SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஏன் தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இல்லை? 13.10.2025 10:09
‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து...
‘இதயக்கனி’ இதழின் பயணம் 25 ஆண்டுகளாக எப்படி சாத்தியமாகிறது? 13.10.2025 15:22
‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து...
செய்தியின் பின்னணி: நடைமுறைக்கு வரும் Baby Priya சட்டம் என்ன சொல்கிறது? 13.10.2025 8:45
குழந்தை பிறந்த பிறகு இறந்தாலும் அல்லது உயிரிழந்து குழந்தை பிறந்தாலும், பெற்றோருக்கு வழங்கப்படும் முதலாளி நிதியுதவியுடன் கூடிய பெற்றோர் விடுப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்ற நோக்கில் பெடரல் நாடாளுமன்றத்தில் Fair Work திருத்தச் சட்டம் (Baby Priya) சட்டமுன்வடிவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2025 திங்கட்கிழமை 13.10.2025 4:41
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 12.10.2025 9:42
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் - சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம்; கரூர் கூட்ட நெரிசல் விசாரணை மனுக்கள்: நாளை தீர்ப்பு வழங்குகிறது இந்திய உச்ச நீதிமன்றம்; பாஜக அண்ணாமலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Cairns எப்படி சிறந்த நகரம்? எனது இலக்கை அடையும் நகரமாக எப்படி மாறியது? 12.10.2025 8:08
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் நடராஜன் அவர்களை சந்தித்தோம். Cairns நகரம் தனது இலக்கை அடையும் நகராக மாறிய கதையை விவரிக்கிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.
ஏன் Cairns நகரை தேர்ந்தெடுத்தேன்? இந்த நகரம் உங்களுக்கும் பிடிக்கும்! 12.10.2025 10:03
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் விஜி அவர்களை சந்தித்தோம். Real estate எனப்படும் வீடு விற்பனை முகவராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த அவரின் கதையையும், பிர...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 அக்டோபர் – 11 அக்டோபர் 2025) 11.10.2025 6:03
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (5 அக்டோபர் – 11 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
‘Here for Uber pickup?’: How Sikhs are responding to stereotypes - SBS Examines : சீக்கியர்கள் பாகுபாட்டை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? 10.10.2025 7:37
Sikhism is a rapidly growing religion in Australia, but it's still poorly understood. How are community leaders responding to misinformation and discrimination? - சீக்கிய மதம் உலகின் ஐந்தாவது பெரிய மதம், மேலும் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாக சீக்கிய மதம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்குவரி தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தீபாவளி அலப்பறைகள்' 10.10.2025 7:27
மெக்குவரி தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தீபாவளி அலப்பறைகள்' என்ற கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் மெக்குவரி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஆதவன் ஸ்ரீனிவாசன், தேஜஸ்வினி ராஜீவ் மற்றும் வைஷ்ணவிப்ரியா சிவகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
'பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் நிரந்தர வதிவிடத்திற்கான நேரடிப் பாதையைத் தவறவிடுகின்றனர்' 10.10.2025 2:50
ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பிலான Jobs and Skills ஆஸ்திரேலியா அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: திருடுவதை ஏன் பல ஆஸ்திரேலியர்கள் சரி என்கிறார்கள்? 10.10.2025 6:45
ஆஸ்திரேலியர்களில் சிலர் Retail Theft - “கடைகளில் நடக்கும் திருட்டு" சில நேரங்களில் நியாயமானது என்று கருதுவதாகவும் மற்றொரு பக்கம், பெரும்பாலானவர்கள் அதனை இன்னும் குற்றமாகவே காண்பதாகவும் ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 10 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை 10.10.2025 4:40
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 10.10.2025 8:32
யாழ்.தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் மற்றும் பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க வேண்டாம் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டம் 10.10.2025 16:36
VALID அமைப்பினால் முன்னெடுக்கப்படும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டம் தொடர்பில் விளக்குகிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த அகிலன் குறூஸ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 09.10.2025 9:33
காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டஇஸ்ரேல், ஹமாஸ்; தைவான் அருகே ராணுவசெயல்பாடுகளை அதிகரித்திருக்கும் சீனா; வெனிசுலாமீது ராணுவ நடவடிக்கைக்கு தயாராகிறதாஅமெரிக்கா?; சிரிய ராணுவம்- குர்து போராளிகள்இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; ஆப்கான்வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை;சீனாவிற்கான மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரித்தபிரேசில்; ஹைதி வன்முறையில் பாதிக்கப்படும் குழந்தைகள் உள்ளிட்ட உலகச்செய்தி...
விக்டோரியர்களுக்கு இரண்டு மாதங்கள் இலவச வார இறுதி பயணச்சலுகை 09.10.2025 2:43
விக்டோரியர்கள் இந்த கோடைக்காலத்தில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வார இறுதியிலும் பொதுப் போக்குவரத்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி : வெப்பம், வறட்சி தாக்கம் – உருளைக்கிழங்கு பற்றாக்குறை! 09.10.2025 5:03
நாட்டின் 80 சதவீத உருளைக்கிழங்களை உற்பத்தி செய்துவரும் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அதிக வெப்பநிலை, அதன்பின் ஏற்பட்ட குளிர் மற்றும் பலத்த காற்று ஆகியவை காரணமாக உருளைக்கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2025 வியாழக்கிழமை 09.10.2025 4:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 09/10/2025) செய்திகள். வாசித்தவர்: றேனுகா துரைசிங்கம்
அவர் பெயர் காமராஜ்! 08.10.2025 7:09
தமிழ் நாட்டின் சீரழிந்த அரசியலை பார்க்கும் எவருக்குமே தோன்றும் - காமராஜ் என்றொரு மனிதர் முதலமைச்சராக இருந்தார் - அவரின் காலம் தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வாய்விட்டு சொல்லதோன்றும். காமராஜ் என்ற மகான் இந்த மண்ணை விட்டு மறைந்த 46ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
காரை சர்வீஸ் செய்வது எவ்வளவு முக்கியம்? 08.10.2025 10:03
Carஐ பராமரிப்பது எப்படி மேலும் வாகனம் சம்பந்தமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள் பற்றியும் விளக்கமளிக்கிறார் Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி.
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா-PNG இடையே புதிய ஒப்பந்தம்! 08.10.2025 6:24
70 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 08 அக்டோபர் 2025 புதன்கிழமை 08.10.2025 3:40
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
ஐ.நா. தீர்மானம்; இலங்கையின் மறுப்பும் - உலகின் பொறுப்பும் 07.10.2025 7:28
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
மெல்பனில் புதிய ரயில் நிலையம் திறக்கப்படுகிறது! 07.10.2025 2:27
மெல்பனின் புதிய மெட்ரோ சுரங்கப்பாதையில் அமைந்துள்ள Town Hall ரயில் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.