நினைவுபடுத்தி, உம்மை துதித்து, உம்மையே நம்பியிருக்க எனக்கு உதவிசெய்யும்.
மற்றவர்களுக்காக… 09.10.2021 4:40
போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். ரோமர் 14:20 இயேசுவே, சுவிசேஷத்தின் சத்தியத்தையும் அன்பையும் முரண்படுத்தாத வகையில் என்னுடைய உணர்வுகளுக்கு மேலாக மற்றவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்த எனக்கு கிருபை தாரும்.
தேவையானது ஞானமே 08.10.2021 4:13
மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். யாத்திராகமம் 18:24 பரலோகத்தின் தகப்பனே, என்னுடைய வாழ்க்கையில் நீர் வைத்துள்ள மக்களின் ஞானமான ஆலோசனைகளுக்கு செவிகொடுக்க எனக்கு உதவிசெய்யும்.
சாதாரணமானது ஒன்றுமில்லை 07.10.2021 5:02
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். எபிரெயர் 11:39 உண்மையான தேவனே, உம்மில் விசுவாசமுள்ள வாழ்க்கை வாழ்வது சாதாரண ஒன்றல்ல. எல்லா தருணங்களிலும் உம்மை நம்புவதற்கும், உமக்கு கீழ்ப்படிவதற்கும் எனக்கு உதவிசெய்யும்.
தற்போதைய யுத்தங்கள்! 06.10.2021 3:51
எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். பிலிப்பியர் 3:15 அன்பான தேவனே,என் கடினமான வாழ்க்கையின் பாதையில் எங்கு செல்வது என்று தெரியவில்லை. பரிசுத்த ஆவியின் துணையோடு அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுத்தாரும்.
ஒருவருக்கொருவர் உதவுதல் 05.10.2021 4:33
உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:15 தேவனே, உம்முடைய குடும்பத்தில் அங்கத்தினராயிருப்பதை நான் விரும்புகிறேன். மற்றவர்களுடைய வாழ்க்கையில் நான் எவ்வாறு பங்கடைய வேண்டும் என்பதை எனக்குக் காண்பியும்.
பள்ளத்தாக்கில் நம்மோடு 04.10.2021 3:16
பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். சங்கீதம் 23:4 என் மேய்ப்பரே, உம்முடைய உண்மைக்காகவும் தயவுக்காகவும் நன்றி! உம்மோடு நிலைத்திருக்க இன்று எனக்கு உதவி செய்யும்.
நாம் எங்கே ஆராதித்தாலும் 03.10.2021 5:53
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:23 ஆச்சரியமான தேவனே, நீர் யார் என்பதையும், உம்முடைய மகத்துவ செயல்களையும், நீர் வாக்குப்பண்ணியதையும் எண்ணி, மகிழ்ந்து, உம்மை ஆராதிக்க எனக்கு உதவி செய்யும்.
குறைகிறது 02.10.2021 4:48
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 2 கொரிந்தியர் 4:16 தகப்பனே, எங்கள் சரீரம் குறைவுபட்டாலும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையையும், எதிர்கால மகிமையையும் பார்த்து, எங்களுடைய மாம்ச போராட்டங்களை மேற்கொள்ள எங்களுக்கு உதவிசெய்யும்.
இளவயது விசுவாசம் 01.10.2021 3:44
அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். உபாகமம் 5:29 அன்பான தேவனே, எனக்கு எது நல்லது என்பதை நீர் அறிந்திருக்கிறீர் என்பதை நம்ப எனக்கு உதவிசெய்யும்.
உன்னுடைய பெயர் என்ன? 30.09.2021 4:24
அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். வெளிப்படுத்தல் 2:17 தகப்பனே, என்னை யார் என்று நீங்கள் சொல்லுகிறீரோ அதுவே நானென்று நம்புகிறேன். உம்முடைய பிள்ளையாய் வாழ எனக்கு உதவி செய்யும்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.