SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி 30.04.2025 8:48
தமிழ்நாட்டில் கண்ணகி - முருகேசன் ஆணவப்படு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது, காஷ்மீரில் தொடரும் பதற்றம், இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம், தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாடு குறித்து தொடரும் சர்ச்சை உள்ளிட்ட செய்திகளுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஏன் கடந்த ஆஸ்திரேலிய தேர்தல்களைவிட இது மிகப் பெரிய தேர்தல்? 29.04.2025 7:23
ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இதுவரை நடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது மிகப்பெரிய தேர்தல் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
பீட்டர் டட்டனின் அலுவலகத்தை சேதப்படுத்திய பெண் மீது வழக்குப்பதிவு 29.04.2025 3:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
NSW மாநிலத்தில் 18 வயது இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: பிந்திய தகவல்கள் 29.04.2025 3:13
நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் பகுதியில் 18 வயது இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
கனடா வான்கூவர் திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி: நடந்தது என்ன? 29.04.2025 8:00
கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடைபெற்ற பிலிப்பினோ திருவிழா சனக்கூட்டத்தில், நபர் ஒருவர் காரை ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். [[Warning contains distressing description of attack aftermath]]
உக்ரைனுடன் மூன்று நாள் போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு 29.04.2025 4:28
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 29/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Who's Right? Who's Left? How will migrant communities vote this election? - SBS Examines : இடதுசாரி வலதுசாரி யார்? புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? 28.04.2025 7:40
Migration policies are a hot topic this election, but it's not clear how our diverse communities will cast their vote. - ஆஸ்திரேலியாவில் உள்ள பல்லின பல்கலாச்சார சமூகங்கள் அரசியலை எவ்வாறு அணுகுகின்றன. புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர் விசா கட்டணம் அதிகரிக்கப்படும்- லேபர் கட்சி 28.04.2025 2:36
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், தமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு நிதியளிக்கப்படும் என லேபர்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
கடலில் காணாமல் போன மகன் பற்றிய செய்திக்காகக் காத்திருக்கும் சிட்னி தமிழ் குடும்பம் 28.04.2025 13:08
சிட்னி நகரைச் சேர்ந்த அட்சயன் அருணாசலம் என்ற 24 வயது இளைஞர் ஒருவர், புனித வெள்ளி அன்று கடற்கரைப் பக்கம் சென்றிருந்த வேளை பாரிய அலை வந்ததில், அவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் தேடுதல் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளமையால் அவரது குடும்பத்தினரின் சோகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்த மேலதிக தரவுகளை அறிய அட்சயன் அருணாசலம் அவர்களின் தாய் மாமன், திரு திருநந்தக்குமார் அவர்களுடன்...
தேர்தல் பிரச்சாரங்கள் கடைசி கட்டத்தை எட்டுகின்றன 28.04.2025 8:53
எதிர்வரும் சனிக்கிழமை ஃபெடரல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஐந்தாவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
வாழ்க்கைச் செலவு தொடர்பில் அரசியல் தலைவர்கள் நேரடி விவாதம்! 28.04.2025 4:15
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/04/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
‘எங்கள் கட்சி மக்களுக்கான அதீத சுதந்திரத்தை வலியுறுத்துகிறது’ – Craig Kelly (Libertarian) 27.04.2025 7:21
SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Libertarian கட்சியின் சார்பில் செனட் அவைக்கு போட்டியிடும் Craig Kelly அவர்கள...
ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் முன்வைக்கும் விலைவாசி தொடர்பான கொள்கைகள் என்ன? 27.04.2025 9:54
நாட்டின் ஆளும் கட்சியான லேபர் கட்சியும், முக்கிய எதிர் கட்சியான Coalition எனப்படும் லிபரல்-நேஷனல் கூட்டணியும், மூன்றாவது பெரிய கட்சியான கிரீன்ஸ் கட்சியும் விலைவாசி உயர்வு தொடர்பான பல கொள்கைகளை தேர்தல் களத்தில் முன்வைக்கின்றன. அவற்றில் முக்கிய கொள்கைகளை விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
‘கட்சிகள் தேர்தலில் கோவில் உட்பட அமைப்புகளுக்கு அன்பளிப்பு கொடுத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றன’– Malini (Independent) 27.04.2025 7:21
SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் சுயேட்சை வேட்பாளராக Parramatta நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் Dr Maa M...
‘எங்கள் கட்சி குடியேற்றவாசிகளுக்கு எதிரானதல்ல’ – Ganesh Loke (Trumpet of Patriots) 27.04.2025 7:36
SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Trumpet of Patriots எனும் கட்சியின் சார்பில் Parramatta நாடாளுமன்றத் தொகுதிய...
‘நான் செய்ததும், லேபர் செய்யப்போவதும்’ – Andrew Charlton MP (Labor) 27.04.2025 6:57
SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Parramatta தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Hon Dr Andrew Charlton MP அவர்கள...
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 26.04.2025 5:09
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (20 ஏப்ரல் – 26 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 26 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Who's Right? Who's Left? The ideological gender gap in Australia - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் என்ற ரீதியில் அரசியல் சித்தாந்த பிளவு உள்ளதா? 25.04.2025 8:19
Elections overseas last year showed a growing political divide between young men and women. Will the same happen here? - கடந்த ஆண்டு வெளிநாடுகளில் நடந்த தேர்தல்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பிளவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அவ்வாறான நிலையா? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தய...
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 25.04.2025 8:08
இந்தியாவின் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்; இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல், அமெரிக்க- சீனா வர்த்தகப் போர், சீனாவில் கென்யா அதிபர், ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாசை வலியுறுத்தும் பாலஸ்தீன அதிபர், ஆயிரக்கணக்கான ஆப்கான் அகதிகளை நாடுகடத்தும் பாகிஸ்தான் உள்ளிட்ட செய்திகளுடன் தமிழ்நாட்டிலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
நாடு முழுவதும் ANZAC நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது 25.04.2025 4:19
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 25 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை.
What is Closing the Gap? - Closing the Gap என்றால் என்ன? 25.04.2025 7:03
Australia has one of the highest life expectancies in the world. On average, Australians live to see their 83rd birthday. But for Aboriginal and Torres Strait Islander peoples, life expectancy is about eight years less. Closing the Gap is a national agreement designed to change that. By improving the health and wellbeing of First Nations, they can enjoy the same quality of life and opportunities a...
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 25.04.2025 8:14
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற ஆறாம் ஆண்டு நிறைவு; நான்கு மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 26 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Bankstown கொலை: போதைப்பொருள் கடத்தல்காரருடன் துணைவரின் தொடர்பு? 24.04.2025 6:52
இம்மாதம் 17ம் தேதி, வியாழக்கிழமை இரவு சிட்னியின் Bankstown பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக வாகனம் ஒன்றினுள் ஏற்றிச் சென்றனர். பின்னர் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் வாகனம் ஒன்று தீயூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதன் பின் இருக்கையில் அக் குறிப்பிட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகர...
சிட்னி முருகன் கோவில் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் எவை? 24.04.2025 2:27
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுந்தரப்பும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிவருகின்றன. இதில் குறிப்பாக சிட்னி முருகன் கோவில் குறித்து வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி பற்றிய செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
‘ANZAC தினம்: சமாதானத்தை விரும்பி, போர் வீரரை நினைவு கூரும் நாள்' 24.04.2025 10:14
ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும், எதிர்கொண்ட சவால்களையும், சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினத்தின் முக்கியத்துவம், அன்சாக் தினத்தை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் ஏன் அவதானிக்க வேண்டும் என்ற கருத்துகளை, தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய சரித்திரம், இலக்க...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.