SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மறைந்த மூத்த கல்வியாளர் பேராசிரியர் வசந்தி தேவி அவர்களின் நேர்முகம் 07.08.2025

தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்திதேவி அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (1 ஆகஸ்ட் 2025) காலமானார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் மறுபதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் வளர்ப்பில் வேறுபாடு உள்ளதா? 07.08.2025

ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் வளர்ப்பில் வேறுபாடு உள்ளதா? இளைஞர்கள் நடத்தும் விவாதம்.பங்குபெறுபவர்கள் : கவிஜா விக்னேஸ்வரன், ஜனார்தன் குமரகுருபரன், ரமணன் ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனனி ஜெகன்மோகன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. 2016ஆம் ஆண்டு செல்வி தயாரித்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் Garma திருவிழா 07.08.2025

25வது Garma (ஃகார்மா) திருவிழா, நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் இருந்து, விருந்தினர்களை Gumatj (குமாட்ஜ்) நாட்டில் ஒன்று திரட்டியது. ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ள தொலை தூரப் பகுதியான Arnhem Land - ஆர்ன்ஹம் தேசத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் நாள் – கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நான்கு நாள் கொண்டாட்டத்தில், ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பன்...

காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் அதிபர் திட்டம் 07.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 07/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

குயின்ஸ்லாந்தில் முன்னாள் காதலியை தாக்கிய வழக்கில் இலங்கை மாணவருக்கு தண்டனை! 06.08.2025

தனது முன்னாள் காதலியை தாக்கிய இலங்கை மாணவரை குயின்ஸ்லாந்து James Cook பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

‘வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள் கண்டிப்பாக வர வேண்டும்!’ 06.08.2025

தமிழர் வரலாற்று மற்றும் பண்பாட்டு எழுத்தாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய 'இந்து தேசியம்' என்ற நூல், PATCA-வின் செயலாளர் சுமதி விஜயகுமார் அவர்களால் 'Hindu Nationalism' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், தினகரன் செல்லையா அவர்கள் எழுதிய ‘சனாதனம் அறிவோம்' என்ற இரண்டு நூல்களும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) என்ற அமைப்பின் வாசகர் வட்டம், சிட்னியில் இந்த வார இறுதியில் அற...

கல்வி மறுசீரமைப்பு: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? 05.08.2025

இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு முயற்சியில் ஆளுங்கட்சி தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

குயின்ஸ்லாந்தில் ஆசிரியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம். 05.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவுக்குள் அதிக வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க அரசு முடிவு! 05.08.2025

ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

'A threat no one else sees': The daily, invisible burden of racism for First Nations Australians - ‘மற்றவர் கண்களில் படாத அச்சுறுத்தல்': பூர்வீகக் குடிமக்கள் தினசரி எதிர்கொள்ளும் இனவெறியின் சுமை 05.08.2025

Indigenous Australians have experienced increased racism over the past decade. Young people and multicultural communities could help shift the narrative. - பூர்வீகக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இனவெறி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன. இளைஞர்களும் பன்முக கலாச்சார சமூகங்களும் அந்தக் கதையை மாற்ற உதவக்கூடும்.

‘பாலஸ்தீன ஆதரவு பேரணி அமைதியாக நடந்தது’ - பிரதமர் 05.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

DIY Renovations: What you need to know before getting started - உங்கள் வீட்டில் புதுப்பித்தல் பணிகளை தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை 04.08.2025

Many Australians love rolling up their sleeves and undertaking their own home improvements. But before you grab a hammer or paintbrush, it’s essential to understand the rules and risks so you can renovate safely and legally. - உங்கள் சமையலறையைப் புதுப்பிக்கத் திட்டமிட்டாலும் சரி அல்லது ஒரு shed அமைக்கத் திட்டமிட்டாலும் சரி, அதைப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்...

விக்டோரியாவில் அடுத்த மாதம் முதல் வெட்டுக்கத்திகளுக்கு முழுமையான தடை! 04.08.2025

விக்டோரியாவில் செப்டம்பர் முதல் நடைமுறைக்குவரும் மாநில அளவிலான வெட்டுக்கத்தி-machete தடைக்கு முன்பாக, machete ஒப்படைப்பு திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மெல்பன் சர்வதேச மாணவர் உச்சி மாநாடு 2025 04.08.2025

சர்வதேச மாணவர் உச்சி மாநாடு 2025 அண்மையில் மெல்பனில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலரது கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

YouTube: அரசு 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை செய்ய காரணம் என்ன? 04.08.2025

16 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்த கடுமையான தடைகளை ஆஸ்திரேலிய அரசு இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துகிறது. இந்தத் தடை TikTok, Instagram, Snapchat, Facebook மற்றும் X ஆகிய முக்கிய சமூக ஊடகங்களை உள்ளடக்கியது என்று அரசு முன்னர் அறிவித்திருந்தது. இப்பொழுது, முன்னதாக விலக்குக் கொடுக்கப்பட்ட YouTube தளமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திய...

சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் 90 ஆயிரம் பேர் பங்கேற்பு! 04.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 04.08.2025

'ஆப்ரேஷன் அகல்' - இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை; சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மதமாற்றக் குற்றச்சாட்டில் கைது - இந்தியாவில் பரபரப்பு; தேனியில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் தடுத்து நிறுத்தம்; பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச...

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 02.08.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (28 – 2 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 2 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

“இது ஆஸ்திரேலியத் தமிழர்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சி” 01.08.2025

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருகிறார். சிட்னி, மெல்பன் நகரங்களில் அவர் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி உரையாடுகின்றனர் பொன்ராஜ் (சிட்னி) & மூர்த்தி ரங்கராஜுலு (மெல்பன்) ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூர்வீகக் குடிமக்கள் விழா ஆரம்பமாகிறது 01.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் 31.07.2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு; கையகப்படுத்தப்பட்ட தமது விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு திருகோணமலை முத்துநகர் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

பாலஸ்தீனத்தை உடனடியாக அங்கீகரிக்க ஏன் ஆஸ்திரேலியா மறுக்கிறது? 31.07.2025

காசா பகுதியில் இஸ்ரேல் சர்வதேச சட்ட மீறல்களை செய்வதாக பல தரப்புகளும் குற்றச்சாட்டும் பின்னணியில் தாமும் இஸ்ரேலை கண்டிகிறோம் என்று கூறும் ஆஸ்திரேலிய அரசு பாலஸ்தீனத்தை உடனடியாக ஒரு நாடாக அங்கீகரிக்கத் திட்டமில்லை என கூறியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், கனடா எனும் மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகாரக்கப்போவதாக அறிவித்திருக்கும் பின்னணியில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா தாமதிக்கும் காரணங்களை...

HECS கடன் 20% குறைப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி. மாற்றங்கள் எப்போது? 31.07.2025

லேபர் அரசானது, HECS கடன்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது நேரடியாக மூன்று மில்லியன் ஆஸ்திரேலிய மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு தீர்மானமாகும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 31.07.2025

காசாவில் அதிகரிக்கும் பட்டினி உயிரிழப்புகள்; பாலஸ்தீன விவகாரம்- இருநாடுகள் என்ற தீர்வு?; பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா திட்டம்: அமெரிக்காவின் எதிர்வினை; பசிபிக் நாடுகள், தென் அமெரிக்கா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; காங்கோ குடியரசில் ஐஎஸ் தாக்குதல்: 43 பேர் உயிரிழப்பு; அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம்; மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் காலரா அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள 80,000 குழந்தைகள் உள்ளிட்...

வரலாற்று ஆளுமை: ஆஸ்திரேலிய மம்பட்டியான் ‘நெட் கெல்லி’ 31.07.2025

ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத வரலாற்று அடையாளங்களுள் முக்கியமான பெயர் நெட் கெல்லி (Ned Kelly). போற்றவும் தூற்றவுமான இருவேறு மனோவியல்புகளை மக்களின் மத்தியில் விதைத்த ஒரு விநோத ஆளுமை. ஆஸ்திரேலியாவில் அன்றைய காலனியாதிக்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக, காவல்துறைக்குப் பெரும் சவாலாயிருந்து, காடுகளில் மறைந்துவாழ்ந்து, தந்திரமாய் சுற்றிவளைக்கப்பட்டு, இறுதியில் தூக்கிலடப்பட்டவர். அவர் பற்றிய தகவல்களை “நம்...

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos