Thanga Jaisakthivel

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories

Arts TA ↓ 228 episodes

தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”

Author

Thanga Jaisakthivel

Category

Arts

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பச்சை பூனை ~ ஹெச்.ஜி. ரசூல் 31.05.2026

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீனத்துவ எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல் எழுதிய 'பச்சை பூனை' சிறுகதை, 2002-ல் வெளியான 'சலாம் இசுலாம்' தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கதை இஸ்லாமிய வாழ்வியலில் நிலவும் இறையியல் மாற்றங்கள் மற்றும் சமூகச் சிக்கல்களை விளிம்புநிலை மக்களின் பார்வையில் நுணுக்கமாக விவரிக்கிறது. மதம், கலாச்சார மரபுவழி கட்டுப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி, சிறுபான்மை மற்றும் பெண்ணி...

நான் ஒன்றும் நளாயினி இல்லை ~ ஜோதிர்லதா கிரிஜா 24.05.2026

ஜோதிர்லதா கிரிஜா எழுதிய 'நான் ஒன்றும் நளாயினி இல்லை' சிறுகதை, புராண காலத்து பொறுமை வாய்ந்த நளாயினி போல அடிமையாக வாழ மறுத்து, தற்காலப் பெண்ணின் சுதந்திரம் மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தும் ஒரு பெண்ணிய படைப்பாகும். குடும்ப ஒடுக்குமுறைகளை உடைத்து, தன் அடையாளத்தை நிலைநாட்ட விரும்பும் பெண்ணின் குரலாக இக்கதை அமைந்துள்ளது.

இறந்தவன் எழுதுகிறேன் ~ கோரி 17.05.2026

இறந்தவன் எழுதுகிறேன் ~ கோரி

வந்தாரை ~ அ. கரீம் 10.05.2026

வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் அ. கரீம் (A. Kareem) எழுதிய 'வந்தாரை' என்ற சிறுகதை, 1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நிகழ்ந்த வன்முறைச் சூழலின்போது சாதாரண இஸ்லாமிய மக்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், குறிப்பாக ரத்தினபுரி போன்ற பகுதிகளில் நிலவிய பதற்றத்தையும் ஒரு சாட்சியமாகப் பதிவு செய்கிறது. இக்கதை அவரது புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான 'தாழிடப்பட்ட கதவுகள்' (Ethir Veliyeedu வெளியீடு) நூலில...

இந்தியா கேட் ~ காவேரி 03.05.2026

எழுத்தாளர் காவேரி (லக்ஷ்மி கண்ணன்) எழுதிய 'இந்தியா கேட்' சிறுகதை, பெண்கள் மீதான கலாச்சார கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களின் சுதந்திரத்தை முடக்கும் சமூகச் சூழலை, டெல்லி இந்தியா கேட் பின்னணியில் விவரிக்கும் ஒரு காத்திரமான படைப்பாகும். இக்கதை, பத்மினி என்ற பாத்திரத்தின் வழியாகப் புகுந்த வீட்டின் கட்டுப்பாடுகளையும், வெளிகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் தடைகளையும் அம்பலப்படுத்துகிறது.

வான்கா ~அந்தோன் செகாவ் 26.04.2026

அன்டன் செக்கோவ்  (Anton Chekhov) எழுதிய புகழ்பெற்ற ரஷ்யச் சிறுகதை "வான்கா" (1886). இது மாஸ்கோவில் செருப்புத் தொழிலாளியிடம் வேலை செய்யும் 9 வயது அனாதை சிறுவன் வான்கா, தன் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தைப் பற்றியது. கொடூரமான எஜமானரிடம் சித்திரவதைகளை அனுபவிக்கும் சிறுவனின் பசி, தனிமை மற்றும் தாத்தாவைச் சந்திக்க ஏங்கும் அவல நிலையை இக்கதை சித்தரிக்கிறது.

தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு 30.10.2023

தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு

பிரியங்கள் ஓய்வதில்லை ~ ரேவதி பாலு 30.10.2023

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்ச...

நஞ்சு ~ வாசந்தி 23.10.2023

பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட வாஸந்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல...

இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி ~ கண்மணி ராஜா 16.10.2023

இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் சிறுகதையை கண்மணி ராஜா எழுதியுள்ளார். இவரின் இந்தக் கதை தமிழ் சிறுகதை உலகில் மிகவும் பேசப்பட்ட ஒரு கதையாகும்.

குழப்பத்தின் சுற்றுப்பாதை ~ சல்மா 09.10.2023

குழப்பத்தின் சுற்றுப்பாதையில், ஒரு பெண் தன் கல்வியறிவற்ற தாய்க்கு அவள் எழுப்பும் காதல், வெறுப்பு மற்றும் கோபம் போன்ற முரண்பட்ட உணர்ச்சிகளை சமாளிக்க கடிதம் எழுதுகிறாள். தாய், தன் கணவனுக்கு அடிமையாகி, தன் குழந்தைகளின் மீது பற்று கொண்டு, மருமகளை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்குத் துன்புறுத்தினாள். கடிதத்தில், அவள் இந்த தேவையற்ற விரோதத்தை உணர முயற்சிக்கிறாள், ஆனால் அவளுடைய செயல்களை அரிதாகவே புரிந்து க...

ஓர் அகலிகளையின் மகள் ~ அய்க்கண் 02.10.2023

அய்க்கண் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர் எழுதிய நாடகம் முதல் பரிசு பெற்றது. இந்நாடகம் 19...

ஷர்புதீன் பக்ரீஷா ~ கழனியூரன் 25.09.2023

எம். எஸ். அப்துல் காதர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை செவக்காட்டு கதைசொல்லி என்கிற...

வெள்ளிக்கிழமை ~ நாகூர் ரூமி 18.09.2023

இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ...

நளாயினி ~ கலைஞர் மு. கருணாநிதி 11.09.2023

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்...

ஹிட்லினி ~ ஆதவன் தீட்சண்யா 04.09.2023

எஸ். எம். இரவிச்சந்திரன்⁠ என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா ⁠தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்⁠ (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், ⁠தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.⁠⁠ புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.⁠

ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் ~ சு.சமுத்திரம் 28.08.2023

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் பணியாற்றினார். இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன இவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்...

தர்மத்தின் ஆகுதி ~ அ.வெண்ணிலா 21.08.2023

அ. வெண்ணிலா தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மல...

ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத் 14.08.2023

ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்

ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத் 07.08.2023

ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்

புலி நகம் ~ மைதிலி சம்பத் 31.07.2023

புலி நகம் மிக முக்கியமான சிறுகதை. மைதிலி சம்பத் தமிழின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்.

பருந்துகள் ~ மாதவிக்குட்டி 24.07.2023

கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில்...

பூனைகள் இல்லாத வீடு ~ சந்திரா 17.07.2023

சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள். சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய புளியம்பூ மற்றும் கிழவிநாச்ச...

மரப்பாச்சி ~ உமா மகேஸ்வரி 10.07.2023

உமா மகேஸ்வரி எனும் மஹி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். உமா மகேஸ்ரி தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர் . தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார். இவரின் இந்தக் கதை குழந்தைகளின் உலகினை நம் கண்முன்னர் காட்டிச் செல்கிறார்.

ஹார்மோனியம் ~ செழியன் 02.07.2023

செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி. சிறீராமிடம் ஒளிப்பதிவாளராக தன் பணியைத் தொடங்கினார். செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒளிப்பதிவுக்காக 2013 ல் இலண்டன் திரைப்பட விழாவில் சி...

Listen to the தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.