SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

இன்றைய செய்திகள்: 16 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 16.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

விக்டோரியாவில் வாடகைதாரர்களை பாதுகாக்க நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டம்! 15.12.2025

விக்டோரியா மாநிலத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் சமீபதில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்கால...

இன்னொரு பாரதி! 15.12.2025

தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். நாம் பாரதி என்றழைக்கும் சுப்ரமணிய பாரதியின் நண்பர்தான் சோமசுந்தர பாரதியார். பாரதி போன்று தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தவர்தான் சத்தியானந்த சோமசுந்தரன். அவர் எப்படி சோமசுந்தர பாரதி ஆனார்? காலத்துளி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

செய்தியின் பின்னணி: தேசத்தை உலுக்கிய சிட்னி Bondi தாக்குதல்! 15.12.2025

சிட்னி Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி : உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள் தாமதமாக கிடைப்பது ஏன்? 15.12.2025

உயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் பாவனைக்கு வர சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Sydney Lang தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 15 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை 15.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 14.12.2025

இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் - 14 நாள் காவல்; திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

சிட்னி Bondi கடற்கரை தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு- 12 பேர் பலி, 29 பேர் காயம் 14.12.2025

சிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த பிந்திய செய்திகளை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னி Bondi கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி, பலர் காயம்! 14.12.2025

சிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

From Mabo to modern Australia: the ongoing story of native title - Native Title: மாபோ வழக்கு முதல் இன்றைய ஆஸ்திரேலியா வரை 14.12.2025

Australia is known around the world for its rich and diverse First Nations cultures. But when it comes to native title and land rights, you might still wonder what they actually mean. Discover what native title means in Australia, how it began with the Mabo Case, what the Native Title Act does, and why it matters for all Australians. - ஆஸ்திரேலியா அதன் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பூர்வீகக்கு...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (07 – 13 டிசம்பர் 2025) 12.12.2025

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (07–13 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

A parent’s guide to help teens adjust to social media age restrictions - சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்? 12.12.2025

Australia is restricting access to social media accounts for under-16s, and many families are wondering what it means in practice. While the rules place responsibility on tech platforms rather than young people or their parents, the changes may still create stress for teens who rely on social media to stay connected. Find out how the ban will work, why connection still matters, and how experts sug...

MiniPod: Sleep on it | Words we use - MiniPod: Sleep on it | Words we use 12.12.2025

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'sleep on it'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'sleep on it' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

செய்தியின் பின்னணி: விடுமுறையிலும் விழிப்புடன் இருங்கள் - காட்டுத்தீ ஆபத்து 12.12.2025

அடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் காட்டுத்தீ அபாயம் மேலும் அதிகரிக்கும் நிலையில், அனைவரும் வீட்டில் இருந்தாலும் விடுமுறைக்குச் சென்றாலும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 12 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை 12.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 11.12.2025

மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 11.12.2025

வெனிசுலா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா; உக்ரைன் - ரஷ்யா போர் சூழல்; புயல் பாதிப்புகளில் சிக்கியுள்ள காசா; வங்கதேசத்தில் தேர்தல்; பல்கேரியாவில் மக்கள் போராட்டம்: பிரதமர் ராஜினாமா; DR காங்கோவில் புதிய நகரை கைப்பற்றிய M23 ஆயுதக்குழு: 400 பேர் உயிரிழப்பு; சூடானிய போர் குற்றவாளிக்கு தண்டனை உள்ளிட்ட உலகச்செய்திகளின் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஷேக்ஸ்பியர் நாடகத்திற்கு தனித்துவமான இசையால் உயிர்கொடுக்கும் அர்ஜுனன் புவீந்திரன்! 11.12.2025

சேக்ஸ்பியரின் The True History of the Life and Death of King Lear & His Three Daughters என்ற நாடகம் Belvoir தயாரிப்பில் சிட்னியில் மேடையேறியுள்ளது. இந்த நாடகத்தில் இணை இசையமைப்பாளராகவும், மேடை இசைக்கலைஞராகவும் உள்ள அர்ஜுனன் புவீந்திரன் அவர்களுடனான நேர்காணல் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் Optometrist-க்கான வேலைவாய்ப்பு எந்தளவில் உள்ளது? 11.12.2025

ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறோம். அந்தவகையில் Optometry தொடர்பில் அறிந்துகொள்வோம். Optometry சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Optometrist செந்தில் முருகப்பா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா...

பெயர்: மான். தொழில்: அட்டூழியம் செய்தல் 11.12.2025

ஆஸ்திரேலியாவில் குடியேற அழைத்து வரப்பட்ட மான் இப்போது ஒரு வேண்டா விருந்தாளி. மான் எப்படி Feral Deer அல்லது காட்டு மான் ஆனது, மான் தரும் தொல்லைகள் என்ன என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.

செய்தியின் பின்னணி : 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! 11.12.2025

ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி புதன்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது. SBS News-இற்காக Sam Dover ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 11 டிசம்பர் 2025 வியாழக்கிழமை 11.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

மெல்பன்- இலங்கை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது Jetstar! 10.12.2025

ஆஸ்திரேலியாவின் Jetstar விமான நிறுவனம், இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கிளை இந்தியாவில் திறக்கப்படுகிறது! 10.12.2025

University of New South Wales, சிட்னியின் வெளிநாட்டு வளாகம் இந்தியாவில் திறக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

குணமடைய Stem cell (குருத்தணு) தேவைப்படும் வினோத் - நீங்களும் உதலாம்! 10.12.2025

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தையான 46 வயதான வினோத் அவர்களுக்கு stem cell donor (குருத்தணு கொடையாளி) தேவைப்படுகிறது. வினோத் அவர்களின் உடல்நிலை குறித்தும் அவருக்கு ஏன் stem cell சிகிச்சை அவசியம் என்பது குறித்தும் அவரின் மாமனார் ராமநாதன் அவர்களுடனும் stem cell donor registryயில் பதிவு செய்வது குறித்து ஹரிணி அவர்களுடனும் உரையாடுகிறார் செல்வி.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice