Thanga Jaisakthivel

தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories

Arts TA ↓ 228 episodes

தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”

Author

Thanga Jaisakthivel

Category

Arts

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

கனகாம்பரம் - கு.ப.ரா 04.03.2022

கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார்.

மகாராஜாவின் ரயில் வண்டி - முத்துலிங்கம் 25.02.2022

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நி...

மனுசன மாத்தும்டா...மனுசனா மாத்தும்டா... ~ வாசுதேவன் அருணாச்சலம் 20.02.2022

ஒரு நாவல் என்னவெல்லாம் செய்யும் வாசகனை, அதே போல் அந்த எழுத்தாளனையும் என்ன செய்யும் என்பதற்கு இந்த “மனுசன மாத்தும்டா...மனுசனா மாத்தும்டா...” எனும் திரு.வாசுதேவன் அருணாச்சலம் எழுதிய சிறுகதை நல்ல உதாரணம்.

ஒரு குவாட்டரும் அரைப் பிளேட் மட்டன் பிரியாணியும் ~ வாசுதேவன் அருணாச்சலம் 20.02.2022

கிராமங்களில் நாட்டார் வழிபாட்டினை இந்த கோணத்திலும் பதிவு செய்ய முடிமா? என்பதற்கு இந்த “ஒரு குவாட்டரும் அரைப் பிளேட் மட்டன் பிரியாணியும்” சிறுகதை ஒரு உதாரணம். எழுதிய திரு.வாசுதேவன் அருணாச்சலம் அவர்களுக்கு சபாஷ்

இழைகள் சிரித்தால் - பாதசாரி 18.02.2022

எழுத்தாளர் பாதசாரி நிறைய கதைகள் எழுதியிருந்தாலும் 'காசி' என்ற ஒரு சிறுகதையின் மூலமே புனைவு எழுத்தாளராக அறியப்பட்டார். அந்தக் கதையின் வழியாகவே இன்றுவரை புனைவு எழுத்தாளராக இருக்கின்றார்.

கொரோனா காலப் பயணம் ~ தங்க.ஜெய்சக்திவேல் 16.02.2022

தொலைத்தூர வானொலிகளைக் கேட்பதற்காக இவ்வளவு சிரமங்களை யாரேனும் எடுப்பார்களா?  ஆனால் இவர் கொரோனா காலத்தில் சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்திற்கு எப்படி சென்றார் என்பதே கதை.

கறியும் சோறும் - விழி பா. இதயவேந்தன் 11.02.2022

விழி பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது. இந்தியா டுடே, கணையாழி, தினமணி கதிர், அரங்கேற்றம், தினப்புரட்சி, நான்காவது பரிமாணம் (கனடா), சதங்கை, இந்தாம் (மின்னிதழ்), மின்னம்பலம் (இணைய இதழ்) போன்று பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார். 

பொன்னுத்தாயி - பாமா 04.02.2022

பாமா, தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கருதப்படுகின்றது. கன்னியராகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு புதினத்தை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெ...

விளக்கு பூச்சி - கண்மணி குணசேகரன் 28.01.2022

கண்மணி குணசேகரனின் இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல்...

கோவம் - உஞ்சை ராசன் 21.01.2022

யாருக்குத்தான் கோவம் வராது. கோவம் மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று. கோவத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கும். இந்த உஞ்சை ராசனின் கோவமும் அர்த்தமுள்ளதா, என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

வருகை - உமா மகேஸ்வரி 14.01.2022

உமா மகேஸ்வரி தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.

பஞ்சாயத்து - தமயந்தி 07.01.2022

இயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட படைப்பாளி தமயந்தி. புதிய திரைப்படத்துக்கான கதை விவாதம், புதிய படங்களுக்கான பாடல் எழுதும் பணிகளுக்கு மத்தியில் நாவல் ஒன்றையும் முடித்துள்ளார். இந்த பஞ்சாயத்து அவரது முக்கியமான சிறுகதைகளில் ஒன்றாகும்.

உக்கிளு - குமார செல்வா 31.12.2021

கதையை எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமான சிறுகதை. கதைமாந்தர்கள் நம்மோடு இதிலும் இணைந்தே பயணிப்பது இந்த ’உக்கிளு‘ சிறுகதையின் கூடுதல் சிறப்பு.

குருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை - ஜனகபிரியா 24.12.2021

கதையின் தலைப்பே கேட்கவர்களுக்கு ஒரு வித ஆர்வத்தினை தூண்டும். அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்த ‘குருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை’ சிறுகதையில் ஜனகபிரியா அருமையாக எழுதியுள்ளார்.

சாயும்காலம் - ஜி.முருகன் 23.12.2021

காலங்கள் தான் எத்தனை எத்தனை வகைகளாக பரவி இருக்கிறது. எல்லா காலங்களையும், எல்லா நேரத்திலும் ஒரு சேர அனுபவிக்க முடிவதில்லை. இந்த சாயும்காலம் சிறுகதையும் அதைப் போன்ற ஒன்றே.

உன்னிகள் - பெருமாள் முருகன் 17.12.2021

கொங்கு மண்டலத்தின் மக்களை இவர் அளவுக்கு எழுத்தில் பதிவு செய்தவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அதற்கு உதாரணமான சிறுகதை தான் இந்த உன்னிகள்.

சுமைகள் - அரசு மணிமேகலை 10.12.2021

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஒரு சுமை இருக்கத்தான் செய்யும். அரசு மணிமேகலையின் இந்த சுமைகள் சிறுகதை அதில் ஒரு விதம்.

பாயம்மா - பிரபஞ்சன் 03.12.2021

பிரபஞ்சனின் எழுத்தின் வசீகரம் படிப்பவர்களை மட்டுமல்ல, கேட்பவர்களையும் வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அதற்கு இந்த பாயம்மா சிறுகதை ஒரு உதாரணம்.

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன் 26.11.2021

கடவுள் பூமிக்கு வந்தால் என்னவாகும் என்ற இந்த வடிவத்தினை மிக அழகாக, நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.

நெஞ்சுடையான் - பஞ்ச் தர்மா 24.09.2021

மனிதர்களில் தான் எத்தனை எத்தனை வகை. அன்பு, பாசம் எல்லாம் எல்லோரிடத்திலும் சமமாகத் தான் இருக்கிறதா? இந்த கதையைக் கேளுங்கள், அவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் பஞ்ச் தர்மா.

மனவெளி நாடகம் - ரமேஷ் பிரேம் 24.09.2021

பின்நவீனத்துவ அணுகுமுறை, இலக்கியக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத்  தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ்  இலகக்கிய அறிவுலகப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத்  தக்கவர்கள் பிரேம்-ரமேஷ். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும்  விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள்,  நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள்...

மூக்குப்பொடி - பார்த்தசாரதி 17.09.2021

வயதான தாத்தா பாட்டியின் கதை. என்ன ஒரு அன்பு, அத்தனை அன்பினையும் கொட்டி எழுதப்பட்ட இந்த பார்த்தசாரதியிள் கதையைக் கேளுங்கள், உங்களுக்கும் அன்பு தொற்றிக்கொள்ளும்.

பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப்பொழுது - உதயசங்கர் 17.09.2021

கா. உதயசங்கர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச்  செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள்  சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

பொரி உருண்டை - பார்த்தசாரதி 10.09.2021

வாழ்க்கை உன்னதாமான தருணங்களை கொண்டுள்ளது. அதனை நாம் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. பார்த்தசாரதியின் கதைகள் அதனை நமக்கு மீட்டுருவாக்கம் செய்கின்றன.

காவடியாட்டம் - யூமா வாசுகி 03.09.2021

தி. மாரிமுத்து  நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ளார். இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரில் எழுதி வருகிறார். ”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை  நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும்,  “மோர்னிங்  திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துற...

Listen to the தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.