Thanga Jaisakthivel
தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories
தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி:Thanga Jaisakthivel10, Kesava Perumal Koil East StreetMylaporeChennai - 600 004Tamil NaduIndiaகடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள்.“இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிறுகதையை நீக்கச் சொல்லும் பட்சத்தில், உடனடியாக நீக்கப்படும்”
Author
Thanga Jaisakthivel
Category
Podcast website
Latest episode
May 31, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
கோடரி ~ பிரமிள் 23.05.2020 17:52
ஒரு மரம் ‘தான்’ என்ற அகந்தையை வீழ்த்துமா? சிறுபான்மையினர் உள்ள ஒரு இடத்தில் பெரும்பான்மையினத் அந்த மரத்தினை எப்படி சாய்க்கின்றனர்? ஏன் சாய்க்கின்றனர்? போன்ற கேள்வி நமக்கும் ‘கோடரி’ சிறுகதையைக் கேட்கும் போது எழாமல் இல்லை. ~ பிரமிள் எழுதிய அற்புத படைப்பு இது. அன்றிலிருந்து இன்று வரை, பெரும்பான்மயினர் சிறுபான்மையினரை திணற வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு மரத்தினை இந்த ‘கோடரி’ சிறுகதையில் முக்கிய கதா...
சட்டை ~ கிருஷ்ணன் நம்பி 21.05.2020 14:21
இன்று நாம் ஒரு சட்டையை என்ன விலை கொடுத்து எடுக்கிறோம்! ஆனால் இன்றும் ஒரு சட்டை கூட எடுத்து உடுத்த முடியாதவர்கள் இருக்கும் சமூகத்தில் தான் நாம் உள்ளோம். அந்த சட்டை எடுக்க முடியாத ஒரு குடும்பத்தை இந்த ‘சட்டை’ சிறுகதையில் ~ கிருஷ்ணன் நம்பி ஏக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
கடல் ~ தோப்பில் முகமது மீரான் 20.05.2020 15:52
கடல் எவ்வளவு ஆபத்தானது? தனது காதலிக்கு ஒரு ஜம்பர் எடுக்கும் கனவுடன் கடலுக்கு செல்லும் காதலன், ஒரு பெரிய கடல் பன்றியால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதை ‘கடல்’ சிறுகதையில் பதிவு செய்துள்ளார் ~ தோப்பில் முகமது மீரான்
சாசனம் ~ கந்தர்வன் 19.05.2020 13:24
ஒரு புளியமர்த்துக்கும் ஒரு பெரியவருக்கும் இருக்கும் உறவை பற்றியது இந்த ‘சாசனம்’ சிறுகதை. இப்படியும் அந்த காலத்தில் நடந்துள்ளதே என வியக்கும் படி பதிவு செய்துள்ளார் ~ கந்தர்வன்.
பிரதிவாதி பயங்கரம் ~ நாரண துரைக்கண்ணன் 19.05.2020 14:07
மேடையில் ஒன்றும், தனது வீட்டில் ஒன்றும் பேசும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சாட்டையடி கதை. தமிழில் ப்ளாக் ஹுயூமர் கதையின் முன்னோடி என இவரைக் கூறலாம். இந்த ‘பிரதிவாதி பயங்கரம்’ சிறுகதையில் ~ நாரண துரைக்கண்ணன் இன்றைய அரசியலையும் ஒரு சுழட்டு சுழட்டியிருப்பார்.
கோணல் வடிவங்கள் ~ ஆர்.இராஜேந்திர சோழன் 17.05.2020 12:20
கிராமத்தில் ஒரு குடும்பத்தின் தகாத உறவு எந்த அளவிற்கு செல்கிறது என்கிறது ‘கோணல் வடிவங்கள்’ சிறுகதை. கிராமிய நடையில் அவ்வளவு அழகாக எழுதியுள்ளார் ~ ஆர்.இராஜேந்திர சோழன்.
சசாங்கனின் ஆவி ~ ந.சிதம்பர சுப்ரமணியன் 16.05.2020 23:11
சதுரங்கத்தினை ஆவிகள் விளையாடி பார்த்திருக்கிறீர்களா? என்ன ஒரு ஆட்டம். அதுவும் மனித எழும்புகளால் செய்த காய்கள். ஒவ்வொரு காயிலும் அந்த ஆவியின் குடியிருப்பு. ‘சசாங்கனின் ஆவி’ சிறுகதையை ~ ந.சிதம்பர சுப்ரமணியன் மாபசானின் எழுத்து வடிவில் எழுதியுள்ளார்.
மனச்சாய்வு ~ ஜெயந்தன் 15.05.2020 20:55
ஜாதி என்ற ஒன்று படித்தவர்கள் மத்தியில் கூட இன்று எந்தளவிற்கு ஒட்டியிருக்கிறது. அதுவும் காதல் திருமணம் என்று வந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். காதல் புனிதமானது என்றால், ஜாதியும் புனிதமானது என்கிறார் இந்த தந்தை. ‘மனச்சாய்வு’ சிறுகதை இதை மிக அழகாக பதிவு செய்கிறது. ~ ஜெயந்தன் எழுத்து தெளிந்த நீரோடை.
விடியுமா? ~ கு.ப.ராஜகோபாலன் 14.05.2020 14:22
ஒரு ரயில் பயணம் எவ்வளவு கற்றுத்தருகிறது. அதுவும் தூக்கமில்லா இரவுப் பயணம். மறக்கமுடியாது. ஒரு துக்கமும் அதனுடன் சேர்ந்து கொண்டால், எப்பொழுது விடியும் என்றிருக்கும். ‘விடியுமா?’ சிறுகதையில் அப்படியொரு காட்சியை நமக்கு கொடுத்திருப்பார் ~ கு.ப.ராஜகோபாலன்.
வாழ்க்கை ~ எஸ்.கே.பொற்றேக்காட் 13.05.2020 23:17
வாழ்க்கை எவ்வளவு வேகமாக ஓடுகிறது. ஒரே சம்பவம் திரும்ப திரும்ப எத்தனை முறை நடக்கிறது. கற்றுக்கொண்டது தான் என்ன? ஓடிக்கொண்டே இருக்கிறோம். இப்படியே இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஓடப்போகிறோம்? ‘வாழ்க்கை’ சிறுகதையில் அத்தனை ஓட்டத்தினையும் பதிவு செய்கிறார் ~ எஸ்.கே.பொற்றேக்காட். தமிழில் சுரா.
நாயனம் ~ ஆ.மாதவன் 12.05.2020 14:57
ஒரு இறப்பு வீட்டினை இப்படியும் பதிவு செய்ய முடியுமா என்ற வியப்பு மேலிடும் சிறுகதை. நாமும் எத்தனையோ இறப்புகளுக்கு சென்று வந்திருப்போம் ‘நாயனம்’ சிறுகதையில் வரும் வீட்டினைப் போல் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ~ ஆ.மாதவனின் தனித்த எழுத்து நடைக்கு இந்த சிறுகதை உதாரணம்.
நட்சத்திர குழந்தைகள் ~ பி.எஸ்.ராமையா 11.05.2020 13:44
குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகானது. வானத்தினை அவர்கள் பார்க்கும் விதமே தனி. அவசர உலகில் நாம் ஏன் அந்த வானத்தினை அவர்கள் பார்ப்பதுபோல் பார்க்க மறந்தோம். ‘நட்சத்திர குழந்தைகள்’ சிறுகதையிலாவது குழந்தைகளைப் போல் வானத்தினைப் பாருங்கள் என்கிறார் ~ பி.எஸ்.ராமையா.
News @10 from Mylapore 11.05.2020 4:55
For the Mylapore people, From the Mylapore people.
ஒரு கிராமத்து ராத்திரிகள் ~ பா.செயப்பிரகாசம் 10.05.2020 15:35
ஒரு கிராமம் இரவில் எப்படியிருக்கும்? தெரு மூலையில் படுத்திருக்கும் வயதான தாத்தா என்ன செய்துகொண்டு இருப்பார்? ஊரென்றால் ஒரு ஜமீனும் இருப்பார், அவருக்கு ஒரு அந்தரங்கமும் இருக்கும். அவற்றை ‘ஒரு கிராமத்து ராத்திரிகள்’ சிறுகதையில் படம் பிடித்து காட்டியிருப்பார் ~ பா.செயப்பிரகாசம்.
செம்படவச் சிறுமி ~ சங்கு.சுப்பிரமணியம் 09.05.2020 15:30
ஒரு மீனவச் சிறுமி எப்படி தனது குடும்பத்தினை சிரமப்பட்டு காற்றுகிறாள். அந்த பிழைப்பிலும் மண் விழுகிறது. ஒரு பெரிய அலை அவள் வாழ்வினையே புரட்டிப்போடுகிறது. ‘செம்படவச் சிறுமி’ சிறுகதையில் மீனவ வாழ்வினை தத்ரூபமாக சித்தரித்திருப்பார் ~ சங்கு.சுப்பிரமணியம்.
சோற்றுக்கணக்கு ~ ஜெயமோகன் 08.05.2020 40:20
பசி மயக்கத்தில் நீங்கள் கல்லூரி காலத்தை கடந்ததுண்டா? அகோரப் பசி இருக்கும் போது மூக்கு முட்ட சாப்பிட மீன் கறியும் கோழிக் குழம்பும் கிடைத்தால் எப்படியிருக்கும். அதுவும் ஒரு பைசா கொடுக்க வேண்டியதில்லை என்றால் நம்ப முடியாது தான். ‘சோற்றுக்கணக்கு’ சிறுகதையில் அந்த அற்புதமான மனிதரின் கடையை நமக்கு அடையாளம் காட்டுகிறார் ~ ஜெயமோகன்.
சத்திய வாக்குமூலம் ~ சக்கரியா 07.05.2020 9:28
தோழர்களுக்கு இடையே இருக்கின்ற உறவு, ரகசிய போலீஸ், துப்பறிவாளர்கள், சத்திய வாக்குமூலம், இந்திரா காந்தியும் கம்யூனிஸ்ட் தான் என்பன தகவல்களை தெரித்து செல்கிறது ‘சத்திய வாக்குமூலம்’ சிறுகதை. மலையாளத்தில் ~ சக்கரியா, தமிழில் சுரா.
பவள மாலை ~ அசோகமித்திரன் 06.05.2020 19:33
ஒரிசாவின் சூரியனார் கோவிலுக்கு சென்று இருக்கிறீர்களா? அங்கே விற்கும் ஒரு பவள மாலை விலைமதிக்க முடியாதது. ஆனால் ரூ.50க்குத் தான் விற்கிறார்கள். அதே ‘பவள மாலை’ மாலை தமிழகத்தில் ரூ.2000/- என்று சொல்கிறார் அசோகமித்திரன். அந்த ‘பவள மாலை’ பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கேளுங்கள்...
சமவெளி ~ வண்ணதாசன் 05.05.2020 13:45
நீங்கள் ஓவியம் வரைய விருப்பம் உள்ளவரா? நீங்கள் வரைந்த ஓவியம் உங்களுக்கு பிடிக்குமா? ஒரு அழகான பெண்ணை ஓவியம் வரைந்த பின், அந்த பெண் உயிர்பெற்று நடந்தால் எப்படியிருக்கும். ‘சமவெளி’ சிறுகதையில் அப்படியான ஒரு பயணத்தினை மேற்கொண்டிருப்பார் ~ வண்ணதாசன்.
கனவுக் கதை ~ சார்வாகன் 04.05.2020 15:06
சின்ன வயதில் நீங்கள் பெப்பர்மிண்ட் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இங்கே ஒரு கூட்டம் பெப்பர்மிண்ட்களுக்காக எப்படி அலைகின்றது பாருங்கள். ‘கனவுக் கதையை’ ஒரு கனவு போலவே எழுதியுள்ளார் ~ சார்வாகன்.
கிழிசல் ~ நாஞ்சில் நாடன் 03.05.2020 13:39
கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு சென்று இருக்கிறீர்களா? இல்லையெனில் ‘கிழிசல்’ சிறுகதையை நிச்சயம் கேளுங்கள். உங்களை ~ நாஞ்சில் நாடன் அவர்கள் ஏழு கி.மீ நடந்தே மாணிக்கத்தோடு நம்மையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார்.
புவனாவும் வியாழக் கிரகமும் ~ ஆர்.சூடாமணி 02.05.2020 23:08
இரண்டு பெண்கள் இரண்டு தந்தைகள். இருவரும் தத்தமது மகள்களுக்கு வரன் பார்க்கின்றனர். ஒருவர் உடனே திருமணத்தை முடிக்கிறார். இன்னொருவர் பதினைந்து வருடங்களாக வரன் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ‘புவனாவும் வியாழக் கிரகமும்’ சிறுகதையை ~ ஆர்.சூடாமணி அவ்வளவு உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார்.
தக்கையின் மீது நான்கு கண்கள் ~ சா.கந்தசாமி 01.05.2020 23:44
மாணிக்கம் மீன் பிடிக்கும் அழகே அழகு. ராமுவுக்கும் மாணிக்கத்திற்கும் நடக்கும் உணர்வு போராட்டம். மீன் இங்கு ஒரு உருவகம். அந்த நான்கு கண்கள் இன்றைய சமூகம். ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ வரலாற்றில் முக்கியமான கதை. ~ சா.கந்தசாமியின் எழுத்து வீரியம் மிக்கது என்பதை இந்த கதை மூலம் அறிந்துகொள்ள முடியும்.
உலகப் புகழ்பெற்ற மூக்கு ~ வைக்கம் முஹம்மது பஷீர் 30.04.2020 18:58
ஒருவரின் மூக்கு வயிறு வரை வந்தால் எப்படி இருக்கும். மூக்கினை வைத்து இன்றைய அரசியலை இவ்வளவு அழகாக யாராலும் விமர்சனம் செய்ய முடியாது. இந்த கதை அன்று மட்டுமல்ல, இன்றும், என்றும் நிலைத்திருக்கும். ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’ சிறுகதையை ~ வைக்கம் முஹம்மது பஷீர் எந்த எண்ணத்தில் எழுதினாரோ, அது நிறைவேறியிருக்கிறது.
மாத்தனின் கதை ~ தகழி சிவசங்கரப் பிள்ளை 29.04.2020 25:14
இரண்டு பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பதற்காக சேர்த்துவைத்திருந்த பணம் எப்படி ஏமாற்றப்பட்டது என்பதை ‘மாத்தனின் கதை’ சிறுகதையில் ~ தகழி சிவசங்கரப் பிள்ளை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருப்பார்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.