SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

நிரந்தர விசா வழங்குமாறு அகதிகள் குழு ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் முறையீடு 31.07.2025

Fast Track நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நான்கு அகதிகளைக் கொண்ட குழுவொன்று கன்பரா நாடாளுமன்றத்திற்குச் சென்று முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பில் இக்குழுவில் அங்கம் வகித்தவரான ரதி பாத்லட் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஏழு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் 60 மில்லியன் டாலரை திருப்பித் தருகின்றன! 31.07.2025

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள், குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்களை வசூலித்ததற்காக, $60 மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையை திருப்பி கொடுக்கவிருக்கின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பினாலும் வளர்த்தவர்களை மறக்க முடியுமா? 31.07.2025

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Biomedical Research and Environmental Sciences) பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் அந்தோனி ஜீவராஜன் அவர்கள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் தனது பணியை செய்து வருகிறார். தனது பணி குறித்தும் நாசா குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் 2016ஆம் ஆண்டில் Dr. Antony Jeevarajan உரை...

ஆஸ்திரேலியாவில் தயாரான ராக்கெட் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்டது! 31.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 31/07/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

நேயர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும் 31.07.2025

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 1.

ஆஸ்திரேலிய காவல்துறை இன்னமும் குதிரைகளைப் பயன்படுத்துவது ஏன்? 31.07.2025

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 2.

ஆஸ்திரேலியா அறிவோம்: The Pinnacles 31.07.2025

மேற்கு ஆஸ்திரேலியாவில், பெர்த்திலிருந்து 2 மணி நரே பயணத்தில், நம்பூங் தேசிய பூங்காவில், செர்வாண்டஸ் அருகே அமைந்துள்ள சுண்ணாம்புக் கல் தூண்களின் பழமை, அறிவியல் உண்மைகள், அங்கு சென்றால் என்னென்ன அம்சங்களைப் பார்க்கலாம், என்னென்ன முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.

NSW ரயில் பயணிகளுக்கான இலவச பயணச்சலுகை நீட்டிப்பு 30.07.2025

நியூ சவுத் வேல்ஸ் மாநில ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2-நாள் இலவச பயணச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

For many Muslim women in Australia, Islamophobia feels inevitable - ஆஸ்திரேலியாவில் பல முஸ்லீம் பெண்கள் இஸ்லாமோஃபோபியா தவிர்க்கமுடியாததுபோல் உணர்கிறார்கள்! 30.07.2025

“We're talking about thousands and thousands of incidents ... for many Muslim females who wear the headscarf, they feel that an incident of Islamophobia is what it means to be a Muslim here in Australia." - இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு காரணமாக நடைபெறும் தாக்குதல் நிகழ்வுகள் ஆஸ்திரேலியாவில் முஸ்லீமாக வாழ்வதின் ஓர் அங்கமாகவே உள்ளதாக இங்குள்ள பல முஸ்லீம் பெண்கள் கூறுகிறார்கள்.

தாய்லாந்து – கம்போடியா சண்டையும், போர்நிறுத்தமும்: பின்னணி என்ன? 30.07.2025

தாய்லாந்து – கம்போடியா நாடுகளின் நீண்ட எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து தற்போது போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்தும், போர் நிறுத்த பின்னணி குறித்தும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

உங்கள் காரை திருட்டிலிருந்து பாதுகாப்பது எப்படி? 30.07.2025

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 3.

மலையக மக்கள்: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? 30.07.2025

இலங்கையில் மாற்றங்களை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தி அரசுக்கு மலையக மக்கள் வாக்களித்தார்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிரணியினர் தெவித்துள்ளனர். இதற்கு அரசு தரப்பின் பதில்கள் என்ன என்பது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

சர்வதேச மாணவர்களுக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தும் நியூசிலாந்து! 30.07.2025

நியூசிலாந்து அரசு, தனது சர்வதேச கல்வி சந்தையின் அளவை இரட்டிப்பாக்கும் நோக்கில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

“நண்பனின்றி நாளென்ன? நட்பின்றி பொழுதென்ன?” 29.07.2025

ஐக்கிய நாடுகள் சபை, 2011 ஆம் ஆண்டில், ஜூலை 30ஆம் நாளை அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் நட்பின் முக்கியத்துவத்தை மதிக்கும் நாளாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. தனிநபர்கள், கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நட்பு உத்வேகம் மற்றும் நல்லிணக்கத்தின் சக்திவாய்ந்த ஆதாரமாக செயல்பட முடியும் என்பதை ஐ.நா...

T20 தொடரில், ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை 5:0 என வெற்றி 29.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/07/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

சிட்னி புதுவருட வாணவேடிக்கை நிகழ்வை இந்த இடத்திலிருந்து பார்வையிட $50 கட்டணம்! 29.07.2025

சிட்னியின் புகழ்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட வாணவேடிக்கைகளை முக்கிய இடமொன்றிலிருந்து பார்ப்பதற்கு $50 கட்டணம் விதிக்க இருப்பதாக North Sydney கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நியூசிலாந்தைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! 29.07.2025

ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெறுவதற்கான ஒரு வழியாக குடிபெயர்வோர் நியூசிலாந்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இஸ்ரேல் அதிபர் கூற்றுக்கு மாறாக ‘காஸாவில் உண்மையான பஞ்சம்’ - அமெரிக்க அதிபர் 29.07.2025

Today's highlight (29 July 2025 - Tuesday)

சோலார் மின்சார வீடுகள் பேட்டரி நிறுவ பெடரல் அரசின் புதிய சலுகை என்ன? 28.07.2025

சோலார் மூலம் மின்சாரம் பெறும் வீடுகள் இதற்கான பேட்டரியையும் நிறுவ, பேட்டரிக்கு ஜூலை முதல் 30 சதவீத rebate – சலுகை வழங்குவதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் அவர்களின் ப...

PBS திட்டத்தின் கீழ் மருந்துகளின் விலையைக் குறைக்க அரசு திட்டம் 28.07.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/07/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

பலரோடு தற்காலிக செக்ஸ் (Casual Sex) வைப்பதிலுள்ள சிக்கல் என்ன? 28.07.2025

டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...

உற்பத்தித்திறன் வளர்ச்சி எங்களுக்கு $14,000 வரை கூடுதல் வருமானத்தை வழங்கும் 27.07.2025

உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடிய ஓர் முக்கியமான செய்தியை நாட்டின் Productivity Commission என்ற உற்பத்தித் திறனை கண்காணிக்கும் ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியுள்ளார். வேலைக்குச் செல்பவர்கள் படிப்படியாக 2035 ஆம் ஆண்டிற்குள் 14,000 டொலர்கள் வரை கூடுதல் வருமானம் பெற முடியும் என்று உற்பத்தித் திறன் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலச...

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 27.07.2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாட்கள் தமிழக சுற்றுப்பயணம்; இலங்கையில் நடந்த செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சீமான் போராட்டம்; ராமதாஸின் எச்சரிக்கையை மீறி அன்புமணி ராமதாஸின் நடைபயணம் - ‘அதிகார மோதலால்’ உடையும் பாமக; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய...

மெல்பனில் வீட்டு விலை எங்கே விரைவாக அதிகரித்து வருகிறது? 27.07.2025

மெல்பனில் எந்த Suburbகளில் வீட்டு விலைகள் விரைவாக அதிகரித்து வருகின்றன என்ற தரவுகளை Domain நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Australia’s Indigenous education gap and the way forward - பூர்வீகக்குடி மாணவர்களுக்கான கல்வி: இடைவெளியை மூட என்ன வழி? 27.07.2025

Education is a pathway to opportunity, but for too long, Indigenous students in Australia have faced barriers to success. While challenges remain, positive change is happening. In this episode we’ll hear from Indigenous education experts and students about what’s working, why cultural education matters and how Indigenous and Western knowledge can come together to benefit all students. - பூர்வீகக்க...

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos