Thanga Jaisakthivel
தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories
தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”
Author
Thanga Jaisakthivel
Category
Podcast website
Latest episode
May 31, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தங்க ஒரு ~ கிருஷ்ணன் நம்பி 10.09.2022 16:33
கிருஷ்ணன் நம்பி குமரி மாவட்டத்தில் அழகியபாண்டிபுரத்தில் பிறந்து பூதப்பாண்டி என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை பார்த்தார். அப்போது ப. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பு கிடைத்தது . கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள்,...
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் ~ ஜி.நாகராஜன் 31.08.2022 13:28
ஜி. நாகராஜன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள்...
தனுமை ~ வண்ணதாசன் 27.08.2022 17:51
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வ...
புற்றில் உறையும் பாம்புகள் ~ இராசேந்திர சோழன் 20.08.2022 10:56
தமிழ்ச் சிறுகதை மரபில் தன்னுடைய ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் அதிர்வுகளோடு அடியெடுத்துவைத்த இராசேந்திர சோழன் ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்ஸியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ் சாத்தியம் அவர். எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான ‘பறிமுதல்’ முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய தொகுப்பாகும். மொழியின் ச...
நகரம் ~ சுஜாதா 13.08.2022 15:09
சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். இ...
பைத்தியகார பிள்ளை ~ எம்.வி.வெங்கட்ராம் 06.08.2022 35:40
எம்.வி.வெங்கட்ராம் தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது ’பைத்தியகார பிள்ளை’ மிக முக்கிய சிறுகதையாக கருதப்பபடுகிற...
சாமியார் ஜூவுக்கு போகிறார் ~ சம்பத் 30.07.2022 46:39
1941 திருச்சியில் பிறந்த சம்பத், வளர்ந்ததும் படித்ததும் டெல்லியில். டெல்லி ரயில்வேயில் உயரதிகாரியாகப் பணியாற்றிய அவருடைய தந்தை பணி ஓய்வுபெற்று சென்னை திரும்பியபோது சம்பத்தும் தன் குடும்பத்துடன் சென்னை வந்தார். எம்.ஏ. (பொருளாதாரம்) பி.எட். படித்திருந்த சம்பத், சென்னை வாழ்வின் தொடக்கத்தில் ஆய்வு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றினார். கடைசி சில ஆண்டுக...
காடன் கண்டது ~ பிரமிள் 23.07.2022 21:11
பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரின் ’காடன் கண்டது’ கண்டது மிக முக்கியமான சிறுகதைகயாக கருதப்படுகிறது.
தமிழ் இலக்கியப் பேரவை ~ ஜெ.ஜெ.சித்ராதேவி 16.07.2022 18:07
தமிழ் இலக்கியப் பேச்சாளரான ஜெ.ஜெ.சித்ராதேவி தமிழ் மீதும். இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மதுரை, சென்னை அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும், தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது “தமிழ் இலக்கியப் பேரவை” மிக முக்கியமான சிறுகதையாகும்.
சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் ~ ஆதவன் 04.06.2022 35:53
ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.
பிரசாதம் ~ சுந்தர ராமசாமி 29.05.2022 28:05
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் சுந்தர ராமசாமி. இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக ப...
தாலியில் பூச்சூடியவர்கள் ~ பா. செயப்பிரகாசம் 29.05.2022 33:27
பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. 1965 இந்தி எதிர்ப்பு...
ஒரு ராத்தல் இரைச்சி ~ நகுலன் 16.05.2022 7:59
டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கோமதி ~ கி. ராஜநாராயணன் 08.05.2022 20:29
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.
ராஜா வந்திருக்கிறார் ~ கு. அழகிரிசாமி 01.05.2022 32:39
கு. அழகிரிசாமி தமிழின் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.
பாயசம் ~ தி. ஜானகிராமன் 24.04.2022 18:28
தி. ஜானகிராமன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடியில் பிறந்தவர். புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.
தீட்டு ~ அருண்.மோ 24.04.2022 31:07
அருண். மோவின் இந்த படைப்பு ஊடகத்துறை உட்பட அனைத்து தரப்பினரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு சிறிய சிகப்பு துணிக்கு இவ்வளவு பிரச்சனையா? ஒரு வேலை அது இருக்கும் இடம் தான் பிரச்சனையாகியிருக்குமோ? விரிவாக கேளுங்குள் ‘தீட்டு’ சிறுகதையை, நிச்சயம், நீங்களும் கொஞ்சம் யோசிப்பீர்கள்.
குருபீடம் ~ ஜெயகாந்தன் 22.04.2022 19:53
ஜெயகாந்தன் இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.
கவந்தனும் காமனும் ~ புதுமைப்பித்தன் 21.04.2022 6:33
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ள...
ஞானப்பால் ~ ந. பிச்சமூர்த்தி 17.04.2022 14:49
ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
வசுமதி வா போகலாம் ~ சந்திர கிருஷ்ணன் 10.04.2022 10:04
பேரா. சந்திர கிருஷ்ணன் தனித்துவமான எழுத்துக்கு சொந்தக்காரர். சிறு வயதில் நம்மோடு ஓடியாடி விளையாடியவர்களை பெரியவர்கள் ஆனபிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியே வேறு. அதுவும் அவர்கள் பெண்கள் எனில், இன்னும் கூடுதல் சந்தோஷம். ஆனால் அவர்கள் வாழ்க்கை குடும்ப சூழ்நிலையால் புரட்டிப் போடப்பட்டிருக்கும் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தால்?! மிக நேர்த்தியாக அதை இந்த ”வசுமதி வா போ...
ஒரு வார்த்தை ~ சிவசங்கரி 09.04.2022 27:04
சிவசங்கரி நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வெளியிட்டுள்ளார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.
இடுக்கி ~ முத்துராசா குமார் 07.04.2022 25:44
தற்காலத் தமிழிலக்கியத்தின் நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவர் முத்துராசா குமார் . 'பிடிமண்', 'நீர்ச்சுழி' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருந்த முத்துராசா , 'ஈத்து' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் இப்போது சிறுகதையாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். (விகடன் டாட் காம்)
என்னை மன்னித்துக்கொள் தாவீது ~ அகரமுதல்வன் 19.03.2022 37:51
பிபிசி தமிழோசையைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் இந்த கதை நெருக்கமானதாக இருக்கும். “என்னை மன்னித்துக்கொள் தாவீது” சிறுகதையின் மையக் கதாப்பாத்திரத்தின் பெயரே பிபிசி. அதற்கான காரணத்தினை அறிந்துகொள்ள அகரமுதல்வன் எழுதிய இந்த சிறுகதையை முழுமையாகக் கேளுங்கள். ஈழத்தின் போர்ச் சூழலை நேரடியாக நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் கதாசிரியர்.
பிரபஞ்ச ஞானம் - மௌனி 11.03.2022 16:13
மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எ...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.