Thanga Jaisakthivel

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories

Arts TA ↓ 228 episodes

தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”

Author

Thanga Jaisakthivel

Category

Arts

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பேய்க் கவிதை - தஞ்சை பிரகாஷ் 28.04.2020

அண்ணன் தங்கை உறவு இப்படியும் இருக்குமா? என எண்ணவைக்கும் சிறுகதை. கவிதை புரிய வேண்டுமா? புரியாத கவிதையை என்ன செய்யலாம். இங்கு கவிதை யார்? கேளுங்கள் தஞ்சை பிரகாஷ் எழுதிய பேய்க் கவிதை.

பரிகாரம் ~ சந்திரகிருஷ்ணன் 27.04.2020

நண்பர்களுடன் பள்ளிப் பருவத்தில் விளையாட்டாக பேசிய ஒன்று தினமும் கனவில் வந்து தொல்லைக் கொடுத்தால் எப்படியிருக்கும். அது என்ன? விரிவாக அறிந்துகொள்ள ‘பரிகாரம்’ சிறுகதையைக் கேளுங்கள். எழுதியவர் ~ சந்திரகிருஷ்ணன். இது தாமரை, ஜனவரி 1999 இதழில் வெளிவந்த சிறுகதை.

எஸ்தர் ~ வண்ணநிலவன் 26.04.2020

எஸ்தர் சித்தி எப்படி ஒரு குடும்பத்தையே தாங்கி நின்று கரைசேர்கிறாள். ஒரு கிராமம் எப்படி வறட்சியால் காணாமல் போகிறது என்பதை வண்ணநிலவன் ‘எஸ்தர்’ சிறுகதை பதிவு செய்கிறது.

மார்ஷல் ரோடு ~ தங்க.ஜெய்சக்திவேல் 25.04.2020

சென்னையில் ஆயிரக்கணக்கான வௌவால்களை ஒருசேர எக்மோர் மியூசியத்தின் பின்புறம் பார்க்கலாம். இந்த வௌவால்களுக்கும் ஶ்ரீவைகுண்டம் வௌவால்களுக்கும் ஒரு மீயொலி தொடர்புள்ளது. அறிந்துகொள்ள தங்க.ஜெய்சக்திவேல் எழுதியுள்ள ‘மார்ஷல் ரோடு’ சிறுகதையைக் கேளுங்கள்.

அம்மா ஒரு கொலை செய்தாள் ~ அம்பை 24.04.2020

வயதுக்கு வரும் தருணத்தில் ஒரு பெண் குழந்தையின் குழப்பமான மனநிலையையும், ஏக்கத்தோடு அம்மாவின் அன்பு மொழிகளையும் எதிர்பார்த்து ஏமாறும் ஒரு குழந்தையின் மனப்பதிவை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதையில் ~ அம்பை நேற்றிப்பொட்டில் அடித்தார்போல் சொல்லிச் சென்றிருப்பார்.

பள்ளம் ~ சுந்தர ராமசாமி 23.04.2020

மதுக்குஞ்சுவின் கண் ஏன் நோண்டி எடுக்கப்பட்டது? என்று அறிந்துகொள்வதில் எனக்கும் அவ்வளவு ஆர்வம். ஆனால் அதனைக் கேட்டபின்னர் மனது என்னவோ செய்த்தது. ‘பள்ளம்’ சிறுகதையில் மதுக்குஞ்சுவின் வாழ்வினை மிக அழகாக சித்தரித்திருப்பார் ~ சுந்தர ராமசாமி.

காஞ்சனை ~ புதுமைப்பித்தன் 22.04.2020

ஒரு எழுத்தாளனின் கற்பனை இரவுகள் உண்மையானால் என்னவாகும். இரவு 12 மணிவரை உறங்காதவரா நீங்கள்? அப்படியானால் கண்டிப்பாக இந்த கதையை கேட்காதீர்கள். ‘காஞ்சனை’யில் ~ புதுமைப்பித்தன் வார்த்தைகளில் விளையாடி இருப்பார்.

நாற்காலி ~ கி. ராஜநாராயணன் 21.04.2020

முதன் முதலில் ஒரு வீட்டில் நாற்காலி வந்த போது அந்த கிராமமே அதை அதிசயத்துடன் பார்த்தது. அந்த நாற்காலியில் இறந்தவர்களை உட்கார வைத்தால் எப்படியிருக்கும்? நாற்காலி சிறுகதையில் நகைச்சுவையுடன் அதை ~ கி. ராஜநாராயணன் விவரித்து இருப்பார்.

புயல் ~ கோபிகிருஷ்ணன் 20.04.2020

அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்து கொண்டவர்கள் நிறைந்த கதை தான் இந்த ‘புயல்’ சிறுகதை எழுதியவர் ~ கோபிகிருஷ்ணன்.

மரிய புஷ்பத்தின் சைக்கிள் ~ நரன் 19.04.2020

சைக்கில்களுக்கும் காதல்களுக்கும் அவ்வளவு ஒற்றுமை. மாற்று திறன் கொண்ட அந்த ஒரு தலைக்காதலை அவ்வளவு உணர்வுபூர்வமாக ‘மரிய புஷ்பத்தின் சைக்கிள்’ சிறுகதையில் ~ நரன் எழுதியுள்ளார்.

மிஸ் பாக்கியம் ~ ஜி. நாகராஜன் 18.04.2020

முதிர் கன்னியின் வாழ்வு எவ்வளவு கொடூரமானது. மிஸ் பாகியத்தின் உணர்வுகள் உண்மையானது. மிஸ் பாக்கியத்தின் மனதை அப்படியே இந்த சிறுகதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஜி. நாகராஜன்.

சங்கேதங்களும் குறியீடுகளும் ~ விளாதிமிர் நபகோவ் 17.04.2020

ஒரு வயதான தம்பதியர் தனது மகனை மருத்துவமனையில் விட்டுவிட்டு தனிமை துயரை அனுபவிக்கும் கதைதான் ‘சங்கேதங்களும் குறியீடுகளும்’. இதில் ~ விளாதிமிர் நபகோவ் வார்த்தைகளை நெல்மணிகளைப் போல் பயன்படுத்தி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது பிளாட்பாரம் - மோனிகா 16.04.2020

உயிர்மை மார்ச் 2020 இதழில் இடம்பெற்ற இந்த ‘ஐந்தாவது பிளாட்பாரம்’ சிறுகதையை எழுதியவர் மோனிகா.

தொலைவு ~ பூமணி 15.04.2020

குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் படும் பாட்டினை ‘தொலைவு’ சிறுகதையில் ~ பூமணி எழுதியிருக்கும் விதம் கரிசல் காட்டின் வாழ்க்கையை நம் கண் முன் கொண்டுவருகிறது.

கண்ணம்மா ~ விந்தன் 14.04.2020

பழனியப்பனின் காதல் நிறைவேற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. அதற்கான காரணம் தெரிந்துகொள்ள கேளுங்கள் ‘கண்ணம்மா’ எழுதியவர் ~ விந்தன்.

தெளிவு ~ வல்லிக்கண்ணன் 13.04.2020

தங்கம் எப்படி ஒரு மனிதனை பைத்தியம் ஆக்குகிறது என்பதை ‘தெளிவு’ சிறுகதையில் ~ வல்லிக்கண்ணன் விளக்கியிருப்பார்.

மன மகிழ்ச்சி ~ திருலோக சீதாராமன் 12.04.2020

மூன்று பெண்களைப் பெற்ற ஒரு தந்தை அவர்களுக்கு எவ்வளவு சிரமப்பட்டு திருமணம் முடித்தார் என்பதை ‘மன மகிழ்ச்சி’ சிறுகதையில் அழகாக எழுதியுள்ளார் ~ திருலோக சீதாராமன்.

காற்று ~ கு. அழகிரிசாமி 11.04.2020

ஐந்து வயது சிறுமிக்கு என்னவெல்லாம் ஆசையிருக்கும் என்பதை மனதின் உள்ளே சென்று பார்கிறார் ‘காற்று’ சிறுகதையில் கு. அழகிரிசாமி

உத்தராயணம் ~ லா.ச.ராமாமிருதம் 11.04.2020

ஒரு தந்தை, தனது பருவ வயது குழந்தைகளோடு சந்திக்கும் சவால்கள், வேலை, வீடு, டி.வி, இவற்றிற்கு இடையே பயணிக்கிறது ‘உத்தராயணம்’, ~ லா.ச.ராமாமிருதத்தின் மொழி நடை வானொலிக்கு சவலான ஒன்று என்பதற்கு இந்த சிறுகதை உதாரணம்.

கற்பூர பொம்மை - ரா.செந்தில் குமார் 09.04.2020

கற்பூர பொம்மை சிறுகதை ரா.செந்தில் குமார் அவர்களால் 1-4-2020 ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றது. ஒலிப்பதிவில் தவறுதலாக மார்ச் என்று இருக்கும்.

தொடரும் நிழல் ~ எம்.வி.வெங்கட்ராம் 08.04.2020

பாவம் அடுத்தடுத்த ஜென்மமும் தொடருமா? கர்மா என்று ஒன்று இருக்கிறதா? இந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான தண்டனை அடுத்த ஜன்மத்தில் என்றால் எப்படி? இவை அனைத்தினையும் கேள்விக்குள்ளாகுகிறது இந்த ‘தொடரும் நிழல்’ ~ எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் மொழி நடையே தனித்துவமானது.

அநுபவ நாடகம் ~ கல்கி 07.04.2020

குதிரைப் பந்தயம் எந்த அளவிற்கு ஒருவனை பைத்தியம் ஆக்கும் என்பதை நகைச்சுவையுடன் இந்த ‘அநுபவ நாடகம்’ எனும் சிறுகதையில் ~ கல்கி எழுதியுள்ளார்.

சால்வை ~ ஸிந்தியா ஒசிக் 06.04.2020

ஜெர்மானியர்களின் விஷவாயுக் கிடங்கின் நேரடி பாதிப்பில் உருவான மிகச் சிறந்த படைப்புகளில் இன்று ‘சால்வை’ இதை தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்து இருந்தார் சி.மோகன்.

கிட்டத்தட்டப் பத்துகதைகள் ~ ரூயி மேனுயேல் அமரால் 05.04.2020

மாய எதார்த்தவாதமா? நேரடி பனுவலா? 32 பற்களும் விழுந்து, பல்லி மனிதனாக ஆகி, ஆன்மாவை தொலைத்த பலரின் கதைகளை ரூயி மேனுயேல் அமரால் தனது ‘கிட்டத்தட்டப் பத்துகதைகளில்’ எழுதியுள்ளார்.

அளகபாரம் ~ கிருஷ்ணமூர்த்தி 05.04.2020

புதிதாக திருமணமான கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவும், குழந்தை இல்லாத ஏக்கமும், ஐ.டி நிறுவனங்களின் போக்கையும் ‘அளகபாரம்’ சிறுகதையில் ~ கிருஷ்ணமூர்த்தி புட்டு புட்டு வைத்து செல்கிறார்.

Listen to the தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.