SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2747 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Nov 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

சிட்னி, மெல்பனில் மீண்டும் Laughing கோ Laughing! 23.04.2025

புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகனின் தயாரிப்பில், laughing கோ laughing நாடகம், மீண்டும் சிட்னி, மெல்பனில் மேடையேறுகிறது. இது தொடர்பில் மருத்துவர் ஜெயமோகனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை? 23.04.2025

தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி 23.04.2025

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு; பாஜக கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக-அதிமுக விவாதம்; சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது; ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது ஆயுததாரிகள் கொடூர தாக்குதல் உள்ளிட்ட செய்திகளுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Who's Right? Who's Left? Where do you fall on the political spectrum? - SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது? 23.04.2025

For years, the labels 'left' and 'right' have been used to describe where political parties sit. But are they still useful? - பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் தேதி 22.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது? 22.04.2025

In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

'பெரிய பட்ஜெட், ஹீரோ படங்களினால் நல்ல தமிழ் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது' 22.04.2025

திரைப்பட ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பல அடையாளங்களின் வழியே அறியப்படும் நிழல் திருநாவுக்கரசு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “நிழல்” எனும் சினிமா இதழைதொடர்ந்து நடத்தி வருகிறார். சொல்லப்படாத சினிமா, திரையிசையில் தமிழிசை, நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்று பல நூற்களையும் பதிப்பித்துள்ளார். தமிழ்நாடு எங்கும் பல குறும்படப் பயி...

போப் பிரான்சிஸின் மறைவிற்காக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் - பிரதமர் 22.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt 22.04.2025

'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.

நாடாளுமன்றத் தேர்தல் 2025: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன? 22.04.2025

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் The Australian நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவு குறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

மாற்றத்தின் முகம்: போப் பிரான்சிஸ் 1936-2025 21.04.2025

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜிவ் காந்தி 21.04.2025

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாட்டுபுற இசைக்கலைஞர் ராஜீவ் காந்தி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் செல்வி.

ஆஸ்திரேலிய தேர்தல் முறை அறிவோம்: Preferential Voting 21.04.2025

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் Preferential Voting என்ற விருப்ப வரிசை வாக்களிப்பு முறை எப்படி பின்பற்றப்படுகிறது என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

ஈஸ்டர் காலத்தில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டாலும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்தன 21.04.2025

ஈஸ்டர் காலத்தில் பிரச்சார வேலைகள் சற்று மந்தநிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, நான்காவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு நாளை ஆரம்பம்! 21.04.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/04/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இயேசு உயிர்ப்பு நாள் சிறப்புரை! 19.04.2025

ஈஸ்டர் - இயேசு உயிர்ப்பு நாள் சிறப்புரை. வழங்குகிறார் - அருட்சகோதரி லீமா அவர்கள்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 18.04.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 ஏப்ரல் – 19 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: நேஷனல் கட்சித் தலைவர் Littleproud 18.04.2025

'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் நேஷனல் கட்சித் தலைவர் David Littleproud பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 18.04.2025

பிள்ளையான் கைது தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள்; சூடு பிடிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களம்; சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த வீதி விபத்துகள், கொலைகள், நீரில் மூழ்கி மரணம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

குடிவரவு தொடர்பில் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் எவை? 18.04.2025

நாட்டின் குடிவரவுக்கொள்கை என்பது அனைத்து கட்சிகளாலும், தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விடயமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல கொள்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் குடிவரவு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை. ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் வேலு அவர்களின் கருத்துக்களோடு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங...

ஈஸ்டர் பண்டிகை தொடக்கத்தில் சிறைக் கைதிகளை சந்தித்தார் Pope Francis 18.04.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 18 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

நீண்ட தூர கார் பயணமா? இவற்றை தெரிந்துவைத்திருப்பது அவசியம் 17.04.2025

விடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல அம்சங்கள் உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான திரு.போல்ராஜ் மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் திரு.கந்தையா குமாரதாசன் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: செல்வி.

ஈஸ்டர் சாக்லேட் விலை ஏற்றம்! காரணங்கள் என்ன? 17.04.2025

இது ஈஸ்டர் பண்டிகைக் காலமாகும். ஈஸ்டரின்போது, Easter Eggs போன்ற பலவிதமான சாக்லேட் தயாரிப்புகள் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் இம்முறை இவற்றின் விலைகள் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்விலையேற்றம் ஏன் நிகழ்ந்தது? இது பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

பெர்த் ஓட்டுநர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தரவுகள்! 17.04.2025

பெர்த்தின் முக்கிய சாலைகள் சிலவற்றில் நிறுவப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள், வாகன ஓட்டுநர்களின் ஆபத்தான நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இஸ்லாமிய, இந்து, பஹாய் பார்வையில் ஈஸ்டர் 17.04.2025

Easter அல்லது உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. கிறிஸ்தவ மத நம்பிக்கை தவிர, உலகில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழாவை இஸ்லாமிய, இந்து, பஹாய் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.