SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
இன்றைய செய்திகள்: 25 மார்ச் 2026, புதன்கிழமை. 25.03.2026 3:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
செய்தியின் பின்னணி:குடிவரவுக்கு எதிரான One Nation கட்சியின் தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் வெற்றி காட்டுவது என்ன 24.03.2026 6:50
தெற்கு ஆஸ்திரேலியத் தேர்தல் முடிவு, அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. லேபருக்கு எதிரான முதன்மை மாற்று சக்தியாக இருந்த லிபரல் கட்சியை பின்னுக்குத் தள்ளி, One Nation கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Briana Charles எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
இலங்கை: முன்னாள் போராளிகளின் பங்களிப்பை வலுப்படுத்தும் மாநாடு 24.03.2026 8:33
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் - போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மாநாடு அரசியல் மாற்றங்கள், சமூக அபிவிருத்தியில் முன்னாள் போராளிகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டிருந்தது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இப்போது வெளிநாட்டுப் பயணம் போகின்றவர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும்? 24.03.2026 12:58
உலகில் நிலவும் போர் சூழலில், வெளிநாடு செல்லும் பயணிகள் எத்தகைய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும், ஒருவரின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதை விளக்குகிறார் குரு சந்தர் அவர்கள். சிட்னியை மையமாகக் கொண்டு இயங்கும் Madura Travels Australia நிறுவனத்தின் துணைத் தலைவரும், பயணத் துறையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ளவருமான குரு அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். —————————————————————————————...
ஊதிய உயர்வு கோரிக்கை: லட்சக்கணக்கானோருக்கு ஆண்டுக்கு $2,465 கூடுதலாக கிடைக்கலாம் 24.03.2026 2:29
ஆஸ்திரேலியாவில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு கூடுதலாக 2,465 டாலர் வருமானம் பெறக்கூடியவகையில் முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
காளான்கள் தொடர்பில் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 24.03.2026 2:37
காட்டு காளான் பருவம் தொடங்கியுள்ள நிலையில், death cap உள்ளிட்ட நச்சுக் காளான்கள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 24 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை 24.03.2026 5:08
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
குழம்பு வைக்கும் ஆப்பிள் மீண்டு வந்தது! 23.03.2026 2:09
ஆஸ்திரேலியாவில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய ஆப்பிள் வகை இன்னும் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
PCOS மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு : பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன? 23.03.2026 12:52
Hormonal Imbalance என்ற நிலைமையால் நம்மில் பலர் அவதிப்படக்கூடும். இது ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பிலும் குறிப்பாக உடல்பருமனுடன் தொடர்புடைய Hormonal Imbalance குறித்தும் விளக்கமளிக்கிறார் Endocrinologist Felix Jebasingh அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 23 மார்ச் 2026 - திங்கட்கிழமை 23.03.2026 4:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
ரோடா ராபர்ட்ஸ் AO: தேசத்தை மாற்றிய பண்பாட்டு போராளி 22.03.2026 13:20
SBS-இன் Elder-in-Residence ஆகவும், ஆஸ்திரேலியாவின் பூர்வீக மக்களின் கலை மற்றும் பண்பாட்டு உலகின் முக்கிய முன்னோடியுமான Rhoda Roberts AO, 66 வயதில் சனிக்கிழமை காலமானார். எழுத்தாளர், நடிகை, இயக்குநர், கலைத் தயாரிப்பாளர், கலாசார வழிகாட்டி என்று பல துறைகளில் தடம் பதித்த அவர், பூர்வீக மக்களின் குரல்களை தேசிய அளவில் ஒலிக்கச் செய்த ஆளுமையாகப் போற்றப்படுகிறார். ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பண்பாட்டு வாழ்வி...
செய்தியின் பின்னணி : எரிபொருள் சிக்கலை சமாளிக்க அரசின் புதிய திட்டம் 21.03.2026 7:35
எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய தேசிய பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கடந்த வாரம் பிரதமர் Anthony Albanese அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 21 மார்ச் 2026) 21.03.2026 5:22
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 21 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை எத்தனையாவது இடம்? 20.03.2026 2:12
உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
‘ஆதரவற்றவர்களை அவர்கள் மதத்தின்படி அடக்கம் செய்வதே உயர்ந்த மனித நேயம்’ 20.03.2026 12:10
அமீர் அம்சா அவர்கள் உயர்ந்த மனித நேயத்தின் அடையாளம். மதங்களின் பெயரால் மனிதகுலம் பிளவுபடும் போக்கு அதிகரித்திருக்கும் நிலையில், தமிழநாட்டில் ஆதரவற்ற நிலையில் மரணிக்கும் மனிதர்களை கடந்த 28 ஆண்டுகளாக அவர்களின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்துவருகின்றனர் அமீர் அம்சாவும் அவரின் நண்பர்களும். இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு மற்றும் “விகடன்” விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளன. ரமலான் பெருவிழா வேளையில் அமீர்...
30 ஆண்டு fixed-rate வீட்டு கடன் – குடும்பங்களுக்கு நிம்மதியாகுமா? 20.03.2026 7:13
ஆஸ்திரேலியாவில் வீட்டு கடன் அமைப்பு பல குடும்பங்களுக்கு நிதி நிச்சயமின்மையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், 30 ஆண்டுகால நிலையான வட்டிக் கடன்கள் அறிமுகமாக வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 20 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை 20.03.2026 4:31
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
உணர்வுகளை இணைக்கும் மொழி! 19.03.2026 13:53
'உலக கவிதை தினம்' ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி. இதில் பங்கேற்பவர்கள் சத்யா நிரஞ்சன், மோஷிகா பிரேமதாச, பகீரதன் தேவேந்திரன் மற்றும் கேதா ஆகியோர். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.
புகைப்படக்கலையில் கலக்கும் சிறுமி சிதாரா! 19.03.2026 8:39
தமிழ்நாட்டை சேர்ந்த சிதாரா அருள் கார்த்திகேயன் வனவிலங்கு புகைப்படக்கலையில் சர்வதேச அளவில் அசத்தி வருகிறார். சிதாராவின் புகைப்படக்கலை பயணம் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
செய்தியின் பின்னணி: எந்த இடத்தில் Unit வாங்குவது வாடகைக்கு இருப்பதைவிட மலிவானது? 19.03.2026 6:39
இந்த நகரத்தில் Unit ஒன்றை வாங்குவது வாடகைக்கு இருப்பதை விட மலிவாக இருக்கக்கூடும் என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் தேசிய மலராக வாட்டில் மலர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? 19.03.2026 10:13
ஒவ்வொரு நாடும், மாநிலங்களும் தங்களுக்கென்று கொடி, விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், பூ என பல தனித்த, தனித்துவ அடையாளங்களைத் தக்கவைத்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் coat of arms-ல் இடம் பெற்றிருக்கும் கோல்டன் வாட்டில் மலர் ஏன் தெரிவு செய்யப்பட்டது? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழி விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
இன்றைய செய்திகள்: 19 மார்ச் 2026 வியாழக்கிழமை 19.03.2026 4:14
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/03/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
ஆஸ்திரேலியா ஏன் பெட்ரோல் சிக்கலை எதிர்கொள்கிறது? சமாளிக்குமா? 18.03.2026 12:27
நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா பெட்ரோல் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் சிக்கலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா இந்த சிக்கலை சமாளிக்குமா என்று ஊடகங்கள் தரும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
குடிவரவு தடுப்புக் காவல்: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு 18.03.2026 2:46
காலவரையற்ற குடிவரவு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை கண்காணிக்க அரசு கொண்டு வந்த புதிய நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் களம்: சனிக்கிழமை வெற்றி யாருக்கு? 18.03.2026 13:53
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி எதிர் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கட்சிகள் முன்வைக்கும் வாக்குறுதிகள் என்ன, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார் றைசெல்.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice