SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள் 11.06.2026 9:21
தமிழ் சினிமாவின் 'இயக்குனர் இமயம்' என்று போற்றப்பட்ட மூத்த இயக்குநர் பாரதிராஜா மறைவு; தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' துவக்கம்; தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
சிட்னியில் திறக்கப்படும் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் பற்றிய தற்போதைய தகவல் 11.06.2026 9:40
சுமார் தொண்ணூறு ஆண்டுகளாகக் கனவாக இருந்த ஒரு திட்டம், இறுதியாக நனவாகப் போகிறது. நம் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையமான, மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தனது முதல் பயணிகளை வரவேற்கவிருக்கிறது. சிட்னி நகரத்தின் இரண்டாவது விமான நிலையம் இது. அது மட்டுமல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் புதிதாகக் கட்டப்படும் முதல் பெரிய சர்வதேச விமான நிலையமும் இது என்பது...
வீட்டு விலை சரிவு: இப்போது வீடு வாங்கலாமா, காத்திருக்கலாமா? 11.06.2026 11:50
ஆஸ்திரேலியாவின் வீட்டு சந்தை அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்து வருகிறது. வீட்டு விலைகள் குறைந்து வரும் இந்த சூழ்நிலையின் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் எதிர்கால நிலவரம் குறித்து சிட்னியிலுள்ள Pendle Hill பகுதியில் பல வருடங்களாக Aussie Unity Real Estate நடத்திவரும் ஜொனி தர்மா அவர்களுடன் உரையாடினோம். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 11 ஜூன் 2026 - வியாழக்கிழமை 11.06.2026 4:25
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/06/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
நாட்டில் எந்த வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது? 10.06.2026 3:15
ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகள் என்னென்ன என்பது தொடர்பான புதிய ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்! 10.06.2026 13:56
SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். SBS On Demand is a free streaming service offered by SBS. Media professional R. Sathyanathan, who has many years of experience in the industry, discusses...
சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்? 10.06.2026 8:28
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி Pendle Hill Civic Park எனும் பூங்காவில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியத் தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில், திருவள்ளுவர் சிலையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்த தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் Cumberland City Council கவுன்சிலர் சுஜன் செல்வேந்திரன் ஆகியோர் இ...
உங்கள் Tax Return விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை 10.06.2026 8:44
உங்கள் Tax Return- வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்குகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை தொடர்பில் செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
இலங்கை: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி வலுக்கும் போராட்டங்கள் 10.06.2026 8:23
இலங்கையில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், புலனாய்வு துறை முன்னாள் பிரதானி உள்ளிட்டவர்களின் விடுதலை வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடந்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இன்றைய செய்திகள்: 10 ஜுன் 2026, புதன்கிழமை 10.06.2026 3:45
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/06/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Vidya Vox: இரண்டு உலகங்களை இணைக்கும் இசைக் கலைஞர் 09.06.2026 17:40
Vidya Vox அவர்கள் இந்திய-அமெரிக்க பாடகி, பாடலாசிரியர் மற்றும் content creator ஆவார். இந்திய கிளாசிக்கல் இசை, Bollywood மெட்டுகள் மற்றும் Western pop இசையை தனித்துவமாக இணைத்து, உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சென்னையில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த அவர், தனது fusion இசை பாணியின் மூலம் உலகளாவிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். தனது இசைப் பயணம், அடையாளம், கலாச்சார தாக்கங்கள், சர்...
அரசின் வரி மாற்றங்கள் granny flats-ஐ எப்படி பாதிக்கும்? 09.06.2026 2:32
லேபர் அரசின் வரி மாற்றங்கள் granny flatகளை எப்படி பாதிக்கும் என்பது தொடர்பில் அரசு பதிலளித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மெல்பன் ரயில் சேவைகளைப் பயன்படுத்த இனி myki அட்டை தேவையில்லை 09.06.2026 2:46
மெல்பன் பொதுப் போக்குவரத்தில் டாப்-அண்ட்-கோ” (tap-and-go) வசதி விரைவில் முழுமையாக அறிமுகமாக உள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 09 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 09.06.2026 4:41
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
இந்தியாவில் காணாமல் போன மெல்பன் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிப்பு 08.06.2026 2:45
இந்தியாவில் காணாமல்போன மெல்பன் ஆசிரியர் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
How should we talk to children about antisemitism? - யூத விரோதம் (antisemitism) பற்றி குழந்தைகளுடன் நாம் எப்படி பேச வேண்டும்? 08.06.2026 10:53
Hearings for the Royal Commission on Antisemitism and Social Cohesion have revealed many victims and perpetrators of antisemitism in Australia are children. How do we discuss the issue in an age-appropriate way? - ஆஸ்திரேலியாவில் யூத விரோதம் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று ராயல் கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்த விரோதம் குறித்து...
ஆஸ்திரேலிய Citizenship இல்லாதவர்கள் அரசு உதவியுடன் வீடு வாங்க எதிர்ப்பு வலுக்கிறது! 08.06.2026 7:11
ஆஸ்திரேலிய குடியுரிமையில்லாத சுமார் 51,000 பேர் 5% deposit முன்பணம் திட்டத்தின் கீழ் வீடு வாங்கியுள்ளனர் என சமீபத்தில் நடைபெற்ற Senate Estimates விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 08 ஜுன் 2026 - திங்கட்கிழமை 08.06.2026 4:07
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/06/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
MiniPod: Man On! | Words we use - சிறு வலையொலி: Man on ! | நாம் பயன்படுத்தும் சொற்கள் 08.06.2026 4:05
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'Man On!'. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘Man on !' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழி...
ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழர் டெரன்ஸ் ஜெயரட்ணம்! 07.06.2026 11:19
சமூக நீதிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அதன் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக, ஆஸ்திரேலியாவின் அதியுயர் விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia (AM), இந்த வருடம் பேராசிரியர் Terence Jeyaretnam அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து Terence Jeyaretnam அவர்களை நேர்காண்கிறார் றேனுகா துரைசிங்கம்.
'தனிநபர் சாதனை அல்ல – குழுவின் வெற்றி' - AM விருது பெறும் தமிழர்! 07.06.2026 12:02
Intensive Care தீவிர சிகிச்சை மருத்துவம், தொற்று கட்டுப்பாடு, மற்றும் உயர்கல்வி துறைகளில் ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia Medal, இந்த ஆண்டு பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணியம் வெங்கடேஷ் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணியம் வெ...
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 07.06.2026 7:54
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை; நைஜீரியாவில் போக்கோ ஹராமிடமிருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்பு; இந்தியாவில் காக்ரோச் ஜனதா கட்சி; இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்?; வடகொரியாவில் சீன அதிபர் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (31 மே – 6 ஜூன் 2026) 06.06.2026 6:09
ஆஸ்திரேலியாவின் இந்த வார (31 மே – 6 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
NSW மாநில பெண்கள் இனி மருந்தகங்களிலேயே கருத்தடை மாத்திரை பெறலாம் 05.06.2026 2:45
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெண்கள் நேரடியாக மருந்தகங்களிலிருந்து கருத்தடை மாத்திரைகளை பெறுவதற்கான வசதி அறிமுகம். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
NSW மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல் 05.06.2026 2:26
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.