SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 13.06.2025 8:21
இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்கும் இலங்கை- ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி; மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள யாழ். திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இல...
Air India விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார் 13.06.2025 4:02
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 12.06.2025 9:16
ஈராக்கிலிருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற அறிவுறுத்தல்; முடிவுக்கு வந்த அமெரிக்கா- சீனா வர்த்தக மோதல்; தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பதற்றம்; உலகெங்கும் 123 மில்லியன் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர்; இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கோர விபத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
அதிர்ச்சித் தகவல் - பிரபல சன்ஸ்கிரீன்கள் கூறும் SPF அளவு தவறானவை! 12.06.2025 6:47
நாட்டில் விற்பனையில் உள்ள பிரபலமான சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் குறித்து முக்கியமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோதனைக்குட்பட்ட 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகளில் மொத்தம் நான்கு தயாரிப்புகள் மட்டுமே, அவை குறிப்பிட்டிருந்த Sun Protection Factor (SPF) மதிப்பினை உண்மையில் பூர்த்தி செய்துள்ளன. இது பற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
242 பேருடன் லண்டன் சென்றுகொண்டிருந்த Air India விமானம் விபத்துக்குள்ளானது! 12.06.2025 2:12
ஜுன் 12 வியாழக்கிழமை இன்று இந்தியாவிலிருந்து லண்டன் சென்றுகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழ் தாத்தாவின் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் 12.06.2025 6:59
தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறிஞருமான உ. வே. சாமிநாதர் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சி. படைக்கிறார் றைசெல்.
ஆஸ்திரேலியா அறிவோம்: Barossa Valleyயின் வரலாறும், சிறப்பும்! 12.06.2025 9:53
தெற்கு ஆஸ்திரேலியத் தலைநகர் அடிலெய்டிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் South Australia’s Wine Haven என்று அழைக்கப்படும் Barossa Valley-யின் வரலாறு, அங்கு செல்லும் சுற்றுலாவாசிகள் என்னவெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை “ஆஸ்திரேலியா அறிவோம்” தொடர் வழி தருகிறார் உயிர்மெய்யார்.
“பத்து பில்லியன் பேருக்குப் புரதச்சத்து எங்கிருந்து வரப் போகிறது?” 12.06.2025 13:20
முனைவர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, பல்வேறு வகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியது. கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, தாவரங்களிலிருந்து புரதப் பொருட்களைத் தேட வேண்டியதன் அவசியம் குறித்தும், தாவரங்களிலிருந்து ப...
போராட்டங்களை அடக்க, அமெரிக்க நகரங்களில் சிறப்பு கடற்படை வீரர்கள் 12.06.2025 9:10
அமெரிக்காவில் குடியேறியவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தும் செயற்பாட்டை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அமெரிக்க Marines எனப்படும் சிறப்பு கடற்படை வீரர்கள் Los Angeles நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்யும் இளம் தமிழ் பெண் விஞ்ஞானி! 12.06.2025 12:50
டாக்டர் தேவிகா காமத் Macquarie பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இளம் விஞ்ஞானி. இவர் வானியற்பியல் துறையில் தான் கண்ட கனவு மற்றும் அது மெய்பட முயற்சித்து உழைத்த தனது கதையை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Monash IVF செயற்கை கருத்தரிப்பு மையத்தின் தவறுக்காக CEO பதவி விலகினார் 12.06.2025 4:41
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
SBS 50 : எங்கள் பெற்றோரும் SBS வானொலியும்! 11.06.2025 12:52
SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள இவ்வேளையில், SBS தமிழ் ஒலிபரப்பினை நீண்டகாலமாக கேட்டு மகிழ்ந்த சில நேயர்களின் பிள்ளைகள் அவர்களின் பெற்றோரின் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
SBS 50 ஆண்டுகள்: சிறப்பும் சவால்களும் 11.06.2025 11:19
SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள இவ்வேளையில், SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பாளர்களாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேல் கடமையாற்றி வருபவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன்.
தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி 11.06.2025 7:18
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம்; கீழடி தொல்லியல் ஆய்வு சர்ச்சை; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; தீவிரமடையும் மாவோயிஸ்ட் தேடுதல் நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
குழந்தை பெறும் பெற்றோரின் விடுப்பு தொடர்பான சட்டத்தில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது 11.06.2025 6:52
Paid parental leave ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பு எடுத்துள்ள பெற்றோரின் குழந்தை பிறந்து பிறகு இறந்து போனால் அவரின் paid parental leave ரத்து செய்யப்படுகிறது. இதனை மாற்றுவதற்கான சட்டத்திருத்தம் செய்ய போவதாக லேபர் அரசு உறுதியளித்துள்ளது. இதன் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
ஆஸ்திரேலியா, 2026 FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி 10.06.2025 3:01
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/06/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
இந்த ஆண்டு விரைவான சம்பள அதிகரிப்பைக் கண்ட தொழில்கள் எவை தெரியுமா? 10.06.2025 3:38
இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில் விரைவான சம்பள வளர்ச்சியைக் கொண்டவையாக விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்களின் பட்டியலை SEEK நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்காவில், போராட்டங்கள் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த சிறப்பு கடற்படை வீரர்கள் 10.06.2025 4:56
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 10 ஜூன் 2025 செவ்வாய்க்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஏன் நம்மவர்கள் இங்கு சைக்கிள் ஓட்டுகின்றனர்? 09.06.2025 9:33
ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் சைக்கிளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தக் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
அரசின் பொது சேவை பதக்கம் பெறும் பீனா சந்திரா 09.06.2025 6:50
The Public Service Medal எனப்படும் பொது சேவை பதக்கம் (PSM), இந் நாட்டில், அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் பொது ஊழியர்களுக்கு, சிறந்த சேவைக்காக வழங்கப்படும் ஒரு விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, ஆஸ்திரேலியாவின் கவர்னர்-ஜெனரல் அவர்களால் சுமார் நூறு பேருக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் பீனா சந்திரா அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். பீனா சந்திரா அவர்களால் தமிழில் சரளம...
டாஸ்மேனிய அரசியலின் கொந்தளிப்பான நிலை 09.06.2025 8:16
கடந்த சில வாரங்களாக, டாஸ்மேனிய மாநில அரசியல் ஒரு பதட்டமான நிலையில் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS ஒலிபரப்பு துவங்கி இன்று ஐம்பதாவது ஆண்டு! 09.06.2025 4:33
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 09.06.2025 10:20
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு ரூ.24 ஆயிரம் கோடியில் பாலம்: இந்தியாவின் திட்டத்திற்கு இலங்கை மறுப்பு; மதுரையில் நடைபெற இருக்கும் ஆன்மிக முருகன் மாநாடு - அரசியல் மாநாடு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்; அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; தொகுதி மறுவரையறை விவகாரம் - திமுக எதிர்ப்பு - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறா...
இசை ஊடான சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழர்கள் 09.06.2025 12:30
இசை ஊடாக சிறந்த சேவை ஆற்றியமைக்காக, மெல்பனைச் சேர்ந்த பிரபல வீணை இசைக்கலைஞர்களான ராம்நாத் ஐயர் மற்றும் கோபிநாத் ஐயர் சகோதரர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐயர் சகோதரர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
சமூக சேவைகளுக்காக அதியுயர் விருது பெறும் தமிழர், ஹரன் இராமச்சந்திரன் 08.06.2025 9:09
ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal விருது, பல வருடங்களாக, பல அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவை ஆற்றி வரும் ஹரன் இராமச்சந்திரன் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் ஹரன் இராமச்சந்திரன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.