SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் வட்டி வீதக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது! 18.02.2025 2:35
2020 -ஆம் ஆண்டிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளில் RBA நாட்டின் முதல் வட்டி விகிதக் குறைப்பை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
NSW பொதுவெளியில் இனவெறிக் கருத்து கூறினால் சிறை - சட்டத்திருத்தம் முன்மொழிவு! 17.02.2025 3:56
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( செவ்வாய்க்கிழமை 18/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
'உலகம் புகழும்' கலைஞர், அவரை நாமும் புகழ்வோம் வாரீர்! 17.02.2025 8:30
புகழ்பெற்ற நட்டுவனார், குரு, கே. என். தண்டாயுதபாணி பிள்ளையின் காலத்தால் அழியாத மரபுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வான, 'உலகம் புகழும்,' அவருடைய நேசத்துக்குரிய மற்றும் அரிதாகவே காணப்பட்ட படைப்புகளை மேடைக்கு எடுத்து வருகிறது. சிதம்பரம் ஆர். சுரேஷ் மற்றும் ஷோபனா சுரேஷ் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் நடன அமைப்புடன் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஷோபனா சுரேஷ் மற்றும் சமர்ப்பனா நடன நிறுவனத்தின...
NSW-இல் அதிவேகமாக வாகனம் ஓட்டி அதிகம் கமராவால் பிடிபட்ட இடம் எது தெரியுமா? 17.02.2025 2:04
NSW சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனத்தை படம்பிடிக்கும் கமராக்களால் படம் பிடிக்கப்பட்ட முதல் 10 வேகமாக பயணித்த வாகனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
NSW நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா! 17.02.2025 9:51
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் NSW மாநில நாடாளுமன்றத்தில் நடத்திய 9-வது ஆண்டு பொங்கல் விழா கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 13-ஆம் தேதி நடைப்பெற்றது. SBS தமிழ் சார்பில் நாமும் அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டோம். NSW மாநில நாடாளுமன்றத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்வின் தொகுப்பு. தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 17.02.2025 9:25
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சந்திப்பு, டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி, மத்திய பட்ஜெட் மீது திமுக கடுமையான விமர்சனம் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தை மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
ஐஸ்கிரீம் உங்களுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. ஏன்? 17.02.2025 7:24
சில ஆண்டுகளாக, ஐஸ்கிரீம் எமது உடலுக்கு நல்லது என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். இது குறித்து, சமூக ஊடகங்கள் மட்டுமின்றி பல பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிடுகின்றன.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடு வாங்க தடை! 17.02.2025 5:11
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 17/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
கோடிக்கணக்கில் பெருகியிருக்கும் இந்த மீன்களை எப்படி அழிப்பது? 16.02.2025 7:18
European carp என்ற மீன் இனம் ஆஸ்திரேலியாவில் அழிக்கப்படவேண்டிய pest அல்லது தீங்குயிரி என்று சொல்லப்படுகிறது. இந்த வகை மீன்களை கட்டுப்படுத்துவது அல்லது கொல்வது என்பது சவாலாக மாறியுள்ளது. இந்த மீனின் பின்னணி கதையையும், சவாலையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 15.02.2025 4:59
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (9 – 15 பெப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 15 பெப்ரவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Cultural burning: using fire to protect from fire and revive Country - தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு 14.02.2025 9:29
Did you know that Indigenous Australians have been using fire to care for the land for tens of thousands of years? Evidence show that cultural burning practices not only help reduces the intensity and frequency of wildfires but also plays a vital role in maintaining healthy ecosystems. Experts share insights on the latest evidence behind this ancient practice. - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பூர்வீ...
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பனில் மரணம் - மாமனார் விளக்கம் 14.02.2025 6:10
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 2012 -ஆம் ஆண்டு புகலிடம் தேடி வந்த 42 வயதான புகலிடக்கோரிக்கையாளர் பிரதாப் குணசேகரம் சுமார் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். அவரை பற்றியும் அவருக்கு என்ன நடந்தது என்பதை பற்றியும் உரையாடுகிறார் அவரின் மாமனார் செல்வரட்ணம் மாணிக்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 14.02.2025 8:38
யாழ்.தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம்; ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் இதில் 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை அரசு அறிவிப்பு; கடந்த ஞாயிறு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பல மணிநேரம் மின்தடை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
கல்விக் கடன் உள்ள மாணவர்கள் வீடு வாங்குவதை எளிதாக்கும் அரசு! 14.02.2025 6:37
HECS-HELP கல்விக் கடன்கள் உள்ள மாணவர்கள் தங்களின் முதலாவது வீடு வாங்கும்போது அவர்களுக்கு கடன் வழங்கும் வங்கிகள் மாணவர்களின் HECS-HELP கடனை பரிசீலிக்கும் விதிகளைத் தளர்த்துமாறு நிதிக் கட்டுப்பாட்டாளர்களிடம் பெடரல் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
தனது வான் வெளியை ஆஸ்திரேலியா 'ஊடுருவல்' செய்ததாக சீனா குற்றம் சாட்டியது 14.02.2025 4:37
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை
வைரஸ் & தடுப்பூசி: நமது சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் தரும் விளக்கம் 13.02.2025 10:20
கோடைகாலத்திலும் சரி, குளிர்காலத்திலும் சரி, காய்ச்சல், வைரஸ் பரவல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது. இந்த நிலையில், நமது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
மோசடிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? 13.02.2025 12:09
நாட்டில் பல்வேறுவிதமான மோசடிகளில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இத்தகைய மோசடிகள் தொடர்பிலும் மோசடியால் பாதிக்கப்பட்டால் எங்கே முறையிடலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் மதிப்பு இரட்டிப்பான இடங்கள் எவை? 13.02.2025 2:52
கடந்த ஐந்து ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு மதிப்புகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த வளர்ச்சியின் அசாதாரண காலம் வரலாற்றில் பொறிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
இந்தக் காதலின் வயது எழுபது ! 13.02.2025 19:18
உங்களுக்குத் தெரிந்தவர்களில் அதி கூடிய நாட்கள் ஒன்றாக வாழ்கிறவர்கள், அல்லது வாழ்ந்தவர்கள் யார் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்?
'வெள்ளை, முட்டாள்' என்பது நிறவெறியா? 13.02.2025 8:38
ஆஸ்திரேலிய கால்பந்து நட்சத்திரம் Sam Kerr, இலண்டனில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, ஒரு காவல்துறை அதிகாரியை "stupid and white" - "முட்டாள் வெள்ளையன்" என்று விவரித்ததாக அவர் மீது 2023ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. அது குறித்த விசாரணை நேற்று முன் தினம் நிறைவடைந்தது.
முதலீடு செய்தால் விசா என்கிறது NZ; நாங்களும் தருவோம் என்கிறது லிபரல் 13.02.2025 6:50
பணக்கார முதலீட்டாளர்களுக்கான "கோல்டன் டிக்கெட்" விசாவை புதிய நிபந்தனைகளுடன் நியூசிலாந்து அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் Coalition தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் "கோல்டன் டிக்கெட்" விசா மீண்டும் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் என்று பெடரல் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton தெரிவித்துள்ளார் . இது குறித்து ஆங்கிலத்தில் Sara Tomevska, Ewa Staszewska மற்றும் Essam Al-Ghalib...
இஸ்ரேலிய நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் காணொலி வெளியிட்ட இரு NSW செவிலியர்கள் மீது விசாரணை 12.02.2025 4:05
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 13 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை
உலக வானொலி தினத்தில் நாங்கள் தரும் செய்தி என்ன? 12.02.2025 15:34
இன்று (13 பெப்ரவரி) உலக வானொலி தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புகளும், பத்து வருடங்களுக்கும் மேலாக உலக வானொலி தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வையொட்டி, பக்க சார்பற்ற, நம்பகமான செய்திகள் மற்றும் கதைகளைத் தொடர்ந்து எடுத்து வருவோம் என்று, SBS தமிழ் வானொலி ஒலிபரப்பாளர்கள் மீண்டும் உறுதி பூண்கிறார்கள். கூடவே, "ஏன் வானொலி பணிக்கு வந்தேன்" என்று தங...
World Radio Day Special: The resilience, innovation & digital transformation of radio 12.02.2025 10:01
On this special World Radio Day episode, RaySel from SBS Tamil speaks with Davide Schiappapietra, SBS Audio Head of Language Content, about the evolution of radio in the digital age. From the shift to on-demand audio and podcasting to SBS Audio’s role in informing diverse communities, Davide shares insights on how radio continues to adapt and thrive. He also reflects on his personal journey from I...
குயின்ஸ்லாந்தின் 50-cent பொது போக்குவரத்து கட்டணத் திட்டம் நிரந்தரமாக்கப்பட்டது! 12.02.2025 2:22
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திட்டம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.