SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

இன்றைய செய்திகள்: 04 மார்ச் 2026, புதன்கிழமை. 04.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: இரவு பகலாக எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் 03.03.2026

அரசின் அறிவிப்பினையும் மீறி பல பகுதிகளிலும் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

செய்தியின் பின்னணி: மத்திய கிழக்கு மோதல் சர்வதேச விமானப் பயணங்களை எவ்வாறு பாதித்துள்ளது 03.03.2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை உலகளாவிய ரீதியில் விமானப்பயணிகளுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஈரான் மீதான தாக்குதல் : பெட்ரோல் விலை இன்னும் உயருமா? 03.03.2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் காரணமாக சற்று உயர்ந்துள்ள பெட்ரோல் விலை மேலும் உயருமா என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

முன்னாள் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ஆஸ்திரேலியாவில் குடியேறுகிறார் 03.03.2026

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் Jacinda Ardern ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 03 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை 02.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

சிட்னியில் சட்டவிரோத மதுபான இறக்குமதி : இரு இந்தியர்களின் விசா ரத்து 02.03.2026

சிட்னியில் சட்டவிரோதமாக மதுபான இறக்குமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

What lies beneath Keeladi: The uneasy politics of India’s past - கீழடிக்குக் கீழே புதைந்திருப்பது என்ன? இந்திய அரசியலைக் கலங்கடிக்கும் கடந்தகாலம் 02.03.2026

Since its discovery in 2014, the Keeladi excavation near Madurai has emerged as one of India’s most contested archaeological sites – celebrated by some as evidence of an early urban civilisation in South India, and dismissed by others as an exercise in political mythmaking. In her latest book, The Dig: Keeladi and the Politics of India’s Past, journalist Sowmiya Ashok traces the accidental unearth...

இன்றைய செய்திகள்: 02 மார்ச் 2026 - திங்கட்கிழமை 02.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலிய சர்வதேச மாணவர்களை பாதுகாக்க ஒரு புதிய இணையதளம் 01.03.2026

ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க உதவும் வகையில், புதிய இணையதளம் மற்றும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டார் – ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு மீண்டும் ஏறுமா? 01.03.2026

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மற்றும் அரசு தொலைக்காட்சி உட்பட பல அதிகாரப்பூர்வ உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணியில், ஈரானின் எதிர்காலம் என்ன என்று Arab News என்ற பத்திரிகையின் ம...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 28 பெப்ரவரி 2026) 27.02.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22– 28 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.

சமூகத்தில் வாழ்ந்த புகலிடக் கோரிக்கையாளர் திலீவரன் தடுப்புக்காவலுக்கு சென்றது எப்படி? 27.02.2026

தற்போது Villawood தடுப்பு மையத்தில் இருக்கும் திலீவரன் பகிர்ந்து கொண்ட கருத்துகளோடு, குடியேற்ற தடுப்பு மையங்களில் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோருவோரின் நிலை குறித்தும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கும் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

செய்தியின் பின்னணி: பிரதமரை சிக்கலில் மாட்டிய ஒரு வார்த்தை 27.02.2026

பிரதமர் இந்த வாரம் கூறிய ஒரு வார்த்தை அவரை பலத்த விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 27 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை 27.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

NSW சாலைகளில் உள்ள மொபைல் கேமராக்களில் வரும் புதிய மாற்றங்கள் 26.02.2026

NSWஇல் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய கேமரா திட்ட மாற்றத்தை முன்னிட்டு, மில்லியனுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

மறைந்தார் மக்கள் போராளி நல்லகண்ணு: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் 26.02.2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா்.நல்லகண்ணு அவர்கள் பெப்ரவரி 25 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 101. நல்லக்கண்ணு அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறுபதிவு இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்

உலக விருது பெறும் தமிழ்ப் பெண்மணி மனம் திறக்கிறார் 26.02.2026

ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மாக்சசே விருதுகளுக்கான 2017ஆம் ஆண்டின் வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, (அப்போது) 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும்,...

மூலதன ஆதாய வரிச் சலுகைகள்: ‘இளைய தலைமுறையினருக்குக் கொடூரமானவை’ 26.02.2026

வீட்டு வசதிகள் குறித்த செனட் விசாரணையில், வரி சீர்திருத்தத்திற்கான அவசர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய மூலதன ஆதாய சலுகைகள் பணக்கார முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ள அதே நேரத்தில் இளைய தலைமுறையினர் வீடு வாங்க முடியாமல் செய்கிறது என்று அதற்காகக் குரல் கொடுப்பவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வரிச் சலுகைகளைக் குறைப்பது வீட்டு உரிமையை நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்க சம்ம...

நாம் வீணடித்து வீசும் உணவினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுமா? 26.02.2026

வீட்டில் நாம் வீணடித்து வீசும் உணவு பொருட்களினால் நமது பணம் மட்டும் வீணாவது கிடையாது அது நமது சுற்றுசூழலையும் பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? விளக்குகிறது இந்த விவரணம். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 26 பெப்ரவரி 2026 - வியாழக்கிழமை 25.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பெயர் மாறுகிறது! 25.02.2026

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாபெரும் பொங்கல் விழா! 25.02.2026

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாபெரும் “பொங்கல் – தமிழர் அறுவடைத் திருநாள்” பெப்ரவரி 28 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்த விபரங்களை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் சிலரான சேதுராமன் முத்தையா,சசிதரன் ராதாகிருஷ்ணன், கவிதா குப்புசாமி, சதீஷ் சந்திரசேகரம், அமர்நாத் புஷ்பராஜ், சத்தியபிரகாஷ் நித்தியசாது மற்றும் யுவராஜ் மூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Your guide to using sunscreen in Australia - ஆஸ்திரேலியாவில் sunscreen பயன்படுத்துவது ஏன் முக்கியம் ? சரியாக பயன்படுத்துவது எப்படி? 25.02.2026

Australia’s sun can be harsh. And sunscreen is one key measure protecting us against harmful sun exposure. We asked three scientists about sunscreen facts, myths and choosing the right products. - உலகிலேயே அதிக தோல் புற்றுநோய் விகிதம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆகவே சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான முறையில் sunscreen ஒன்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது குறித்து Zoe Tho...

செய்தியின் பின்னணி : Bondi தாக்குதலுக்கு பிறகு நாட்டின் குடிவரவு கொள்கைகளில் மாற்றம் வருமா? 25.02.2026

ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகள் மீண்டும் தற்போது பேசுபொருளாகியுள்ள பின்னணியில் சில கட்சிகள் பயங்கரவாத்தை எதிர்க்கும் நடவடிக்கைகள் நாட்டின் எல்லை கட்டுப்பாடுகளிலிருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice