SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

Why are we debating Welcome to Country? - SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்? 31.03.2025

The government's Welcome to Country spending has been heavily criticised but some believe the cultural protocol is being used as a "political football". - Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கின ! 31.03.2025

நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

நாட்டில் லேபர்கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரிப்பு: கருத்துக்கணிப்பு முடிவு 31.03.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 31 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.

செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – சுய இன்பம் 30.03.2025

டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...

ரமலான் தரும் செய்தியும், இஸ்லாமியர்களின் தற்போதைய சவால்களும்! 30.03.2025

ரமலான் குறித்த சிறப்பு கலந்துரையாடல். ரமலான் உலகுக்கு தரும் செய்தி, ரமலான் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்-முஸ்லீம் அடையாளம், நோன்பு நாட்களில் முஸ்லீம்கள் வேலைத் தளங்களில் எதிர்கொள்ளும் சவால், Islamophobia எனப்படும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக நாட்டில் அதிகரிக்கும் போக்கு என்று பல அம்சங்கள் குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: ஹாலித் முஹம்மது, ஷாபாத்...

How far can you legally go to protect yourself from robbery in Australia? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? 30.03.2025

In Australia, robbery isn't just theft; it has specific legal definitions and consequences. This episode of Australia Explained podcast explores the types of crimes, including stealing. What does it mean legally? How can you protect yourself? And what support is available if it happens to you? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பிலும், இதனால் பாதிக்கப...

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 28.03.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (23 – 29 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 29 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிப்பு:ART முடிவுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது 28.03.2025

ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Stem cell (குருத்தணு) பெறுவதில் ஆஸ்திரேலிய தமிழர் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன? 28.03.2025

கடந்த வருட இறுதியில், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட 28 வயதான நிமலன் சுந்தரம் என்பவருக்கு T-cell Acute Lymphoblastic Leukemia எனும் அரிய வகை இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. திடகாத்திரத்துடன் வாழ்ந்து வந்த அவருக்கு இந்தப் புற்று நோய் வந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது அவரையும் அவரது குடும்பத்தவரையும் உலுக்கியிருந்தது. இருந்தாலும், அவரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும...

Stem cell (குருத்தணு) தானம் செய்ய ஏன் பலர் முன்வருவதில்லை? 28.03.2025

சிலரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும் stem cell சிகிச்சை தேவைப்படலாம். அதற்கு அவருக்கு ஒத்த மரபணு உள்ள ஒருவர் அதனைத் தானம் செய்ய வேண்டும். ஆனால், இலங்கை, இந்திய பின்னணி கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ் பின்னணி கொண்டவர்கள் குருத்தணு தானம் செய்யும் பதிவேட்டில் அதிகளவில் இல்லை என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்து, ஆஸ்திரேலியாவில் நாற்பது வருடங்களுக்கு மேல் ஒரு இரத்தவி...

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 28.03.2025

கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைந்துள்ளார்கள்; வவுனியாவில் இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது; இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு பிரிட்டன் பயணத்தடை விதித்துள்ளது – இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

தேர்தல் அறிவித்தலின் பின் ஆளுநர் Sam Mostyn நாடாளுமன்றத்தைக் கலைத்தார் 27.03.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை! 27.03.2025

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

எதிர்கட்சியின் பதில் நிதிநிலை அறிக்கையில் என்ன அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன? 27.03.2025

நேற்றிரவு பெடரல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton 2025-26 நிதியாண்டிற்கான பதில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் திட்டங்கள், குடிவரவு எண்ணிக்கை குறித்த திட்டம் மற்றும் நலத்துறை மேம்பாடு என பல அம்சங்களை அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 - அரசு வட்டாரம்! 27.03.2025

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் 485 TR விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம்! 27.03.2025

ஆஸ்திரேலியாவில் 485 Temporary Graduate விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

'ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்' - சிறுகதை 27.03.2025

தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் போது, தனது சிறுகதை ஒன்றை அவரது குரலிலேயே அவர் வாசித்திருந்தார். அதனை ஒரு நிகழ்ச்சியாகத் தயாரித்து வழங்குகிறோம்.

2032 பிரிஸ்பன் புதிய ஒலிம்பிக் அரங்கம் - சர்ச்சையும், தீர்வும்! 27.03.2025

2032 பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான மைதானங்கள், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த 100 நாள் சுயாதீன மதிப்பாய்வைத் தொடர்ந்து 2032 ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதற்கான திட்டங்களை கடந்த செவ்வாய்க்கிழமை குயின்ஸ்லாந்து மாநில பிரீமியர் David Crisafulli வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

வெற்றி பெற்றால் பெட்ரோல் விலையை குறைப்போம் - Peter Dutton 27.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இந்த வார தமிழ்நாடு/இந்தியா: முக்கிய செய்திகளின் பின்னணி 26.03.2025

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்; சென்னையில் தொடர் நகை கொள்ளை- என்கவுன்டர் பின்னணி; தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு; ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா நகைச்சுவை பேச்சும் சிவசேனா, பாஜக கட்சிகளின் விமர்சனமும், ஜம்மு & காஷ்மீரில் பிரிவினைவாத செயல்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார...

ரமலான் மாதத்தில் வேலை, வீடு மற்றும் நோன்பு எல்லாவற்றையும் இவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்! 26.03.2025

ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. சூரிய உதயம் முதல் மறையும் வரை உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வேலை, வீடு, சமையல் மற்றும் வழிபாடு ஆகியவற்றை ரமலான் மாதத்தில் எவ்வாறு கையாள்கிறார்கள் என சிட்னி, பிரிஸ்பன் மற்றும் பெர்த் நகரங்களில் வசிக்கும் சிலரின் அனுபவ கருத்துகளுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

நிதிநிலை அறிக்கையில் ஒருவருக்கான புதிய வரிச்சலுகை அறிவிப்பு! 26.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

நாட்டில் என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன? 26.03.2025

நாட்டில் பல்வேறுவிதமான மோசடிகளில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன என்பது தொடர்பில் விளக்குகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

நிதிநிலை அறிக்கை 2025: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன? 26.03.2025

2025-26 நிதியாண்டிற்கான பெடரல் அரசின் நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

'சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்' - One Nation கட்சி 25.03.2025

Pauline Hanson-இன் One Nation கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுமார் 75,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடியேற்றம் நாட்டில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து SBS Examines -இற்காக Rachael Knowles, Jarrod Landells மற்றும் Cristina Freitas இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து தர...

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.