SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

செய்தியின் பின்னணி: ஆஷஸ், காலத்தை கடந்து நிற்கும் கிரிக்கெட்டின் மரபுக் கதை 21.11.2025

“ஆஷஸ் (The Ashes)” என்பது கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் நடைபெறும் இப்போட்டியின் 74வது தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

‘தமிழர் தேசிய இனம் என்பதை ஏற்காதவர்களோடு இணைந்து செயல்பட நான் தயாரில்லை’ - மாத்தளை சோமு 21.11.2025

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித...

இன்றைய செய்திகள்: 21 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை 21.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

‘விருது தந்தால் வாங்குவேன்; விருதைத்தேடி போவதில்லை’ - மாத்தளை சோமு 21.11.2025

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித...

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 20.11.2025

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிபர் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு மற்றும் வடக்கு , கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் ஆதரவளிப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளுந்தரப்பு மறுப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி”நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 20.11.2025

உக்ரைனில் போர் நிறுத்தம்? அமெரிக்கா, ரஷ்யாவின் புதிய திட்டம்; காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; சூடானில் உள்நாட்டு யுத்தம்: முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் அறிவிப்பு; பிரேசிலில் COP30 மாநாடு; DR காங்கோவில் சுரங்க விபத்து: 32 பேர் பலி; நைஜீரியாவில் 25 பெண் குழந்தைகள் கடத்தல்; ஆப்பிரிக்காவில் மோசமான பாதுகாப்பு சூழ்நிலை: ஐ.நா. எச்சரிக்கை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வ...

‘வரலாறு தெரியாத சமூகமாக தமிழ் மக்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ – மாத்தளை சோமு 20.11.2025

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித...

நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா? 20.11.2025

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம்...

செய்தியின் பின்னணி : புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப அரசு படகுகள் வாங்குகிறதா? 20.11.2025

அண்மையில், Broome நகரத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு Australian Border Force (ABF) கப்பலில், மாற்றியமைக்கப்பட்ட நான்கு மீன்பிடிப் படகுகள் இருந்தன. இதன்மூலம், நாடு முழுவதும் மீன்பிடிப் படகுகளை வாங்கி மாற்றும் காமன்வெல்த் அரசு திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

அமெரிக்க அரசியலை பரபரப்பாக்கியிருக்கும் Epstein Files - பின்னணி என்ன? 20.11.2025

அமெரிக்காவில் Epstein files விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் Donald Trumpஐ தொடர்புபடுத்தி பேசப்படும் Epstein Files என்றால் என்ன, அதன் பின்னணி என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

சிட்னியில் 12 ஆவது சர்வதேச வர்த்தக மாநாடு! 20.11.2025

உலக தமிழ் வர்த்தக சபையும் (World Tamil Chamber of Commerce), Greater Cumberland Chamber of Commerce அமைப்பும் இணைந்து 12வது ஆண்டு சர்வதேச வர்த்தக மாநாட்டை சிட்னி நகரில் நடத்துகின்றன. இந்திய அரசு மற்றும் Invest NSW ஆதரவுடன் டிசம்பர் 6 & 7 ஆகிய நாட்களில் Blacktown Leisure Centre, Stanhopeயில் நடைபெறும் இம்மாநாடு குறித்து விளக்குகிறார் Greater Cumberland Chamber of Commerceயின் தலைவர் இம்மானுவேல் செல...

ஆண்களைப் பாதிக்கும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளும் தீர்வுகளும் 20.11.2025

சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆண்கள் தமது உடல்நலனில் மாத்திரமல்லாமல் மனநலனிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதற்கான உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார் மெல்பனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2025 வியாழக்கிழமை 20.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 20/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

‘அதிகாரம் என்பது ஆணுக்கு ஒரு போதை, பெண்ணுக்கு அது வலிமை’ – சல்மா 19.11.2025

ராஜாத்தி சல்மா, தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னியில் இந்தியர் மீது இனவெறித்தாக்குதல்? NSW அரசு கவலை! 19.11.2025

Parramatta Westfield Shopping மையத்தில் இந்தியப் பின்னணிகொண்ட ஒருவர் இனவெறித் தாக்குதலை எதிர்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

MiniPod: Piece of cake | Words we use - MiniPod: Piece of cake | Words we use 19.11.2025

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'a piece of cake' - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது ‘a piece of cake’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன? 19.11.2025

இறக்குமதி செய்யப்பட்ட நிறமூட்டப்பட்ட play sand விளையாட்டு மணல் தயாரிப்புகள், asbestos கலப்புடன் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அதனைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேநேரம் பல பள்ளிகளும் இதனால் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Briana Charles.

இன்றைய செய்திகள்: 19 நவம்பர் 2025 புதன்கிழமை 19.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: திருகோணமலையில் புத்தர் சிலை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை 18.11.2025

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர் மீண்டும் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை நிறுவுவதற்கு அனுமதியளித்துள்ளார்கள். இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

சிட்னி விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும் கருவிலிருந்த குழந்தையும் மரணம் 18.11.2025

சிட்னி Hornsby விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 18 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 17.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

மாறுகண்ணை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா? 17.11.2025

Crossed eyes- மாறுகண் என்பது பலரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இது ஏன் ஏற்படுகிறது என்பது பற்றியும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

‘தமிழ் சமூகம் தொழில் முனைவோரை உருவாக்க தவறியதே வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம்‘ -‘Kissflow’ சுரேஷ் 17.11.2025

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வ...

செய்தியின் பின்னணி : உணவு பொருட்கள் மீது Health Star Rating கட்டாயமாக்கப்பட வேண்டுமா? 17.11.2025

உணவு உற்பத்தியாளர்கள் 70% பொருட்களில் Health Star Rating HSR-ஐ பயன்படுத்த வேண்டும் என நான்கு ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 37% பொருட்களில் மட்டுமே HSR பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2025 - திங்கட்கிழமை 17.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice