Thanga Jaisakthivel

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories

Arts TA ↓ 228 episodes

தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”

Author

Thanga Jaisakthivel

Category

Arts

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

அழகர்சாமியின் குதிரை ~ பாஸ்கர் சக்தி 26.06.2023

அழகர்சாமியின் குதிரை எழுதிய பாஸ்கர் சக்தி ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட. இவரது கதைகள் மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுபவையாக உள்ளது.

வேட்டை ~ யூமா வாசுகி 19.06.2023

யூமா வாசுகி என்ற புனைபெயரில் எழுதும் தி. மாரிமுத்து கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன்கொண்டு இயங்கி வருகிறார். மலையாள எழுத்தாளர் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக 2017- ஆம் ஆண்டுக்கான ⁠சாகித்ய அகாடமி விருது⁠ இவரு...

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ~ சுப்ரபாரதிமணியன் 12.06.2023

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் 35 வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்...

நுகம் ~ எக்பர்ட் சச்சிதானந்தம் 05.06.2023

எக்பர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்து அடுக்கி வைத்தார்போல் வரிகள், அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இவரது சிறுகதைகள் இருக்கும். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை. இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்...

முள் ~ சாரு நிவேதிதா / ~ Charu Nivedita 29.01.2023

சாரு நிவேதிதா தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவி...

காசி ~ பாதசாரி / KAsi ~ PathasAri 22.01.2023

எழுத்தாளர் பாதசாரி அதிகம் எழுதியவர் இல்லை.  ஒரு சிறுகதை தொகுப்பும் ஒரு  கவிதை தொகுப்பும் மட்டுமே வெளி வந்திருக்கிறது. மிகக்  குறைவாக எழுதியும் கூட அவருடைய 'காசி' இல்லாத சிறந்த சிறுகதை பட்டியலே  இல்லை.

கருப்பு ரயில் ~ கோணங்கி / Konangi ~ Karuppu Rail 15.01.2023

கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ. 1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.  கல்குதிரை என்ற சிற்றி...

அந்நியர்கள் ~ ஆர். சூடாமணி 09.01.2023

ஆர். சூடாமணி தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். இவரது ’அந்நியர்கள்’ மிக முக்கிய சிறுகதையாக கருதப்படுகிறது.

வெயிலோடு போய் ~ ச.தமிழ்ச்செல்வன் / VeyiLodu Poi 08.01.2023

ச.தமிழ்ச்செல்வன் 1954ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்... என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அ...

காலத்தின் விளிம்பில் ~ பாவண்ணன் / KAlathin Vilimbil ~PAvannan 01.01.2023

பாவண்ணன் 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச் சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும...

S Ramakrishnan speech on Balzak • எஸ்.ராவின் உலக இலக்கிய பேருரை - பால்சாக் 25.12.2022

பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் பால்சாக் சிறுகதை, குறுநாவல் நாவல்கள் என எழுதிக் குவித்தவர்.

சித்தி ஒரு திருணையின் பூர்வீகம் ~ சுயம்புலிங்கம் / Oru Thirunaiyin poorvegam ~ Suyambulingam 25.12.2022

முன்மாதிரி இல்லாத, எவரும் பின்தொடரவும் முடியாத ஒரு எழுத்து முறைக்குச் சொந்தக்காரர்  மு.சுயம்புலிங்கம். கோணங்கி கொண்டு வந்த ’கல்குதிரை ’-’சுயம்புலிங்கம் சிறப்பிதழ்’  மூலமாகவும் கி .ராஜநாராயணன்  தொகுத்த கரிசல் கதைத்திரட்டு  வழியாகவும் வெளி உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தவர் சுயம்புலிங்கம். அவரே நடத்திவந்த ’நாட்டுப் பூக்கள்’ என்கிற கையெழுத்து இதழில் வெளிவந்திருந்த கவிதைகளையும்...

சித்தி ~ மா. அரங்கநாதன் / Ma. Aranganathan ~ Chithi 18.12.2022

மா. அரங்கநாதன் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) கிராமத்தில் பிறந்தவராவார், பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் முன்றில் என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார், 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்த இந்த இதழ் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தை பெற்றது. இவ...

இருளப்ப சாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும் ~ வேல ராமமூர்த்தி / Irulappa Samiyum 21 Attukkidaiykalum ~ Vela Ramamoorthy 11.12.2022

வேல ராமமூர்த்தி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் மற்றும் நடிகராவார். தமிழ் மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்களில் அவ்வப்போது தோன்றி நடித்துவருகிறார். குற்றப்பரம்பரை வரலாற்றின் காலகட்டத்தை திரையில் கொண்டுவரும் பெரிய சவாலை பாலாவுக்காக திரைக்கதையாக இவர் எழுதிக்கொண்டிருக்கிறார். வேல ராமமூர்த்தி எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது. 

காகிதக் குப்பைகள் ~ எல். லக்ஷ்மணன் / kAkitha kupaigaL ~ L.Lakshmanan 02.12.2022

வானொலி நாடக ஆசிரியரான எல். லக்ஷ்மணன் , வெளிநாட்டு சிற்றலை வானொலிகளின் நேயரும் கூட. திருநெல்வேலி அகில இந்திய வானொலியில், இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது இந்த சிறுகதை கனடா எம்டிஆர் எப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகியது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஒரு கப் காபி ~ இந்திரா பார்த்தசாரதி 26.11.2022

இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இரு...

பச்சை கனவு ~ லா. ச. ராமாமிர்தம் 29.10.2022

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம். இவருடைய முன்னோர்கள்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய  பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற  பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2  வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி...

மூன்று நகரங்களின் கதை ~ க. கலாமோகன் 22.10.2022

க. கலாமோகன் இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.கே.எல்.நேசமித்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். புலம்பெயர முன்னர் கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிவர். 1983 இல் இருந்து பிரான்சில் புலம்பெயர்...

அரசனின் வருகை ~ உமா வரதராஜன் 15.10.2022

உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கையில் பிறந்தவர். ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம...

மூங்கில் குருத்து ~ திலீப்குமார் 08.10.2022

திலீப்குமார், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்தத்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரத...

நீக்கல்கள் ~ சாந்தன் 01.10.2022

சாந்தனின் கதைகளில் சாந்தன்தான் கதாநாயகன். சாந்தனே கிருஷ்ணன். சாந்தனே ரமணன். சாந்தனுடைய படைப்புகளெல்லாம் சொந்த அனுபவங்களை அடித்தளமாய்க் கொண்ட  யதார்த்தமான முயற்சிகளாகையால், சாந்தனின் கதைகளுக்குத் தலைமையேற்க எந்தவொரு  கற்பனைப் பாத்திரத்துக்கும் தகுதியில்லை. இவரது ’நீக்கல்கள்’ சிறுகதையானது மிக முக்கியச் சிறுகதையாக கருதப்படுகிறது.

இறகுகளும் பாறைகளும் ~ மாலன் 24.09.2022

மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்' சாகித்திய அகாதமி விருது பெற்றவரும் ஆவார். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ’இறகுகளும...

காலமும் ஐந்து குழந்தைகளும் ~ அசோகமித்திரன் 21.09.2022

அசோகமித்திரன் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்க...

இன்னாட்டு மன்னர் ~ நாஞ்சில் நாடன் 17.09.2022

நாஞ்சில் நாடன் வீர நாராயணமங்கலத்தில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்...

இல்லாள் ~ கி. ராஜநாராயணன் 15.09.2022

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா. 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின்...

Listen to the தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.