SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2561 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

2 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

என்ன சொன்னார்கள்? ஐந்து வார தேர்தல் பிரச்சாரத்தின் தொகுப்பு 02.05.2025

பெடரல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஐந்து வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய கட்சிகள் முன் வைத்த திட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 02.05.2025

இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் போர் பதற்றம்; அமெரிக்கா - உக்ரைன் இடையே ஏற்பட்ட கனிமவள உடன்பாடு; காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்வெளி தாக்குதல்; சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; அமெரிக்கா- வியட்நாம் போர் நிறைவின் 50ம் ஆண்டு நினைவு; அமெரிக்கா ஈரான் இடையே அணுசக்திப் பேச்சுவார்த்தை உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

கோலாகலமாக ஞாயிறு சிட்னியில் சித்திரைத் திருவிழா! 01.05.2025

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 4) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. தமிழ் நாட்டிலிருந்து நாட்டுபுற இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவயர் கர்ணன் மற்றும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு (தொலைபேசி: 0402 229 5517) ஆகியோர்...

Follow the money: how lobbying and big donations influence politics in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் பெரிய நன்கொடைகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன? 01.05.2025

Experts say a lack of transparency leaves Australians unaware of "undue influences" at play across all levels of government. - ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பெரிய நன்கொடைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், அரசின் அனைத்து மட்டங்களிலும் தேவையற்ற பண செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து மக்கள் அறியாமலேயே இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SBS Examines-இற்காக...

சுஜாதா 90: தமிழ், அறிவியல், திரை, இலக்கியம் குறித்த நேர்முகத்தின் மறு பதிவு 01.05.2025

பல்லாயிரக்கணக்கான தமிழ் எழுத்தாளர்கள் இருந்தாலும் “சுஜாதா” அவர்கள் தனித்துவமானவர். இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும், வகைகளிலும் எழுதி குவித்தவர் சுஜாதா. அறிவியலை எளிமைப்படுத்தி, ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்தியாவின் 'தேசிய அறிவியல் தொழில...

‘லிபரல் கட்சியின் கொள்கைகள் இவை’ - Jacob Vadakkedathu (Liberal) 01.05.2025

மலையாளி பின்னணி கொண்ட ஜேக்கப் வடக்கெடத்து அவர்கள் ஆஸ்திரேலிய தலைநகர் ACT யிலிருந்து லிபரல் கூட்டணியின் செனட் வேட்பாளராக போட்டியிடுகிறார். பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் குடியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட லிபரல் கட்சிக் கொள்கைகள் குறித்து அவருடன் உரையாடுகிறார் SBS மலையாளம் ஒலிபரப்பின் Deeju Sivadas.

நான்கு வங்கிகளின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டன! 01.05.2025

ஆஸ்திரேலிய மக்களில் 31,000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி தொடர்பான Passwordகள் திருடப்பட்டுள்ளன. Computers, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றவர்களை குறிவைத்து அவர்களின் passwordகள் ஒட்டு மொத்தமாக திருடப்படுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.

கண் பார்வையைக் காப்பாற்ற புதிய வழிகளைக் கையாளும் தமிழர் 01.05.2025

பேராசிரியர் சந்திரா பாலாவின் அறிவியல் முயற்சிகள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது பின்னணி, மற்றும் அவரது ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் சந்திரா பாலாவுடன் குலசேகரம் சஞ்சயன் 2017ஆம் ஆண்டில் பேசியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

கிரீன்ஸ் கட்சி அதிகாரபூர்வமான பிரச்சாரத்தை இன்று துவக்கியது 01.05.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Who's Right? Who's Left? What role will religion play in this election? - SBS Examines : தேர்தல் வாக்களிப்பில் மத நம்பிக்கை பங்கு வகிக்கிறதா? 30.04.2025

The differing and diverse religious beliefs Australians hold will influence their vote this election. - ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற அரசு உருவாவதத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்டுள்ளது. வரவிருக்கும் பெடரல் தேர்தலில் மத நம்பிக்கை எவ்வாறு பங்கு வகிக்கும் என்பதை SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – ஆபாச படம் பார்த்தல் 30.04.2025

டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...

இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி 30.04.2025

தமிழ்நாட்டில் கண்ணகி - முருகேசன் ஆணவப்படு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது, காஷ்மீரில் தொடரும் பதற்றம், இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம், தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாடு குறித்து தொடரும் சர்ச்சை உள்ளிட்ட செய்திகளுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஏன் கடந்த ஆஸ்திரேலிய தேர்தல்களைவிட இது மிகப் பெரிய தேர்தல்? 29.04.2025

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இதுவரை நடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது மிகப்பெரிய தேர்தல் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

பீட்டர் டட்டனின் அலுவலகத்தை சேதப்படுத்திய பெண் மீது வழக்குப்பதிவு 29.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

NSW மாநிலத்தில் 18 வயது இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: பிந்திய தகவல்கள் 29.04.2025

நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் பகுதியில் 18 வயது இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

கனடா வான்கூவர் திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி: நடந்தது என்ன? 29.04.2025

கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடைபெற்ற பிலிப்பினோ திருவிழா சனக்கூட்டத்தில், நபர் ஒருவர் காரை ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். [[Warning contains distressing description of attack aftermath]]

உக்ரைனுடன் மூன்று நாள் போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு 29.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 29/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Who's Right? Who's Left? How will migrant communities vote this election? - SBS Examines : இடதுசாரி வலதுசாரி யார்? புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? 28.04.2025

Migration policies are a hot topic this election, but it's not clear how our diverse communities will cast their vote. - ஆஸ்திரேலியாவில் உள்ள பல்லின பல்கலாச்சார சமூகங்கள் அரசியலை எவ்வாறு அணுகுகின்றன. புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர் விசா கட்டணம் அதிகரிக்கப்படும்- லேபர் கட்சி 28.04.2025

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், தமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு நிதியளிக்கப்படும் என லேபர்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

கடலில் காணாமல் போன மகன் பற்றிய செய்திக்காகக் காத்திருக்கும் சிட்னி தமிழ் குடும்பம் 28.04.2025

சிட்னி நகரைச் சேர்ந்த அட்சயன் அருணாசலம் என்ற 24 வயது இளைஞர் ஒருவர், புனித வெள்ளி அன்று கடற்கரைப் பக்கம் சென்றிருந்த வேளை பாரிய அலை வந்ததில், அவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் தேடுதல் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளமையால் அவரது குடும்பத்தினரின் சோகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்த மேலதிக தரவுகளை அறிய அட்சயன் அருணாசலம் அவர்களின் தாய் மாமன், திரு திருநந்தக்குமார் அவர்களுடன்...

தேர்தல் பிரச்சாரங்கள் கடைசி கட்டத்தை எட்டுகின்றன 28.04.2025

எதிர்வரும் சனிக்கிழமை ஃபெடரல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஐந்தாவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

வாழ்க்கைச் செலவு தொடர்பில் அரசியல் தலைவர்கள் நேரடி விவாதம்! 28.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/04/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

‘எங்கள் கட்சி மக்களுக்கான அதீத சுதந்திரத்தை வலியுறுத்துகிறது’ – Craig Kelly (Libertarian) 27.04.2025

SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Libertarian கட்சியின் சார்பில் செனட் அவைக்கு போட்டியிடும் Craig Kelly அவர்கள...

ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் முன்வைக்கும் விலைவாசி தொடர்பான கொள்கைகள் என்ன? 27.04.2025

நாட்டின் ஆளும் கட்சியான லேபர் கட்சியும், முக்கிய எதிர் கட்சியான Coalition எனப்படும் லிபரல்-நேஷனல் கூட்டணியும், மூன்றாவது பெரிய கட்சியான கிரீன்ஸ் கட்சியும் விலைவாசி உயர்வு தொடர்பான பல கொள்கைகளை தேர்தல் களத்தில் முன்வைக்கின்றன. அவற்றில் முக்கிய கொள்கைகளை விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

‘கட்சிகள் தேர்தலில் கோவில் உட்பட அமைப்புகளுக்கு அன்பளிப்பு கொடுத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றன’– Malini (Independent) 27.04.2025

SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் சுயேட்சை வேட்பாளராக Parramatta நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் Dr Maa M...

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos