SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2561 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Oct 2, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 21.03.2025

கொழும்பு பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் ரணில் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு; உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு. மலையக மக்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயற்படும் தோட்ட கம்பனிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இஸ்ரேலிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதில் 90ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் 21.03.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 21 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

விமானம் ரத்து/தாமதமானால் பயணிகளுக்கு நட்ட ஈடு வழங்க சட்டம் வந்தால் கட்டணம் உயரும் - விமான நிறுவனங்கள் 20.03.2025

விமானம் ரத்து செய்யப்படும் போது அல்லது தாமதமானால் பயணிகளுக்கு நட்ட ஈடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவு மீதான நாடாளுமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. நட்ட ஈடு வழங்குவதற்கான சட்டம் வந்தால் விமானக் கட்டணம் உயரும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Tanya Dendrinos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை விரிவுபடுத்தியுள்ள Qantas! 20.03.2025

ஆஸ்திரேலியாவிற்கு விமானம் அல்லது கப்பலில் வருபவர்கள், தமது தங்குமிடம் மற்றும் நாட்டிற்கு என்ன பொருட்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை தெரிவிக்கும், Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையை Qantas நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? 20.03.2025

உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் என்று பட்டியல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்? 20.03.2025

அறிவியல் தகவலை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுவரும் SciNirosh அவர்கள் உடல் எடையை குறைக்கும் சில வழிகளையும், தந்திரங்களையும் பகிர்ந்துகொள்கிறார். இது முதலில் 2016 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டது.

குற்றவாளியை நாடுகடத்த அரசுக்கு அதிகாரம் வழங்க கருத்து தேர்தல் - எதிர்கட்சித்தலைவர் டட்டன் யோசனை 20.03.2025

நாட்டில் கடுமையான குற்றம் செய்து தண்டிக்கப்படுகின்றவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் இரட்டை குடியுரிமையுள்ளவர்களாக இருந்தால், அந்த குற்றவாளியிடமிருந்து குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பதை நிறுவ Referendum கருத்து தேர்தல் நடத்தும் யோசனையை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் முன்வைத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெ...

தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள் 20.03.2025

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை; டாஸ்மாக் முறைகேடு-தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்; நாக்பூரில் வன்முறை உள்ளிட்ட செய்திகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

அண்மையில் மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் எமக்கு வழங்கிய நேர்காணல் 20.03.2025

‘கனவில் உதிர்ந்த பூ’ , ‘ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்’ போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ள தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு...

நாட்டில் PBS திட்டத்தில் மருந்துகளின் விலை $25டாலராக குறைகிறது 20.03.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிக எண்ணிக்கையில் சர்வதேச மாணவர்கள்! 19.03.2025

2025 பெப்ரவரியில் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் புதிய தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆட்சிக்கு வந்தால் Citizenship test-இல் புதிய கேள்விகள் சேர்க்கப்படும்: எதிர்க்கட்சி 19.03.2025

எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் சில புதிய கேள்விகள் சேர்க்கப்படும் என Coalition - எதிர்க்கட்சி கூட்டணி முன்மொழிந்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

The AI Election: Will artificial intelligence influence how Australia votes? - SBS Examines : AI தேர்தல் : ஆஸ்திரேலிய வாக்குகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்குமா? 19.03.2025

Experts say AI could have significant impacts on democracy and trust. - ஜனநாயகம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையில் செயற்கை நுண்ணறிவு AI குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரியாரின் எழுத்துக்கள் அரசுடைமையாவதற்கு ஏன் அனுமதி மறுக்கிறோம்? – கி. வீரமணி பதில் 19.03.2025

திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் இது.

ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தர விசா என்று ஆசைகாட்டும் மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி? 19.03.2025

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கான குடியேற்ற விசா வாங்கித்தருகிறோம் என்று தமிழ்நாட்டில் ஆசைகாட்டும் மோசடி Migration Agents அதிகரித்துவருகின்றனர். இந்த பின்னணியில், இப்படியான மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி என்றும், மக்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் யுக்திகள் என்ன என்பதையும், அனுபவங்களோடு விளக்குகிறார் பிரகாஷ் நடராஜன் அவர்கள். நியூசிலாந்து நாட்டிலிருந்துகொண்டு தனது பிரபல Y...

ஆண் நடனக் கலைஞர் இல்லையென்று யார் சொன்னது? 19.03.2025

ஆய்வுகள் காட்டுவது போல், நடனத்தில் பெண்களின் பங்கேற்பு ஆண்களை விட மிக அதிகம், சில அறிக்கைகள் ஆஸ்திரேலியாவில் நடனக் கலைஞர்களில் சுமார் 89% பெண்கள் என்று கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தென்னிந்திய சமூகத்தினரிடையே புள்ளிவிவரங்கள் இன்னும் துருவப்படுத்தப்பட்டுள்ளன. பவஜன் குமார் ஒரு உணர்திறன் மிக்க பரதநாட்டிய நடனக் கலைஞர், வசீகரிக்கும் மேடை இருப்பு மற்றும் இயக்கத்தில் துல்லியம் க...

Alfred சூறாவளி & புதிய அமெரிக்க வரி பெடரல் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தும்! 18.03.2025

லேபர் அரசின் நான்காவது பெடரல் பட்ஜெட் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அரசின் செலவுகள் குறித்து நேற்று Queensland Media Club-இல் கருவூலக்காப்பாளர் Jim Chalmers உரையாற்றினார். அப்போது எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் பற்றாகுறை இருக்கும் என்று கூறினார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.

உக்ரைன் போர் நிறுத்ததிற்கு ரஷ்யா ஒப்புதல் - ஆனால் முழுமையாக தாக்குதலை நிறுத்த மாட்டோம்! 18.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

அதிரடி மாற்றங்களுடன் அறிமுகமாகிறது ஆஸ்திரேலியாவின் புதிய $5 நோட்டு! 18.03.2025

ஆஸ்திரேலியாவின் $5 நாணயத்தாளின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவதாகவும் அதிலிருக்கும் மகாராணியின் உருவப்படத்திற்கு பதிலாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நாட்டுடன் கொண்டுள்ள உறவை கொண்டாடும் ஒரு புதிய வடிவமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

வெப்பம் அதிகரிப்பதால் இதயநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது- ஆஸ்திரேலிய ஆய்வு 18.03.2025

ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்புக்களில் 7.3 சதவீதத்திற்கு தீவிர வெப்ப அலைகள் காரணமாகின்றன என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

NSW-இல் கடந்த ஆண்டு மிகவும் அதிகமாக மொத்தம் 85 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்! 18.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

கட்டுமானப் பணியில் ஈடுபடும் சிலருக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய் அபாயம் 17.03.2025

Engineered stone தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதனை ஆஸ்திரேலியா தடை செய்தது. தற்போது சிட்னியில் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சுமார் 13 பேர் இந்த கொடிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

'சிறு வயதிலேயே திராவிடர் கழக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன்' - கி. வீரமணி 17.03.2025

திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் முதல் பாகம் இது.

இரத்த தானம் செய்வதில் நமது நலமும் கலந்துள்ளது. எப்படி? 17.03.2025

குடியேற்றவாசிகள் இரத்த தானம் செய்ய எளிதாக முன்வருவதில்லை என்றும், இதற்கு அவர்களிடம் இருக்கும் தவறான புரிதல்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் இரத்த தானம் செய்வதில் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், ஒருவரின் உடல் நலம் எப்படி இரத்த தானம் மூலம் மேம்படுகிறது என்றும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆக...

'தவறான சாக்குப்போக்குகளின்' கீழ் Labor கட்சி சில கட்டாய தண்டனைச் சட்டங்களை அவசரமாக இயற்றியதா? 17.03.2025

Duralலில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நிறைந்த Carvan ஒரு குற்றவியல் மோசடி வேலை என்று விசாரணைகளின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசு அதி தீவிர சட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றும், அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் Greens கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.