SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 20.07.2025

நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி; புதிய சர்ச்சையில் சீமான் - பெண்களை இழிவாக பேசி வருவதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார்; காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு - வலுக்கும் கண்டனங்கள்; - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்...

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 19.07.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 – 19 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

வருமான வரம்பு உயர்த்தப்படுவதால் Centrelink சலுகைபெற பலர் தகுதிபெறுவர்! 18.07.2025

ஆஸ்திரேலியாவில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான சொத்து மற்றும் வருமான வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் மூன்று பேர் மரணம் 18.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

What is a Justice of the Peace? When do you need one? - உங்கள் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு JP ஒருவரைக் கண்டுபிடிப்பது எப்படி? 18.07.2025

At some stage you will probably need help from a Justice of the Peace. It may be to prove your identity, to make an insurance claim or to certify copies of your legal documents in your language. JPs are trained volunteers who play a crucial role in the community by helping maintain the integrity of our legal system. So what exactly does a JP do and where can we find one when we need their services...

Debit & credit cardக்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய RBA நடவடிக்கை! 18.07.2025

ஆஸ்திரேலியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களுக்கு வணிகர்கள் விதிக்கும் surcharge கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

எச்சரிக்கை! நீரிழிவு நோயை குறைத்து மதிப்பிடாதீர்கள் 18.07.2025

ஆஸ்திரேலியாவில் தேசிய நீரிழிவு நோய் வாரம் (ஜூலை 13 - 19) கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் சிற்றம்பலம் ராகவன் அவர்களின் கருத்துக்களையும், பரமேஸ்வரன் முத்துத்தம்பி அவர்களின் அனுபவத்தையும் கேட்கலாம். நிகழ்ச்சியாக்கம்: செல்வி.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் 17.07.2025

இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசு கையகப்படுத்திய காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்; செம்மணி மாத்திரமல்ல நடந்த ஒவ்வொரு சம்பவமும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது; பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செ...

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 17.07.2025

சிரியாவில் மீண்டும் ஆயுத மோதல்; ஈராக்கில் தீ விபத்து; காசா போர்; உக்ரைன் - ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா- சீனா இடையே சுமூக உறவு?; ஈரானிலிருந்து ஆப்கான் அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

பிரிட்டனில் மரத்தை வெட்டிய இருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை! 17.07.2025

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற Sycamore Gap மரத்தை வெட்டியதற்காக இரண்டு பேருக்கு தலா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் தமிழ்நாட்டின் முத்துலட்சுமி! 17.07.2025

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், தேவதாசி முறையை ஒழித்தவரும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி அம்மையார் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சி. முன்வைக்கிறார்: றைசெல்.

முதல் முறையாக மலேசியாவில் சிறுவர் பாடல்கள் இறு வெட்டு 17.07.2025

நாம் வளரும் போது, சிறுவர் பாடல்கள் பாடியிருக்கிறோம். அதில் எத்தனை தமிழில் இருந்தன? ஒரு மலேசிய இளம் இசைக்குழு அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான சிறுவர் பாடல்கள் அடங்கிய இறு வெட்டை 2013ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது. இந்த இறுவெட்டின் தயாரிப்பின் மூலகர்த்தா காயத்திரி வடிவேல் அவர்களுடனும் அந்த இறுவெட்டில் பாடியிருந்த ஒரு சிறுவர், விஷ்ணுவுடனும் குலசேகரம் சஞ்சயன் 2014ஆம் ஆண்டில் பேசியிருந்...

ஒரு கோடிக்கும் அதிகமான புகைபிடி சாதனம் Vapesகளை அரசு பறிமுதல் செய்துள்ளது 17.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 17/07/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

சீனா கைவிட்டால் ஆஸ்திரேலிய பொருளாதாரம் இடிந்து விழுமா? 17.07.2025

சீன-ஆஸ்திரேலிய உறவு சுமூக நிலைக்கு வந்தாலும், ஒருவேளை சீனா மீண்டும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தை கடுமையாக கட்டுப்படுத்தினால், ஆஸ்திரேலியாவின் வளம் இடிந்து விழுமா என்ற கேள்விக்கு பொருளாதார நிபுணர்கள் தரும் பதில்களுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. தயாரித்தவர்: றைசெல்.

Causes and consequences: Do we all have the capacity for hatred? - SBS Examines : நாம் அனைவரும் வெறுப்பை உணரும் திறன் கொண்டவர்களா? 16.07.2025

In this new series, Understanding Hate, we unpack the forces driving division, and ask what it takes to protect social cohesion. - 'வெறுப்பைப் புரிந்துகொள்வது' என்ற இந்தத் தொடரில், சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க என்ன தேவை என்பதைப் பற்றி முதல் பாகத்தில் ஆராய்வோம்.

டெரர்கிராமை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலிய அரசு! 16.07.2025

டெரர்கிராமை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு அண்மையில் பட்டியலிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் வீடு வாங்குபவர்களுக்கு கிடைக்கும் அரச உதவிகள் எவை? 16.07.2025

ஆஸ்திரேலியாவில் தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கு கிடைக்கின்ற அரச உதவிகள் மற்றும் சலுகைகள் பற்றி விளக்குகிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

பராமரிப்பு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? 16.07.2025

தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தைகளை, ஒரு ஆண் பராமரிப்பாளர் துன்புறுத்திய செய்தி பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்கள் தங்கள் நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் கலாச்சாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஒரு மைய உரிமையாளருக்கு, இந்த சம்பவம் ஒரு பொறுப்புணர்வு தருணம் மட்டுமல்ல - தீர்க்கமாக செயல்படுவதற்கான ஒரு அழைப்பும் ஆகும். இந்த சம்பவத்திற்க...

பிரதமரின் சீனப் பயண நிறைவில்: சீனா-ஆஸ்திரேலியா வர்த்தக உறவு உறுதியாகியது! 16.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

பாலை நாம் ஏன் சமையலறை கழிவுநீர் தொட்டியில் கொட்டக்கூடாது? 15.07.2025

சிட்னியில் வசிக்கும் 69 சதவீத மக்கள் தாங்கள் பயன்படுத்தாத பாலை சமையலறை தொட்டியில் ஊற்றுவது சரியென்று நினைப்பதாக Sydney Waters நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆனால் பாலை சமையலறை தொட்டியில் ஊற்றுவது கழிவுநீர் வடிகால் அமைப்பில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி 15.07.2025

தமிழ்நாட்டில் மதிமுகவில் உட்கட்சி பூசல், ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு, பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா, தேர்தல் பணிகளை தொடங்கிய ஆளும் திமுக உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் போலி சான்றிதழ்களை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு 15.07.2025

குழந்தை பராமரிப்பு மற்றும் மனநலம் முதல் பொறியியல் வரை போலி டிப்ளோமாக்களை வைத்திருந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித்தகைமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

'இப்போது உள்ள கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு' - B.சரோஜாதேவி 15.07.2025

'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் நிறைவு பாகம்.

How is alcohol regulated and consumed in Australia? - ஆஸ்திரேலியாவில் மது தொடர்பில் உள்ள கட்டுப்பாடுகள் எவை? 15.07.2025

In Australia, alcohol is often portrayed as part of social life—especially at BBQs, sporting events, and public holidays. Customs like BYO, where you bring your own drinks to gatherings, and 'shouting' rounds at the pub are part of the culture. However, because of the health risks associated with alcohol, there are regulations in place. It’s also important to understand the laws around the legal d...

'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி 15.07.2025

'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் இரண்டாம் பாகம்

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos