SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

11 iul. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

Velupillay and Moutoussamy: Tamil roots at the Football World Cup - வேலுப்பிள்ளை & மொத்தூசாமி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ் வேர்கள் 17.06.2026

The Tamil-speaking world has been celebrating the news that a Tamil has earned a place in Australia's squad for this year's FIFA World Cup. But is it true? And is he really the only Tamil ever to make it into a World Cup squad? In this feature, Kulasegaram Sanchayan set out to find the answer, and to ask who the very first Tamil to do so. - இந்த ஆண்டு நடைபெறும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைக் கால்பந்...

மீள்குடியேற்றத்திற்காக 36 வருடங்களாக காத்திருக்கும் வடக்கு வலிகாமம் மக்கள் 16.06.2026

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் - வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 வருடங்களாகும் நிலையில், தம்மை மீளக்குடியேற்றுமாறு கோரி மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

100 மில்லியன் டொலர்கள் Powerball பரிசுத் தொகைக்கு சொந்தக்காரர் நீங்களா? 16.06.2026

சிட்னியில் வாங்கப்பட்ட ஒரு Powerball டிக்கெட் தற்போது ஆஸ்திரேலியாவின் மர்மங்களில் ஒன்றாக மாறியுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! 16.06.2026

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 16 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 16.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

சிட்னியில் முதல் முறையாக இந்திய மாம்பழத் திருவிழா - Mango Festival! 15.06.2026

சிட்னியில் இயங்கும் Consulate General of India - இந்திய துணைத் தூதரகத்தின் ஆதரவில், முதல் முறையாக “இந்திய மாம்பழத் திருவிழா” (Mango Festival) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு Harvey Lowe Pavillion, Castle Hill, NSW 2154 எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவின் நோக்கம் என்ன, இதில் பங்கேற்பவர்களுக்கு என்னென்ன சிறப்பு அம்சங்கள் காத்திருக்கின்றன என்பது க...

மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமர் யார்? கருத்துக்கணிப்பில் முதலிடம் பெற்றார் Pauline Hanson! 15.06.2026

ஒரு புதிய தேசியக் கருத்துக் கணிப்பின்படி மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Pauline Hanson இடம்பிடித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகக் கோப்பை தினசரி: ஜப்பான் மீண்டும் போராடும்போது ஜெர்மனி இலகுவில் வெற்றி 15.06.2026

FIFA உலகக் கோப்பை 2026 இன் நான்காம் நாள் போட்டிகளில் goalகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் பஞ்சமில்லை, ஜெர்மனியும் ஸ்வீடனும் பெரிய வெற்றிகளைப் பெற்றன, அதே நேரத்தில் ஜப்பான் நெதர்லாந்துடன் 2-2 என சமநிலையை கடைசி நேரத்தில் பெற்றுள்ளது.

தனியார் சுகாதார காப்பீடு தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை 15.06.2026

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீடு- Private Health Insurance எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பிலும், உங்கள் தேவைக்கும் பொருளாதார நிலைக்கும் ஏற்ப சரியான காப்பீட்டை தேர்ந்தெடுக்க உதவும் முக்கிய தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறார் Medibank நிறுவனத்தைச் சேர்ந்த ஜெரமையா ராஜகுமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

As women linked to ISIS return, how does Countering Violent Extremism (CVE) work in Australia? - ISIS தொடர்புடைய பெண்கள் ஆஸ்திரேலியா திரும்பிய நிலையில், CVE திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? 15.06.2026

The return of 32 women and children from Syria, who are linked to the self-proclaimed Islamic State group, has prompted concerns around community safety and discussions around mandatory Countering Violent Extremism (CVE) activities for at-risk individuals. - ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாத...

இன்றைய செய்திகள்: 15 ஜூன் 2026 -திங்கட்கிழமை 15.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/06/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

முதல் வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரியை முழுமையாக நீக்குகிறது ACT 15.06.2026

முதல் வீடு வாங்குபவர்களுக்கு ஜூலை 1 முதல் Stamp Duty முத்திரை வரியை முழுமையாக நீக்குவதாக ACT அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

மர்மங்கள் ஒரு தொடர்கதை: மெடலைனுக்கு என்ன நடந்தது? 15.06.2026

மூன்று வயது பிரிட்டிஷ் சிறுமி Madeleine McCann 18 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகலில் உள்ள ஒரு விடுமுறைக்கால தொடர்மாடி குடியிருப்பிலிருந்து காணாமல் போனார். கடந்த பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் காவல்துறை தேடுதல் நடவடிக்கை, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மெடலைன் கண்டுபிடிக்கப்படவில்லை. மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries எனும் தொடரில் இந்த சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். ந...

MiniPod: On the back foot | Words we use - சிறு வலையொலி: On the back foot | நாம் பயன்படுத்தும் சொற்கள் 15.06.2026

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'On the back foot'. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘on the back foot' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்...

உலகம்: கடந்த வார செய்திகளின் தொகுப்பு 14.06.2026

அமெரிக்கா- ஈரான் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம்?; லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகொலை; முன்னாள் தென் கொரிய அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

உலகின் முதல் Trillionaire - 1,000 பில்லியன் டாலர் பணக்காரர் - எப்படி சாத்தியமானது? 13.06.2026

உலக வரலாற்றில் முதன்முறையாக, ஒருவரின் சொத்து மதிப்பு ஒரு trillion அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அந்த சாதனையைப் படைத்தவர் தொழில் அதிபர் Elon Musk. இந்த செய்தியை விளக்குகிறார் றைசெல்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (7 – 13 ஜூன் 2026) 13.06.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (7 - 13 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

உலகக் கோப்பை தினசரி: தொடக்க நாளில் மெக்சிகோவும் கொரியாவும் வெற்றி பெற்றன 12.06.2026

மெக்சிகோவும் கொரியக் குடியரசும் தங்களது FIFA உலகக் கோப்பை 2026 பயணத்தை வெற்றிகளுடன் தொடங்கியுள்ள நிலையில், Socceroos அணி ஞாயிற்றுக்கிழமை துருக்கிக்கு எதிரான Group D தொடக்க ஆட்டத்திற்குத் தயாராகிறது.

குடிவரவு தடுப்புக் காவல்: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு 12.06.2026

ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு, நாட்டின் குடிவரவுக் கொள்கை மற்றும் அரசுக்கு எதிரான இழப்பீட்டு வழக்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Red Velvet கேக் செய்முறை! 12.06.2026

பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

Tips to manage financial stress | Fuel in Focus - நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் இலவச சேவைகள் 12.06.2026

Australia's petrol and diesel prices remain under pressure. The RBA’s decision to hike the cash rate this month is adding to the financial strain facing many households. We look at some free and independent support services that are available to help people manage financial stress. - மக்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிகம் பணம் செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ள அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்...

செய்தியின் பின்னணி: Flu, COVID, RSV - எது தாக்கியுள்ளது என்பதை எப்படி அறிவது? 12.06.2026

குளிர்காலத்தில் ஆஸ்திரேலியர்களிடையே Flu, COVID-19 மற்றும் RSV ஆகிய மூன்று முக்கிய சுவாச நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நோய்களின் அறிகுறிகள் ஓரளவு ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றின் தீவிரம் மற்றும் சிகிச்சைத் தேவைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 12 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை 12.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள பிரச்சனைகள் - பெண்களுக்கே அது பிரச்சனை என்று தெரியுமா? 12.06.2026

பெண்களுக்கு என்று உடல் மற்றும் உள ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் யாவை? அது குறித்த விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம்? பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு கிடைக்கும் சிகிச்சைகள் யாவை? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 12.06.2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றுவரும் LGBTQIA சமூகத்தின் “சுயமரியாதை நடை” உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice