Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Qatar : பெண்களை ஒடுக்கும் பணக்கார நாடு? - கால்பந்தாட்டம் எழுப்பிய கேள்விகள்! 01.12.2022

"தாராளவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு கூட ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவைப்படும் பல பெண்கள் உள்ளனர். இது மிகப்பெரிய பிரச்னை." என்று பேராசிரியர் எலினி பொலிமெனோபௌலூ கூறுகிறார். -Newssensetn

பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன? 30.11.2022

அவர்கள் அந்த கையை வீடியோவாக வெளியிட்டனர். அந்த வீடியோவில் அதனை இல்ஹா காம்ப்ரிடா கடற்கரையில் கண்டெடுத்ததாகவும் அது ஏலியனின் கைகளாக இருக்கலாம் என்றும் பேசியிருந்தனர். -Newssensetn

"நல்லா சாப்பிடுங்க" குரங்குகளுக்கு விருந்து கொடுக்கும் தாய்லாந்து மக்கள் - ஏன் தெரியுமா? 30.11.2022

நகரத்தில் வாழும் குரங்குகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த திருவிழா 1989ல் தொடங்கப்பட்டது. இதை தொடக்கி வைத்தவர் Yongyuth Kitwatanusont இவர் ஒரு உணவக உரிமையாளர். -Newssensetn

"குரங்குப் பையன்" என கேலி: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நம்பிக்கை கதை! 30.11.2022

பள்ளியில் சக மாணவர்கள் என்னை "குரங்குப் பையன்" என்று அழைக்கிறார்கள், அவர்களை நான் கடிப்பேன் என்று பயப்படுவதாகவும் கூறுகின்றனர். சிறு குழந்தைகள் என்னைக் கண்டால் பயப்படுவார்கள். -Newssensetn

”கார்பேரேட் நிறுவனங்களுக்கு கல்லறையே மேல்” - 22 வயது இளம்பெண்ணின் விசித்திர முடிவு! 30.11.2022

டான் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 8.30 முதல் மாலை 5 வரை வேலை செய்கிறார். பணி நேரத்தை சமநிலை செய்ய இந்த வேலையை தேர்வு செய்ததாகவும், தேவையற்ற அலுவலக அரசியலை தவிர்ப்பதாகவும் டான் கூறுகிறார். -Newssensetn

48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை! 30.11.2022

ஒரு காலத்தில் பூமியை ஆண்டு வந்த டைனோசர் இனம் விண்கல் தாக்குதலால் தான் அழிந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டக் கருத்து. இதனாலே இந்த விண்கல்களில் ஒன்றினால் நமக்கு ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் ஆதி முதலே மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. -Newssensetn

"Face Book எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்" - முன்னாள் ட்விட்டர் இந்தியா தலைவர் 30.11.2022

"பேஸ்புக் நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலும் அதில் எனக்கு எந்த வித அதிர்ச்சியும் இருக்காது. இன்ஸ்டாகிராம் அதன் ரீல்ஸ் வசதி மற்றும் வீடியோக்களால் வளர்ச்சியடைந்து வருகிறது. நிறுவனம் அதில் கவனம் செலுத்துகிறது." -Newssensetn

ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்; நடந்தது என்ன? சோகத்தில் முடிந்த ஆய்வு 24.11.2022

ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரம் 7 நாட்களும் என மொத்தம் 9 மாதங்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் தம்பதியினர் சிம்ப் மற்றும் குழந்தையின் மீது அனேக பரிசோதனைகள் மேற்கொண்டனர். -Newssensetn

Presicce : புதிதாக குடியேறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் ஒரு ஊர் - ஏன் தெரியுமா? 24.11.2022

இதன் உள்ளூர் கவுன்சிலரான ஆல்ஃபிரடோ பலீஸ், "வரலாற்றுப் சிறப்புமிக்க இந்த நகரில் 1991க்கு முன்னர் உருவான ஏராளமான வீடுகள் இப்போது காலியாக உள்ளன. இதனை புதிய மக்களுடன் புத்துயிருடன் காண ஆசைப்படுகிறோம்" எனக் கூறியிருக்கிறார். -Newssensetn.

”இது வேற்றுகிரகம் இல்லை” இரவில் ஒளிரும் கடற்கரை - எங்கு இருக்கிறது? அறிவியல் காரணமென்ன? 24.11.2022

நீண்ட காலமாக, இந்த தீவு மாலத்தீவின் சிறந்த ரகசியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது இது மாலத்தீவில் பார்க்க மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. -Newssensetn

இந்தோனேசியா : 504 புத்தர்கள், அழிந்து வரும் உயிரிகள்- தீவுநாட்டின் 8 விசித்திர உண்மைகள்! 24.11.2022

27 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி என அடிக்கடி பல இயற்கை அழிவுகள் ஏற்படுகிறது. -Newssensetn.

FIFA உலக கோப்பை 2022: கால்பந்துதொடரை ஒன்றாக காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்! 22.11.2022

அந்த வீட்டை அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய ஜாம்பவான்களின் உருவப்படங்களுடன் அலங்கரித்துள்ளனர். -Newssensetn

75 ஆண்டுகளில் 250 -லிருந்து 800 கோடியாக உயர்ந்த மக்கள் தொகை - சுவாரஸ்ய தகவல்கள்! 22.11.2022

மனித முன்னோர்கள் சந்தித்த அனேக பிரச்னைகளிலிருந்து நம் அறிவுத்திறனும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை காத்திருக்கின்றன. கடந்த 8,500 ஆண்டுகளில்தான் மனிதர்கள் முதல் உலோக கருவி முதல் ஏஐ டெக்னாலஜி வரை கண்டுபிடித்துள்ளனர். -Newssensetn

”ஆடம்பர செலவுகள் வேண்டாம்!” - எச்சரிக்கும் பெசோஸ்; பொருளாதார மந்தநிலை உருவாகிறதா? 22.11.2022

விடுமுறை காலத்தில் பெரிய கொள்முதல்கள், ஆடம்பர செலவுகள் எதுவும் செய்ய வேண்டாம் எனவும், அவற்றை ஒத்திவைப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார் ஜெஃப் பெசோஸ். -Newssensetn

கானிம் அல் முஃப்தா : குரான் ஓதி உலகக் கோப்பையைத் தொடங்கிவைத்த இளைஞர் யார்? 22.11.2022

சிறு வயதிலேயே மருத்துவர்களால் உயிர்பிழைக்கவே மாட்டார் எனக் கைவிடப்பட்ட முஃப்தா இப்போது ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியின் அம்பாசிடராக இருக்கிறார். கத்தார் இளைஞர்களின் ஐகானான இவரைக் குறித்து இந்த கட்டுரையில் காணலாம். -Newssensetn

Bangus Valley : காஷ்மீரின் ரகசிய பள்ளத்தாக்கு - சுவாரஸ்ய தகவல்கள் 18.11.2022

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கு, காஷ்மீரின் சுற்றுலா வரைபடத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து சமீபத்தில் தான் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. -Newssensetn

போலந்தில் வெடித்த ரஷ்ய ஏவுகணை; உலகநாடுகள் பதற்றம் - நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் 18.11.2022

நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டின் கிழக்கு மாகாணம் லுபெல்ஸ்கியில் உக்ரைன் எல்லைப் புறமாக உள்ள கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ரஷ்யாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. -Newssensetn

வித்தியாசமான படுக்கையறை கொண்ட வீடு : ரூ.1.6 கோடி மதிப்பு - அப்படி என்ன சிறப்பு? 18.11.2022

ஒரு பெரிய மாஸ்டர் படுக்கையறை, ஒரு பீம்-சீலிங் சமையலறை, மழைப்பொழிவு கொண்ட குளியலறை, மற்றும் விசாலமான கொல்லைப்புறம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு விசாலமான லாஞ்ச் கொண்ட வீடாக உள்ளது. -Newssensetn

Jeff Bezos : "என் வாழ்நாளுக்குள் பெரும்பாலான சொத்துக்களை தானம் செய்வேன்"- அமேசான் நிறுவனர் 16.11.2022

உலகின் நான்காவது பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் 10 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். உலகின் பெரும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் கிவ்விங் ஒப்பதந்த்தில் கையெழுத்திடாததற்கு விமர்சிக்கப்பட்டனர். -Newssensetn

800 கோடியை தொட்ட உலக மக்கள் தொகை : சீனாவை முந்துகிறதா இந்தியா? - ஐநா சொல்வது என்ன? 16.11.2022

1950லிருந்து மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரித்து வந்துள்ளது எனவும், 2020ல் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான அளவை அதிகரிப்பு விகிதம் தொட்டதாகவும் Annual World Population Project தெரிவித்துள்ளது. -Newssensetn

”என் மகனை ராணுவ அதிகாரியாக்கணும்” - இரவும் பகலும் ரிக்ஷா ஓட்டும் இளம்பெண்ணின் போராட்ட கதை! 15.11.2022

என்னையும் மகனையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் பிரிந்து விட்டார். அதன் பிறகு எனது குழந்தையின் வாழ்வாதாரத்திற்காக இட்லி தோசைக்கான சிறிய கடையை அமைத்தேன். -Newssensetn

உலகிலேயே மிக நீளமான ஆற்றுக் கப்பல் : இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன சிறப்பம்சங்கள்? 15.11.2022

கங்கா விலாஸ் கப்பல் பயணத்தின் மூலம் 52 நாட்களில் 27 நதிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தளங்களைப் பார்க்கலாம். இவற்றில் உலக பிரசித்தி பெற்ற தளங்களும் அடங்கும். -Newssensetn

ஸ்பெயின் : வெறும் 2 கோடி ரூபாய் விலைக்கு வரும் கிராமம் - ஏன் தெரியுமா? 15.11.2022

வீடுகள் மட்டுமின்றி பள்ளி, தேவாலயம், விடுதி, நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானங்கள், பார் வசதி என எல்லாமும் இந்த கிராமத்தில் உள்ளது. -Newssensetn

உலகின் மிகப்பெரிய உதடுகளைக் கொண்ட பெண் - ரூ.7 லட்சம் செலவு செய்து மாற்றியது ஏன்? 15.11.2022

ஆண்ட்ரியா இவனோவா தனது தனித்துவமான உடல் தோற்றத்திற்காக ரசிகர்களை சம்பாதித்துள்ளார். ஆனாலும் இன்ஸ்டாகிராமில் இவனோவாவின் புகைப்படங்களுக்கு நிறைய எதிர்மறையான கருத்துக்கள் குவிகின்றன. -Newssensetn

”மாடலிங் வேண்டாம்” : உலகின் "மிக அழகான காவலர்" என்று அழைக்கப்படும் டயானா - யார் இவர்? 15.11.2022

உலகின் மிக ஆபத்தான நகரமாக முன்னர் கருதப்பட்ட மெடலின் தெருக்களில் ரோந்து பணிக்கு சென்று அழகு மட்டுமின்றி துணிச்சல் உள்ள பெண் என்ற பெயரையும் பெற்றார். -Newssensetn

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.