SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இலங்கையில் உள்ளவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் புலமைப்பரிசில்! 04.02.2025 2:26
ஆஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின்கீழ் இலங்கையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் Australia Awards புலமைப்பரிசிலின் 2026ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
குயின்ஸ்லாந்தின் பிரபல சுற்றுலாத் தீவில் சுறா தாக்கி 17 வயதுப் பெண் பலி 04.02.2025 3:34
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
Pink Sari நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்! 03.02.2025 10:48
பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இதனை முன்னிட்டு Pink Sari அமைப்பு பிப்ரவரி 9-ஆம் தேதி ஒரு விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நடைபயணம் குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி வெங்கட்ராமனுடன் உரையாடுகிறார் செல்வி.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 03.02.2025 8:17
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட் 2025 ஆதரவும் எதிர்ப்பும், ஈரோடு இடைத்தேர்தல் - திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் மற்றும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'பெரியார் சர்ச்சை' போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Donald Trump எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா? 03.02.2025 8:20
அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, அமெரிக்க மண்ணில் பிறந்தால் போதும் என்று அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அதனை மாற்றுவேன் என்று Donald Trump கூறியிருந்தார். அதிபர் பொறுப்பேற்ற முதல் நாளே, Executive order என்று அறியப்படும் அதிபரால் விடுக்கப்படும் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து விட்டார்.
இணையவழி நியோ- நாஸி வலையமைப்பு மீது நிதித் தடைகளை விதித்த ஆஸ்திரேலியா 03.02.2025 3:52
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
சீனாவின் புதிய DeepSeek AI Chatbot ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எவை? 02.02.2025 11:24
சீனாவின் புதிய DeepSeek AI Chatbot கடந்த வாரம் வெளிவந்து உலகளாவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய AI Chatbot இந்தளவு பிரபலமாக என்ன காரணம்? இது ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இ...
Important tips for cycling in Australia - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான முக்கிய குறிப்புகள் 02.02.2025 8:46
Riding a bicycle is a common and affordable form of transport in Australia, with people cycling for sport, recreation and to commute. Cycling also comes with some rules to keep all road users safe. - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுவதென்பது ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 01.02.2025 6:39
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (25 ஜனவரி – 01 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 01 பிப்ரவரி 2025 சனிக்கிழமை.
ஆஸ்திரேலியாவில் Paracetamol மாத்திரைகளின் விற்பனைக்கு கட்டுப்பாடு! 31.01.2025 2:20
ஆஸ்திரேலியாவில் Paracetamol மாத்திரைகளின் விற்பனை தொடர்பிலான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் எந்தப்பகுதியில் நில அதிர்வு ஏற்படக்கூடிய அதிக ஆபத்து உள்ளது? 31.01.2025 2:22
ஆஸ்திரேலியாவின் அதிக ஆபத்துள்ள பூகம்ப மண்டலங்கள் குறித்த மதிப்பீட்டை Geoscience Australia புதுப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
“தமிழருக்கும் பூர்வீக குடி மக்களுக்குமான உறவு மிக நீண்டது” 31.01.2025 19:45
Dr ப்ரியா ஸ்ரீனிவாசன் ஒரு கலை இயக்குனர், நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நூலாசிரியர். இவர் பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். கலை மூலம் சமூக நீதி பிரச்சினைகளை நோக்கிச் செல்ல கோட்பாடு மற்றும் நடைமுறையை இணைக்கிறார்.
நாட்டில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த விமர்சனங்களை பிரதமர் நிராகரித்தார் 31.01.2025 4:27
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் :31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை.
Dementia - மறதிநோய் வராமல் தடுக்க முடியுமா? 30.01.2025 6:14
நாட்டில் பல லட்சம் ஆஸ்திரேலியர்கள் மறதிநோயுடன் வாழ்கின்றனர். நான்கு முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் மறதிநோய் வருவதை தாமதப்படுத்தலாம் என புதிய மருத்துவ ஆய்வு முயற்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 30.01.2025 8:36
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இரு மீனவர்கள் காயமடைந்துள்ளார்கள். மூத்த தமிழ் தலைவர் மாவை சோனதிராசா மறைந்தார். சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க காணாமலாக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை. அவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியா...
சிட்னியில் வெடிபொருட்கள் நிரம்பிய caravan கண்டுபிடிப்பு: பிந்திய தகவல்கள் 30.01.2025 2:43
சிட்னியின் வடமேற்கிலுள்ள Dural பகுதியில் வெடிபொருட்கள் நிறைந்த ஒரு caravan கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சமையல் நன்றாக வருவதன் ரகசியம் என்ன? - Chef தாமு பதில் 30.01.2025 13:27
தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர்களில் ஒருவர் தாமு அவர்கள். அவருக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சமையல்கலைஞர் தாமு அவர்கள் 2022-ஆம் ஆண்டுஆஸ்திரேலியா வருகை தந்திருந்த போது சமையல் துறையில் அவரின் பயணம் மற்றும் அவர் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து செல்வியுடன் உரையாடியிருந்தார். அந்நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
நாட்டின் பணவீக்கம் வீழ்ச்சி - வட்டி வீதம் குறையுமா? 30.01.2025 5:44
நாட்டின் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஆகவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள பெடரல் தேர்தலுக்கு முதல் வட்டி வீதம் குறையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Anna Henderson மற்றும் Sophie Bennett இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Coles மற்றும் Woolworths மீதான நம்பகத்தன்மை வீழ்ச்சி - ஆய்வு முடிவு 30.01.2025 6:05
Roy Morgan நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், Coles மற்றும் Woolworths மீதான அவநம்பிக்கை வியத்தகு அளவில் வளர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் விலை நிர்ணய நடைமுறைகள் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Northern Territory சிறைசாலைகளில் கூட்ட நெரிசலினால் அவதியுறும் கைதிகள்! 30.01.2025 4:41
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 30/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்? 29.01.2025 2:40
விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியல்- Henley Passport Index வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மதுரையில் கைவிடப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்கம்-பிந்திய தகவல்கள்! 29.01.2025 8:22
தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு பற்றிய தொல்லியல் ஆய்வு, மதுரையில் கைவிடப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்கம், பிரபாகரன் - சீமான் சந்திப்பு சர்ச்சை பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
இரும்பின் தொன்மை: தமிழ்நாட்டில் தொடங்கியதா? 29.01.2025 29:05
தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக முன்னர் கருதப்பட்டது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த, இரும்பினாலான தொல் பொருட்களை ஆய்வு செய்த போது அவற்றின் காலம் கி. மு. 3,345 வரை செல்வதாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பெர்த் நகர தமிழர்கள் அனைவரும் இணைந்து மாபெரும் பொங்கல் விழா 29.01.2025 7:55
மேற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து பெர்த் நகரில் “பொங்கல் – தமிழர் அறுவடைத் திருநாள்” என்ற கருப்பொருளில் பிப்ரவரி 15 சனிக்கிழமையன்று கண்கவர் பொங்கல் விழாவை நடத்த முனைப்புடன் தயாராகி வருகின்றன.
சீனாவின் புதிய AI DeepSeek-இன் அறிமுகத்தால் அமெரிக்க பங்குச் சந்தை சரிவு! 29.01.2025 4:27
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 29/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.