SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் ஊழியர்களுக்கு ஐந்து வார Annual Leave கோரிக்கை வலுக்கிறது 12.03.2026

ஆஸ்திரேலியாவில் தற்போது ஆண்டுக்கு நான்கு வாரங்கள் Annual Leave வழங்கப்படுகிறது. ஆனால் ஐந்து வாரங்கள் Annual Leave தரப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள் தற்போது அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

தைராய்ட் பிரச்சினைக்கு என்னென்ன சிகிச்சைகள் உள்ளன? 12.03.2026

நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியுடன் தொடர்புடையதாக ஏற்படும் நோய் நிலைமைகளில் ஒன்று hyperthyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 12 மார்ச் 2026 - வியாழக்கிழமை 11.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

வீட்டில் தீவிபத்துகளைத் தடுக்க என்ன செய்யலாம்? 11.03.2026

விக்டோரியா மாநிலத்தில் வாழ்ந்துவரும் கார்த்திக் தணிகைமணி அவர்கள், தீயணைப்புப் படையில் தன்னார்வ தொண்டராகப் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவரது பின்னணி மற்றும் அனுபவம் தொடர்பிலும் நமது வீடுகளில் ஏற்படக்கூடிய தீவிபத்துக்களை எப்படித் தடுக்கலாம் என்பது குறித்தும் அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் தீவிபத்து சந்தர்ப்பங்களில் காவல்துறையினரின் பணி தொடர்பில் விக்டோரிய காவல்துறை அதிகாரி ராஜேஷ்...

ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு உயர்வு – பொருளாதாரத்திற்கு நல்லதா கெட்டதா? 11.03.2026

ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு பல மாதங்களாக வலுவாக உள்ள நிலையில் அது நமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சாமானிய மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை விரிவாக விளக்குகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேல...

செய்தியின் பின்னணி: மத்திய கிழக்கு மோதல்-ஆஸ்திரேலியா எத்தகைய இராணுவ உதவியை வழங்குகிறது 11.03.2026

மத்தியகிழக்கில் பதற்றநிலை தொடர்கின்ற பின்னணியில் அப்பிராந்திய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா வழங்கும் இராணுவ உதவி குறித்து Briana Charles எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 11 மார்ச் 2026 - புதன்கிழமை 10.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளும், ஈரான் போர் எதிர்ப்பு போராட்டமும் 10.03.2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்புகள். அரசியல் கட்சிகள் போன்றவை பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

National கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் David Littleproud 10.03.2026

ஆஸ்திரேலியாவின் National கட்சித் தலைவர் David Littleproud தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 10 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை 10.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி கட்டணம் செலுத்த வேண்டும் 09.03.2026

விக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles-ஐப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

அதிகளவான ஆஸ்திரேலியர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் புற்றுநோய் எது தெரியுமா? 09.03.2026

ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் தொடர்பான மரணங்களில் Upper gastrointestinal (GI) புற்றுநோய்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

அகதிகளின் பல்சுகாதாரத்தை ஆராயும் தமிழ் ஆராய்ச்சியாளர் சுவாதி குமார்ஈஸ்வர் 09.03.2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதி குமார்ஈஸ்வர், தற்போது ஆஸ்திரேலியாவில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் பல்சுகாதாரம் மற்றும் வாய்சுகாதாரம் தொடர்பான முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், தனது கல்விப் பின்னணி, மற்றும் சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் தனது ஆராய்ச்சி குறித்து பகிர்ந்து கொள்கிறார். இந்த உரையாடலில், அவரின் வாழ்க்கைப் பயணத்தையும், ஆராய்ச்சி...

செய்தியின் பின்னணி : இஸ்ரேல்–ஈரான் மோதல் - நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள்! 09.03.2026

மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்கும் சேவைகளை தொண்டு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து SBS Arabic-இற்காக ஆங்கிலத்தில் Farah Tawfik எழுதிய விவரணத்தை அடிபடையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 09 மார்ச் 2026 - திங்கட்கிழமை 09.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01– 07 மார்ச் 2026) 06.03.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (01– 07 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.

செய்தியின் பின்னணி: எண்ணெய், விமானப் பயணம், குடிமக்கள் பாதுகாப்பு – போரின் புதிய முகம் 06.03.2026

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் பிற சர்வதேச தரப்புகளின் நிலைப்பாடுகளையும் இணைத்து, இன்று உலக அரசியலில் மிகப் பெரிய அதிர்வாக மாறியுள்ள அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் குறித்த சமீபத்திய செய்திகளோடு, செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் 06.03.2026

இலங்கையில் யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

‘விண்வெளி அறிவியலே எனக்கு அதீத உற்சாகத்தைத் தருகிறது” 06.03.2026

ஆஸ்திரேலியாவில் வாழும் சுக்ருதி நாராயணன் ஒரு பொறியாளர். மட்டுமல்ல, பத்திரிகையாளர், திரைப்பட நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர். தற்போது 108 நாடுகளை இணைக்கும், 12,000 பெண்கள் பங்கேற்கும் உலகின் முதன் முதலாக பெண்களை மட்டுமே வழிநடத்தும் சந்திர ஆய்வு முயற்சியான “மிஷன் சக்திசாட் (ShakthiSAT)” இன் உலகளாவிய கூட்டாண்மைத் தலைவராகவும், AIMERS Fo...

இன்றைய செய்திகள்: 06 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை 06.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

108 நாடுகளின் 12,000 பெண்களின் விண்வெளி கனவுகளை வழிநடத்தும் தமிழ் பெண்! 05.03.2026

ஆஸ்திரேலியாவில் வாழும் சுக்ருதி நாராயணன் ஒரு பொறியாளர். மட்டுமல்ல, பத்திரிகையாளர், திரைப்பட நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர். தற்போது 108 நாடுகளை இணைக்கும், 12,000 பெண்கள் பங்கேற்கும் உலகின் முதன் முதலாக பெண்களை மட்டுமே வழிநடத்தும் சந்திர ஆய்வு முயற்சியான “மிஷன் சக்திசாட் (ShakthiSAT)” இன் உலகளாவிய கூட்டாண்மைத் தலைவராகவும், AIMERS Fo...

ஈரானின் போர் கப்பல் மீட்பு நடவடிக்கை – இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்தி 05.03.2026

இலங்கையின் தென் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இலங்கைக்கு அருகே மூழ்கிய ஈரான் போர்க் கப்பல் 05.03.2026

இலங்கையின் தென் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலியாவுக்கான Temporary Graduate விசா கட்டணம் அதிகரிப்பு! 05.03.2026

ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த பிறகு வேலை செய்ய அனுமதிக்கும் Temporary Graduate Visa (Subclass 485) தொடர்பான விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Osteoporosis வராமல் தடுப்பது எப்படி? 05.03.2026

பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் Osteoporosis உம் ஒன்று. Osteoporosis பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos