SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆஸ்திரேலியாவின் தேசிய மலராக வாட்டில் மலர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? 19.03.2026

ஒவ்வொரு நாடும், மாநிலங்களும் தங்களுக்கென்று கொடி, விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், பூ என பல தனித்த, தனித்துவ அடையாளங்களைத் தக்கவைத்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் coat of arms-ல் இடம் பெற்றிருக்கும் கோல்டன் வாட்டில் மலர் ஏன் தெரிவு செய்யப்பட்டது? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழி விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

இன்றைய செய்திகள்: 19 மார்ச் 2026 வியாழக்கிழமை 19.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/03/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

ஆஸ்திரேலியா ஏன் பெட்ரோல் சிக்கலை எதிர்கொள்கிறது? சமாளிக்குமா? 18.03.2026

நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா பெட்ரோல் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் சிக்கலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா இந்த சிக்கலை சமாளிக்குமா என்று ஊடகங்கள் தரும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

குடிவரவு தடுப்புக் காவல்: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு 18.03.2026

காலவரையற்ற குடிவரவு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை கண்காணிக்க அரசு கொண்டு வந்த புதிய நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி: தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் களம்: சனிக்கிழமை வெற்றி யாருக்கு? 18.03.2026

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி எதிர் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கட்சிகள் முன்வைக்கும் வாக்குறுதிகள் என்ன, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார் றைசெல்.

ரமலான் & ஆஸ்திரேலியாவில் மேலோங்கும் Islamophobia: இளம் முஸ்லீம்களின் பார்வை 18.03.2026

உலகெங்கும் ரமலான் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் பின்னணியில் ரமலான் விழா குறித்தும், ரமலான் விழாவை எப்படி கொண்டாடுகின்றோம் என்றும், ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வெறுப்பு குறித்தும் இளைய தலைமுறை முஸ்லிம்கள் கலந்துரையாடுகின்றனர். பங்கேற்றவர்கள்: மொகமட் ரேஹான் (Melbourne) சாதியா ஷரீஃப் (Townsville, நஜீத் ரஹ்மான் (Melbourne), ஹலீமா அஃப்ரீன் ( Melbourne) & மஹதீயா காலீத் (...

இலங்கை: எரிபொருள் நெருக்கடிக்கு அரசு வழங்கும் தீர்வுகள் என்ன? 18.03.2026

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பங்கீட்டு முறை மூலம் எரிபொருள் வழங்கல், வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை என்று அரசு பல திட்டங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இன்றைய செய்திகள்: 18 மார்ச் 2026, புதன்கிழமை. 18.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

பெட்ரோல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் பணத்தை எப்படி சேமிக்கலாம்? 17.03.2026

நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோலின் சராசரி விலை லிட்டருக்கு 2 டாலரைத் தாண்டியுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் எப்படி சேமிக்கலாம்? இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நாட்டின் வட்டி வீதம் மீண்டும் உயர்ந்தது! 17.03.2026

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

NSW Health வழங்கும் மொழிபெயர்த்துரைப்பாளர் புலமைப்பரிசில் திட்டம் 16.03.2026

NSW Health மொழிபெயர்த்துரைப்பாளர் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பயண எச்சரிக்கை 16.03.2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆழ்ந்த மனித நேயத்துடன் இரத்த தானம் செய்யும் AIMA 16.03.2026

ஆஸ்திரேலிய இஸ்லாமிய மருத்துவ சங்கம் (Australian Islamic Medical Association – AIMA) பல ஆண்டுகளாக இரத்ததான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக Bondi பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் AIMA நடத்திய சிறப்பு இரத்ததான சேவை ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாக கவனம் பெற்றது. ரமலான் காலத்தில், தானமும் சமூகச் சேவையும் அதிகமாக வலியுறுத்தப்படும் நிலையில், AIMA அமைப்பின் சமூகப் பணிகள் குறித்து அதன் தலைவர் டாக...

இன்றைய செய்திகள்: 16 மார்ச் 2026 - திங்கட்கிழமை 16.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

More than style: How First Nations fashion is growing in Australia - பூர்வீகக் குடிமக்களின் Fashion: ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு 15.03.2026

If you’ve spent any time in Australia, you’ve probably noticed how relaxed the style is. You might notice activewear, surf brands and casual clothes everywhere. But there’s another side to Australian fashion. Aboriginal and Torres Strait Islander designers have been creating clothes and accessories for thousands of years — and that work is very much alive today. You’ll see it on runways, in global...

கொழும்பு – மெல்பன் விமான சேவைகளை விரிவுபடுத்தும் SriLankan Airlines 15.03.2026

கொழும்பு – மெல்பன் இடையிலான விமானசேவைகளை அதிகரிக்கவுள்ளதாக SriLankan Airlines அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (8 – 14 மார்ச் 2026) 13.03.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (8 – 14 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

செய்தியின் பின்னணி : தற்காலிக விசா தொடர்பில் அரசு திட்டமிடும் புதிய கட்டுப்பாடுகள் 13.03.2026

உள்துறை அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய குடிவரவு சட்ட முன்வரைவு, மனிதாபிமான மதிப்புகளுக்கும் அகதி பாதுகாப்பு கொள்கைகளுக்கும் எதிராக இருப்பதாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

தமிழ்த் தடம்: கபிலர் 13.03.2026

தமிழ் இலக்கிய மரபில் கபிலரின் பங்களிப்பு குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு : றைசல்

செய்தியின் பின்னணி: விமானக் கட்டணங்கள் ஏன் மீண்டும் உயர்கின்றன? 13.03.2026

ஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல பிற நாடுகளுக்குச் செல்வதற்கான விமானக் கட்டணங்கள் மீண்டும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 13 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை 13.03.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் மெல்பன் முதலிடம்! 13.03.2026

புதிய தரவரிசைப் பட்டியல் ஒன்றில் மெல்பன் நகரம் உலகின் சிறந்த நகரமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

பெட்ரோல் விலையை உயரச் செய்யும் ஹோர்முஸ் நீரிணையின் பின்னணி என்ன? 12.03.2026

மத்தியகிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் ஈரான் நாட்டுக்குக்கு மிக அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணை (Straight of Hormuz) வழியாகவே பெட்ரோலிய எண்ணெயை ஏற்றிவரச் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையமுடியும் என்பதால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவ...

ஆஸ்திரேலிய உணவுகளின் பின்னணியில் இருக்கும் கதைகள் தெரியுமா? 12.03.2026

ஆஸ்திரேலியாவின் தனித்துவ உணவுகளாக லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா என்று நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான கதைகளும் உண்டு. அவைகளை தனக்கே உரித்தான சுவையாக கதை சொல்லும் பாணியில் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

பாம்புப் பெண் & சிலந்திப் பெண் 12.03.2026

கரப்பான் பூச்சி, பல்லி இதையெல்லாம் பார்த்துவிட்டால்கூட 'ஆ...' என்று அலறிக் குதித்து களேபரம் செய்யும் பெண்கள் மத்தியில் சிலந்தியை வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயனி மற்றும் தஞ்சாவூர் சந்தியா தங்களது ஊருக்குள் வரும் பாம்பை மீட்டு அப்புறப்படுத்தி காட்டுப் பகுதியில் கொண்டு விடுவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். இவர்களின் அனுபவங்களை விவரிக...

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos