ODB India Tamil

Our Daily Bread Ministries Tamil

Religion TA ↓ 229 episodes

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Author

ODB India Tamil

Category

Religion

Podcast website

www.tamil-odb.org

Latest episode

Jul 4, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

நான் என்ன சொல்ல வேண்டும்? 13.12.2021

நான் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ராஜாவைப் பார்த்து...  நெகேமியா 2:4-5 அன்பான தேவனே, என்னுடைய வார்த்தைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை உம்முடைய நாம மகிமைக்காக பயன்படுத்தும். அவற்றைக் கொண்டு மற்றவர்களை ஊக்குவிக்கவும் உயிர்பிக்கவும் செய்யும்.

நியாயமான காத்திருத்தல் 12.12.2021

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்... அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.  ஏசாயா 30:18 தகப்பனே, உம்முடைய பதிலுக்காய் காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும். நீர் நல்லவர், அன்பானவர், உம்முடைய நேரமும் சித்தமுமே எப்போதும் நேர்த்தியானது என்பதை நான் அறிவேன்.

கதாநாயகர்கள், கொடுங்கோலர்கள் மற்றும் இயேசு 11.12.2021

இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 1 கொரிந்தியர் 2:2 தகப்பனே, உம்முடைய குமாரனுடைய தியாகத்தில் உம்முடைய இருதயத்தை பார்க்க எனக்கு உதவிசெய்யும்.

தேவையில் உள்ளவர்களை சந்தித்தல் 10.12.2021

உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.  உபாகமம் 15:11 இயேசுவே, என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவக்கூடிய வழியை எனக்குக் காண்பித்தருளும். எனக்கு தயாள குணத்தைத் தாரும்.

பலத்த சத்துருக்களின் கைக்கு தப்பியது 09.12.2021

என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.  2 சாமுவேல் 22:18 சர்வ மகத்துவமுள்ள தேவனே, நான் தப்புவிக்கப்படவேண்டும். நீர் எனக்கு உதவவில்லையெனில், என் வாழ்க்கை முடிந்துவிடும். தப்புவதற்கு எனக்கு வழியில்லை. ஆகையால் நான் உம்மையே நம்பியிருக்கிறேன். தயவாய் எனக்கு உதவிசெய்யும்.

ஒன்றாய் தரித்திருங்கள் 07.12.2021

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.  எபேசியர் 4:3 பரலோகப் பிதாவே, மற்றவர்களோடு சமாதானமாயிருக்க எனக்கு உதவிசெய்யும். நீர் இணைத்ததை நான் எப்போதும் பிரிக்காதிருக்க உதவிசெய்யும்.

நேர்த்தியான பெயர் 06.12.2021

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.  ஏசாயா 7:14 பரலோகப் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு என்னும் இம்மானுவேலருக்காய் நன்றி. அவருடைய பிரசன்னத்தில் நான் மகிழ்ந்து இன்று என் அன்பை பிரதிபலிக்க உதவிசெய்யும்.

உற்சாகமாய் கொடுக்கிறவர் 05.12.2021

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.  2 கொரிந்தியர் 9:7 கொடுக்கும் தேவனே, உதாரத்துவமாய் கொடுக்கிறவர்களுக்கும் அதைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களுக்கும் நிறைவான ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் உம்முடைய சுபாவத்தினால் என்னை உற்சாகமாய் கொடுக்கப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி.

வேதத்தை உதாரணப்படுத்துவது 04.12.2021

பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.  சங்கீதம் 78:4 அன்பான தேவனே, மற்றவர்கள் உம்முடைய அதியங்களைக் காணும்படி நான் வேதத்திலிருந்து கற்றுக்கொண்டவைகளை அவர்களுக்கு புரியும் விதத்தில் உதாரணப்படுத்தும் வழிகளை எனக்குக் காண்பியும்.

இன்றைய தலைமுறை 03.12.2021

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி...  2 இராஜாக்கள் 20:2 தகப்பனே, வாழ்க்கைப் பாதையில் என்னைவிட வேறுபட்டவர்களை உற்சாகப்படுத்தத் தவறினதற்காய் என்னை மன்னியும்.

மெய்யான அங்கீகாரம் 02.12.2021

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.  1 யோவான் 3:1 அன்பான தேவனே, நான் யாருடையவன் என்பதில் என்னை யார் என்று நினைவுபடுத்தியதற்காக நன்றி. நான் உம்முடையவன்.

வேற்றுமையைக் கொண்டாடுதல் 01.12.2021

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?  சங்கீதம் 133:1 பரலோகப் பிதாவே, எல்லா தேவ ஜனத்தோடும் ஒற்றுமையோடு வாழ்வதற்கு என்னுடைய பங்கை நேர்த்தியாய் செய்ய எனக்கு உதவிசெய்யும்.

நம்முடைய சபை நமக்கு தேவை 30.11.2021

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். - எபிரெயர் 10:25 பரலோகப் பிதாவே, உம்மை ஆராதிக்கவும் உம்முடைய நாமத்தை உயர்த்துவதற்கும் நான் மற்றவர்களை சந்திப்பதுபோல, உம்முடைய நாமத்தில் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் எனக்கு உதவிசெய்யும். நான் என்னைக் குறித்து சுயநலமாய் யோசித்து, மற்றவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதை எனக்கு மன்னித்தருளும்.

பெரிய ஒளி 29.11.2021

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.  ஏசாயா 9:2 தேவனே, இனி இருளில்லை. இருள் என்னை மேற்கொள்ளும் என்று சிலவேளைகளில் நான் அஞ்சுவதுண்டு. என்னுடைய பெரிய ஒளியாயிரும். உம்முடைய ஒளிரும் அன்பை என் மீது பிரகாசிக்கச் செய்யும்.

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல் 28.11.2021

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை.  தானியேல் 3:18 தேவனே, என்னை தாராளமாய் நேசித்ததற்காக நன்றி. துன்பத்தின் மத்தியிலும் உம்மை மகிழ்ச்சியோடு பின்பற்ற எனக்கு உதவிசெய்யும்.

அவமதிப்பிலிருந்து காயம் 28.11.2021

அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.  யோபு 5:7 தகப்பனே, யோபுவின் நண்பர்களைப்போல மற்றவர்களின் பாடுகள் அவர்களுக்கு அவசியமானது என்று நானும் கருதத் தூண்டப்படுகிறேன். குற்றஞ்சுமத்துகிறவனாயில்லாமல், உம்முடைய குமாரனுடைய ஆவியை தரித்தவனாய் வாழ இன்று எனக்கு உதவிசெய்யும்.

துணிச்சலான விசுவாசம் 27.11.2021

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை.  அப்போஸ்தலர் 4:12 தகப்பனே, எனக்காக நீர் செய்தவைகளுக்காய் நன்றி. என்னுடைய விசுவாசத்தை துணிச்சலாய் மற்றவர்களுக்கு பிரசங்கிக்க எனக்கு உதவிசெய்யும்.

பராக்கிரமசாலி 26.11.2021

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.  நியாயாதிபதிகள் 6:12 தேவனே, நான் என்னைப் பார்ப்பதுபோல நீர் என்னை பார்ப்பதில்லை. அதற்காக நன்றி. உமக்காக சிறியதோ அல்லது பெரியதோ, எதையும் செய்யும், உமக்கு பிரியமான பிள்ளையாய் நான் என்னைப் பார்க்க எனக்கு உதவிசெய்யும்.

நன்றியுள்ள இருதயம் 25.11.2021

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.  கொலோசெயர் 4:2 அன்பான தகப்பனே, உம்மையும் உம்முடைய ஆசீர்வாதத்தையும் நான் இலகுவாய் எடுத்துக்கொண்டதற்காக என்னை மன்னியும். நீர் எனக்கு செய்த, செய்துகொண்டிருக்கிற அனைத்திற்காகவும் உம்மை கனப்படுத்தவும் துதிக்கவும் நன்றியுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.

தேவ சித்தம் 24.11.2021

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.  சங்கீதம் 62:5 தகப்பனே, உம்முடைய சித்தத்தை எல்லா வேளைகளிலும் நான் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கீழ்ப்படிவதற்கு எனக்கு உதவிசெய்யும். உம்முடைய உண்மையான நல்ல குணாதிசயங்களை நம்புவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். கீழ்படிகிற இருதயத்தை எனக்குத் தாரும்.

நம்பிக்கையை பகிர்தல் 23.11.2021

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.  சங்கீதம் 119:11 அன்பான பிதாவே, வாழ்க்கையை மறுரூபமாக்கும் உம்முடைய ஞானத்தினால் என் இருதயத்தை நிரப்பி, உம்மைப் பற்றி மற்றவர்களுக்கு இயல்பாகவும், உண்மையாகவும், தைரியமாகவும் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.

மெய்யான ஆராதனை வீரர்கள் 22.11.2021

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்.  யோவான் 4:23 தகப்பனே, நான் எங்கு இருந்தாலும் என் மீதுள்ள உம்முடைய நிலையான கிருபைக்காக நன்றி.

லாப்ரடார் தேவதை 21.11.2021

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்.  சங்கீதம் 143:8 அன்பான, இரக்கமுள்ள தேவனே, எனக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளின் மத்தியிலும் சுகமாக்குதலை சாத்தியமாக்கியதற்காக நன்றி. அன்பில் நேசிப்பதும் மகிழ்வதும் எப்படி என்பதை எனக்குக் காண்பித்ததற்காக நன்றி. மற்றவர்களுக்கு அந்த நம்பிக்கையின் பிரதிநிதியாய் வாழ்வதற்கு எனக்கு உதவிசெய்யும்.

அவர் வெறுமையானதை நிரப்புகிறார் 20.11.2021

திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.  யோவான் 10:10 இயேசுவே, நீர் எனக்கு கொடுத்த நிறைவான, பரிபூரணமான வாழ்க்கையை நினைக்கும்போது, என்னை திருப்தியடையச் செய்யும் காரியங்கள் என்று நான் எண்ணுகிறவைகளிலிருந்து என்னை விலக்கிக் காத்தருளும்.

தொடர்ந்து போகமுடியாத போது 19.11.2021

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே... உமது உண்மை பெரியதாயிருக்கிறது.  புலம்பல் 3:22-23 தகப்பனே, உம்மை தொடர்ந்து நம்ப எனக்கு உதவிசெய்யும். உம்முடைய அன்பையும் உண்மைத்துவத்தையும் பார்க்க என் கண்களைத் திறந்தருளும்.

Listen to the Our Daily Bread Ministries Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.