SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

இந்த வார தமிழகம் & இந்தியா 04.06.2026

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனைகள்; தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழக முதலமைச்சர் விஜயின் திருச்சி உரை; தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகல் உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை! 04.06.2026

மன்னரின் பிறந்தநாள் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இரவில் வீடுகளை கலக்கும் போஸம்: தொல்லையா? பாதுகாக்க வேண்டிய உயிரினமா? 04.06.2026

இரவில் வீடுகளருகே காணப்படும் போஸம் சிலருக்கு தொல்லையாக இருக்கலாம். ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பாதுகாக்கப்பட்ட பூர்வீக உயிரினம். போஸம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழி படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். தயாரிப்பு: றைசெல்.

Pauline Hanson பிரதமராகும் வாய்ப்பு அதிகரிக்கிறதா? அவரின் பின்னணி என்ன? 04.06.2026

One Nation கட்சியின் தலைவி Pauline Hanson மீண்டும் ஆஸ்திரேலிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளார். One Nation கட்சியின் ஆதரவு உயர்ந்து வரும் நிலையில், அவர் யார், அவரது அரசியல் பின்னணி என்ன, அவர் தொடர்பான சர்ச்சைகள் என்ன, அவர் சந்தித்த வீழ்ச்சிகள் என்ன, அவர் இப்போது முன்வைக்கும் கொள்கைகள் என்ன, Labor மற்றும் Coalition ஆகிய நாட்டின் முக்கிய இரு பெரிய கட்சிகளுக்கும் அவர் எவ்வாறு சவாலாக மாறுகிறார் எ...

குடல் புற்றுநோய் நம்மவர்களையும் தாக்குமா? 04.06.2026

Bowel Cancer - குடல் புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு மாதமாக ஜூன் கடைப்பிடிக்கப்படுகிறது. குடல் புற்றுநோய் பற்றிய தனது மற்றும் தனது சகோதரனின் அனுபவங்களை உமா சுவாமி அவர்களும், குடல் புற்றுநோய் அதன் அறிகுறிகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி புற்றுநோய் மருத்துவ நிபுணர் Radiation Oncologist Dr J ஜெயமோகன் அவர்களும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் வருகின்ற பாதிப்புகள் யாவை? 04.06.2026

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் நமது உடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது மேலும் உடற்பற்சியால் வருகின்ற நன்மைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் அடிலெய்டு நகரில் physiotherapist-ஆக பணிபுரிந்து வரும் சிவகுமார் கோபாலகிருஷ்ணன்அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 4 ஜூன் 2026 வியாழக்கிழமை 04.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 04/06/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

MiniPod: Keep your eye on the ball | Words we use - சிறு வலையொலி: ‘Keep your eye on the ball’ | நாம் பயன்படுத்தும் சொற்கள் 04.06.2026

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'Keep your eye on the ball'. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ – ‘Keep your eye on the ball' போன்ற மரபுத்...

ஆஸ்திரேலியாவின் புதிய அவசர எச்சரிக்கை வசதி விரைவில் அறிமுகம் 03.06.2026

ஆஸ்திரேலியாவின் புதிய அவசர எச்சரிக்கை வசதி - AusAlert அக்டோபரில் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

வீட்டு விலை குறைந்தாலும் ஏன் ஆஸ்திரேலியர்கள் வீடு வாங்குவது கடினமாகிறது? 03.06.2026

சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் வீட்டு விலைகள் சரிவை நோக்கி நகர்கின்றன. ஆனால் இந்த மாற்றம் தமது முதலாவது வீட்டை வாங்க நினைக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு உண்மையில் நன்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

தமிழ் கற்றுத்தரும் சிங்கள ஆசிரியர் 03.06.2026

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர், ஒலிபரப்பாளர் மற்றும் ஊடகத் துறை நிபுணர் எனும் பின்னணி கொண்ட சீலரத்ன சேனரத் அவர்கள் வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் பொதுத் தொடர்புத் துறைகளில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றார். சிங்கள மொழிப் பின்னணி கொண்டவரான அவர் பாரம்பரிய தமிழ் இலக்கியங்களை ஆழமாக கற்றவர். பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றுத்தருக்கிறார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன...

தொலைந்து போன Superannuation கணக்கை கண்டுபிடிப்பது எப்படி? 03.06.2026

Lost Superannuation தொலைந்து போன அல்லது இழந்த Superannuation என்றால் என்ன ? அதனை எவ்வாறு மீட்டெடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

மெல்பனில் காணாமல்போன தமிழ் முதியவர்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை 03.06.2026

Update: காணாமல் போன முதியவர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விக்டோரியாவின் Dandenong-இல் தமிழ் முதியவர் ஒருவர் காணாமல்போயுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 03 ஜுன் 2026, புதன்கிழமை 03.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/06/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: உயரும் எரிபொருள் விலையால் நெருக்கடி 02.06.2026

இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு! 02.06.2026

ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலிய மக்கள் தொகை 28 மில்லியனைத் தாண்டியது 02.06.2026

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இப்போது 28 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

MiniPod: GOAT | Words we use - சிறு வலையொலி: GOAT | நாம் பயன்படுத்தும் சொற்கள் 02.06.2026

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'GOAT'. - ஒரு புதிய சொற்றொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுன்கள். 'GOAT' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இருமொழித் தொடர்’...

How does political grief affect social cohesion? - SBS Examines: 'Political grief ' சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா ? 02.06.2026

When we're exposed to events or ideologies that go against our own beliefs, we can feel what experts call 'political grief'. Some say it's playing a role in the growing polarisation of our society. - நம் அரசியல் கருத்துக்கள் அல்லது சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்களை சந்திக்கும்போது ஏற்படும் துயரமான அனுபவத்தை ‘Political grief’ என்று கூறப்படுகிறது. மேலும் இது சமூகத்தில் அதிகமான பிரிவினையை ஏற்படுத்தக...

இன்றைய செய்திகள்: 02 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 02.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 02/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 30,000 பேருக்கு வேலை; மணிக்கு $61.50 வரை சம்பளம் 01.06.2026

2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கென ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சட்டம்: மனநலம் தொடர்பான சூழ்நிலைகளில் காவல்துறையினரை எப்படி தொடர்புகொள்வது? 01.06.2026

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், மனநலம் தொடர்பான சம்பவங்கள் அல்லது சூழ்நிலைகளில் காவல்துறையினரை எப்படி தொடர்புகொள்வது என்பது குறித்து காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி : மோசடியில் இழந்த பணத்தை திரும்ப பெற அரசின் புதிய திட்டம்! 01.06.2026

மோசடிகளால் அதிகபட்சம் $3,000 வரை பணத்தை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள், பெடரல் அரசின் புதிய திட்டத்தின் கீழ் automatic reimbursement தானாகவே இழப்பீடு பெற தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

கிரிக்கெட்டின் மறைக்கப்பட்ட நாயகர்கள் – நடுவர்களின் குரல் 01.06.2026

கிரிக்கெட் நடுவர்களின் பொறுப்புகள், சவால்கள் மற்றும் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியின் உள்ளூர் கிரிக்கெட் நடுவர், PDCUA அமைப்பின் பிரதிநிதி மற்றும் உயர்தரப் பாடசாலை ஆசிரியர் சிவா பத்மநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 01 ஜுன் 2026 - திங்கட்கிழமை 01.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/06/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice