Thanga Jaisakthivel

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories

Arts TA ↓ 228 episodes

தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”

Author

Thanga Jaisakthivel

Category

Arts

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பந்தயம் ~ ஆன்டன் செகாவ் 03.04.2020

ஒரு வீட்டில் நீங்கள் எவ்வளவு நாட்கள் தனியாக இருக்க முடியும். இந்த ‘பந்தயம்’ கதையின் நாயகன் 15 ஆண்டுகள் தன்னை தனிமை படுத்திக் கொண்டார். ஆன்டன் செகாவ் ஒரு அருமையான கதை சொல்லி என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தமிழில் பாஸ்கரன் அவ்வளவு நேர்த்தியாக இந்த கதையை மொழிபெயர்த்துள்ளார். கதையை அறிமுகம் செய்த எஸ்.ராவுக்கு நன்றி.

வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள் - றஷ்மி 02.04.2020

கணவன் மனைவியின் மிக இயல்பாக எடுத்து சொல்லும் கதை தான் வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள். றஷ்மிக்கு என்று ஒரு நடை உண்டு, அதனை இதில் காணலாம். ஈழத்தமிழின் நெடி சிறுகதை எங்கும் பரவியுள்ளது.

நொண்டிக் குழந்தை ~ சி.சு.செல்லப்பா 01.04.2020

போலியாவால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, சக குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்தோடு பார்க்கும் அந்த காட்சியை அவ்வளவு அழகாக எழுத்தில் வார்த்திருப்பார் ‘நொண்டிக் குழந்தை’ சிறுகதையில் ~ சி.சு.செல்லப்பா.

சிலிர்ப்பு ~ தி. ஜானகிராமன் 31.03.2020

பத்து வயது பெண் குழந்தை படிப்பை விட்டு வீட்டு வேலைக்கு கொல்கத்தாவுக்கு செல்கிறது. வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என இந்த கதையில் தி. ஜானகிராமன் உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார்.

காலச் சக்கரம் ~ வை.மு.கோதைநாயகி அம்மாள் 31.03.2020

ஒரு காதல் ஜோடியை காலச் சக்கரம் என்னவெல்லாம் செய்யும். இந்த ‘காலச் சக்கரம்’ என்னும் சிறுகதையில் ~ வை.மு.கோதைநாயகி அம்மாள் மிக அழகாக கடத்தியுள்ளார்.

சாவித்திரி ~ க.நா.சுப்பிரமணியம் 29.03.2020

இளம் வயது பெண்ணின் இறப்பு எதிர் வீட்டில் எந்த வகையான மாற்றத்தினை ஏற்படுத்தும். கேளுங்கள் ‘சாவித்திரி’ சிறுகதையை. எழுதியவர் ~ க.நா.சுப்பிரமணியம்.

கோட்டை வீடு ~ வ.ரா. 28.03.2020

குழந்தைகள் திருமணம் செய்து கொண்டு சொந்த வீடு கட்டி வாழ முடியுமா? ‘கோட்டை வீடு’ சிறுகதையில் ~ வ.ரா. முடியும் என்கிறார்.

ஒரு ஜோடிக் காளை ~ தி.ஜ.ர. 27.03.2020

நிழக்கிழார்கள் ஒரு சாமானியன் சொத்தை அபகரித்தால் என்னவாகும்! கேளுங்கள் ‘ஒரு ஜோடிக் காளை’ எனும் தி.ஜ.ர. எழுதிய இந்த சிறுகதையை.

கலகக்காரன் - அரிசங்கர் 26.03.2020

இன்றைய ஐ.டி நிறுவனத்தில் நடப்பவற்றை புதிய மொழியில் எழுதியுள்ளார் கலகக்காரன் அரிசங்கர். பாபல், ஜனவரி 2020 இதழில் (பக்கம் 63~69) இடம்பெற்று இருந்தது.

அடுத்த ரயில் - சைலபதி 19.03.2020

ரயிலில் தினமும் பல பெண்களை பார்கிறோம். அவர்கள் நமக்கு விட்டுச்செல்வது என்ன? கதையைக் கேளுங்கள். சைலபதி எழுதி ஆனந்த விகடன், 12-2-2020 இதழில் பக்கம் 48~53ல் இடம் பெற்ற சிறுகதை.

இறகுகள் - ரேமண்ட் கார்வர் 12.03.2020

ஜி.குப்புசாமி சாமி அவர்கள் மொழிப்பெயர்த்த இந்த கதை காலச்சுவடு, பிப்ரவரி 2020ல் இடம் பெற்று இருந்தது. குழந்தை வேண்டாம் என்று இருந்த தம்பதிக்கு, ஏன் குழந்தை வேண்டும் என்றானது, கேளுங்கள் கதையை!

அழியாச் சுடர் - மெளனி 05.03.2020

ஒரு மனிதனின் உணர்வுகளை படம் பிடித்து காட்டும் சிறுகதை.

தனி - சம்பத் 27.02.2020

விருட்சம் வெளியீடாக அழகியசிங்கர் தொகுத்த புத்தகத்தில் இடம்பெற்ற இந்த சிறுகதை 1970 கணையாழி இதழில் இடம்பெற்றது. குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை பதிவு செய்கிறது ‘தனி’

விஜய தசமி - ந.பிச்சமூர்த்தி 13.02.2020

லஷ்மி என்னும் சிறுமி தனது இல்லத்தில் கொலு வைக்க முடியாமல் படும் பாட்டினை உணர்வு பூர்வமாக எழுதியுள்ளார் ந.பிச்சமூர்த்தி.

சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை - உமையாழ் 13.02.2020

வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக சம்பாதித்து குடும்பத்தினை எப்படியாவது ஒரு நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்த உள்ளங்கள் என்னவாயின என்பதை நெற்றிப் பொட்டில் அடித்து சொல்லும் கதை. | CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை | வெளியீடு: யாவரும் பதிப்பகம் | 9042461472

எழுத்தரின் மரணம் - அந்தோன் சேகவ் 06.02.2020

ஒரு தும்மல் ஒரு எழுத்தாளரை மரணம் வரை இட்டுச் செல்லுமா? செல்லும் செர்வியாக் அப்படித் தான் இறந்து போனார். விருட்சம் - 111, செப்டம்பர்~நவம்பர் 2019 இதழில் (பக்கம் 76~81) இடம் பெற்றது.

தண்ணீரின் திறவுகோல் - எஸ்.ராமகிருஷ்ணன் 30.01.2020

காலச்சுவடு, ஜனவரி 2020 இதழில் (பக்கம் 20~26) எழுதிய சிறுகதையின் வானொலி வடிவம். போர்ஹேசுடன் திருவடி நடத்தும் உரையாடல் வெகு சுவாரஷ்யம் கொண்டது. போர்ஹேஸ் இந்தியாவை பார்க்க வேண்டும் என வேண்டிக் கொண்டான் திருவடி.

மதினிமார்கள் கதை - கோணங்கி 23.01.2020

கோணங்கியின் மிக முக்கியமான கதைகளில் ஒன்று இந்த மதினிமார்கள் கதை. கோணங்கியின் இந்த எழுத்து விருதுநகர் வட்டார வழக்கை கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன் 16.01.2020

1952-ல் தி.ஜானகிராமன் சேலத்து நெசவாளர்களின் பஞ்சத்தினை மையமாக வைத்து எழுதிய கதை.

மர்பி ரேடியோ - வே.ராமசாமி 13.01.2020

இந்து தமிழ் திசை, பொங்கல் மலர் 2029, பக்கம் 190-197.

திசை - முத்துராசா குமார் 11.01.2020

ஆனந்த விகடன், 15 ஜனவரி 2020, பக்கம் 84-92

எவரது குற்றம் - எஸ்.ராமகிருஷ்ணன் 30.11.2019

இந்து தமிழ் திசை தீபாவளி மலர் 2019ல் பக்கம் 240 முதல் 247 வரை இடம் பெற்ற சிறுகதையின் வானொலி வடிவம். பதிவு செய்த நாள் 28-10-2019. குரல்: தங்க.ஜெய்சக்திவேல்

கலைஞன் - ஜி.ஆர்.சுரேந்தர்நாத் 23.11.2019

விகடன் தீபாவளி மலர் 2019ல் பக்கம் 368 முதல் 377 வரை வெளியான சிறுகதையின் வானொலி வடிவம். பதிவு செய்த நாள் 26-10-2019. குரல்: தங்க.ஜெய்சக்திவேல்

களி - சுனில் கிருஷ்ணன் 23.11.2019

தினகரன் 2019 தீபாவளி மலரில் பக்கம் 292 முதல் 302 வரையான பக்கங்களில் இடம் பெற்ற சிறுகதையின் வானொலி வடிவம். ஒலிபதிவு செய்த நாள் 29-10-2019. குரல்: தங்க.ஜெய்சக்திவேல்

ஓட்டம் - நர்சிம் 09.11.2019

விகடன் தீபாவளி மலர் 2019ல் பக்கம் 286 முதல் 291 வரை இடம் பெற்றிருந்த சிறுகதை. பதிவு செய்த நாள் 26 -10-2019. குரல்: தங்க.ஜெய்சக்திவேல்

Listen to the தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.