SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இலங்கை இனப்பிரச்சனை, தமிழ் மீனவர் பிரச்சனை: மறைந்த இல.கணேசனின் கருத்துக்கள் என்ன? 20.08.2025

இந்தியாவில் நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட்) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் ஆஸ்திரேலியாவுக்கு 2014 செப்டம்பர் மாதம் வருகை தந்திருந்தபோது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து வழங்கிய நீண்ட நேர்முகத்தின் சுருக்கமான பதிவு. அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1.

ஆஸ்திரேலிய விசாவுக்கு தேவைப்படும் ஆங்கிலத் தேர்வில் வந்துள்ள மாற்றம் என்ன? 20.08.2025

ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரவோ, படிக்கவோ விரும்புகின்றவர்கள், தங்கள் ஆங்கில மொழித் திறனை நிருபிக்க எழுத வேண்டிய ஆங்கில தேர்வுகளில் ஒன்றான PTE (Pearson Test of English Academic) ஸ்கோர் குறித்து நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.

Qantas விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 90 மில்லியன் டொலர் அபராதம் 20.08.2025

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணி நீக்க வழக்கு என்று அழைக்கப்படும், Qantas விமான நிறுவனத்தின் மீதான வழக்கில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் மீது உச்ச நீதிமன்றம் 90 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

'ஆஸ்திரேலிய பிரதமர் இஸ்ரேலை வஞ்சித்துவிட்டார்' - இஸ்ரேலிய பிரதமர். 20.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

மாகாண சபை தேர்தல்: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? 19.08.2025

இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலை நடத்தவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

மூன்று-நாள் பொருளாதார சீர்திருத்த வட்ட மேசை மாநாடு தொடங்குகிறது 19.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 19/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

'Society is fragmenting': What's behind rising levels of hatred? - 'சமூகம் துண்டு துண்டாகப் பிரிகிறது': வெறுப்பின் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? 18.08.2025

Reported incidents of hatred are on the rise, and key organisations say they are just the 'tip of the iceberg'. What's driving the increase? - வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த முறைப்பாடுகளும் அதிகரிக்கின்றன. அவையெல்லாம், நீருக்கடியில் இருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே வெளியே தெரிவதைப் போன்றது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அதிகரிப்பிற்கு என்...

ஆஸ்திரேலியாவின் பணக்கார வீட்டு உரிமையாளர்களில் பலர் முதியோர் ஓய்வூதியமும் பெறுகிறார்களா? 18.08.2025

ஆஸ்திரேலியாவில் அரசு வழங்கும் Age Pension பல முதியவர்களின் பிரதான வருமான ஆதாரமாக இருக்கிறது. ஆனால், செல்வம் படைத்த மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளைத் தவிர கணிசமான சொத்துக்களையும் கொண்டிருந்தாலும், ஓய்வூதியம் கோருகின்றனர் என்று சமூக சேவைகள் அமைச்சர் Tanya Plibersekற்கு அவருடைய துறை சார் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர் என்றும், அது குறித்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளதாகவும் Austr...

யுக்ரேன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த விரும்பும் அமெரிக்க அதிபர்; வாஷிங்டனில் ஐரோப்பிய தலைவர்கள் 18.08.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 18 ஜனவரி 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 17.08.2025

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு - வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தியின் யாத்திரை தொடக்கம்; இந்திய அமலாக்கத்துறையின் தொடர் சோதனைகள் - நெருக்கடியில் திமுக?; சென்னை மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்புகளை ஏற்படுத்திய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தி...

தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த உணவகம் விருது வென்ற ‘சோழமண்டல உணவகம்' 17.08.2025

தென்கிழக்கு இந்தியாவின் கோரமண்டல் உணவு வகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அடிலெய்ட் நகரின் முதல் உணவகம் என்று தம்மை அறிமுகப்படுத்தும் Logical Indian என்ற உணவகம், ‘2025 Restaurant & Catering Hostplus Awards for Excellence’ தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த இந்திய உணவகத்திற்கு வழங்கும் விருதை வென்றுள்ளது. தமிழர் உணவுகளைப் பரிமாறும் ஒரு உணவகம் இந்த விருதை தெற்கு ஆஸ்திரேலியாவில் வென்றிருப்பது இதுவே முதல் தடவை...

ஆஸ்திரேலியாவில் யாராகஇருந்தாலும் வேலையில் ஒருவருக்கு சிக்கல் எழுந்தால் என்ன செய்யலாம்? 17.08.2025

ஆஸ்திரேலியாவில் தொழிலாளிக்கு இருக்கின்ற உரிமைகள் என்ன, வேலைக்கான கூலியை வங்கி வழியாக வாங்காமல், நேரடியாக பணமாக பெற்றுகொள்ளலாமா, Fair Workயிடம் எப்படி புகார் தருவது என்று விளக்குகிறார் ஆஸ்திரேலிய Fair Work Ombudsman Anna Booth அவர்கள். அவரோடு உரையாடியவர் Sandya Veduri; தமிழில் றைசெல்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 16.08.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (10 – 16 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 16 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

A beginner’s guide to owning a pet in Australia - ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை! 15.08.2025

Bringing a pet into your home can fill it with joy and companionship – but it also comes with important responsibilities. In Australia, new pet owners need to be aware of legal requirements, along with essential tips for training and caring for their animals. - சட்டப்பூர்வ கடமைகள் முதல் அன்றாட பராமரிப்பு வரை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு புதிய செல்லப்பிராணி உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தொ...

NBN - Amazon இணைந்து தொலைதூரப் பகுதிகளுக்கு உயர்-வேக இணைய சேவை 15.08.2025

நாட்டின் இணைய சேவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தி, மற்றும் ஆஸ்திரேலியர்கள் விரைவான இணையத்தை பெற அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என NBN நிறுவனத்தின் தலைவர் கூறியிருப்பது போன்றவற்றின் செய்தியின் பின்னியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Government-owned NBN Co has partnered with Amazon to roll out high-speed broadband using 3,200 low Earth orbit (LEO) satellites from Amazo...

‘$1 பில்லியனுக்கும் மேல் ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சேமிக்க முடியும்’ - ஆஸ்திரேலிய வணிக கவுன்சில் 15.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியாவின் சின்னமான அகுப்ரா தொப்பி உருவான கதை! 15.08.2025

ஆஸ்திரேலியாவின் பல்வேறு வாழ்க்கைப் பணிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் ஆஸ்திரேலியாவின் சின்னமான அகுப்ரா தொப்பி (Akubra hat), யின் வரலாறு, பயன்பாடு, தனித்தன்மை என்று பல தகவல்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் 14.08.2025

இலங்கையில் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி; மன்னார் மக்களின் நீண்ட நாட்கள் போராட்டங்களுக்குப் பின்னர் காற்றாலை மின்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 14.08.2025

காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்; டிரம்ப்- புடின் சந்திப்பு; ஈராக்கில் உள்ள குர்து அகதிகள் துருக்கிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு; சிரிய அரசு- சிரிய குர்து படை இடையே தொடரும் முறுகல் நிலை; இஸ்ரேல்-அமெரிக்கா உடனான போரின் போது 21 ஆயிரம் சந்தேக நபர்கள் கைது- ஈரான்; காங்கோ ஆயுதக்குழுவுக்கு தடைவிதித்த அமெரிக்கா; இந்தியா- சீனா இடையே சுமூகமாகும் உறவு; இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் யு...

ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய மற்றும் மலிவான பல்பொருள் அங்காடி எது? 14.08.2025

ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய சூப்பர்மார்க்கெட்டாக Aldi மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது 17/08/1980 14.08.2025

1980ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 17ம் நாள் Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது குறித்த காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர், குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தலுக்காக வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு! 14.08.2025

பணியிட பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களில், ஃபெடரல் நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில், பாலியல் துன்புறுத்தல், பாதிக்கப்பட்டவர்களைப் பழிவாங்குதல் மற்றும் மோசமான சேதங்களுக்காக நேபாள பின்னணி கொண்ட Biplavi Jarga Magar என்பவருக்கு பாலியல் துன்புறுத்தலுக்காக ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

‘போரை நிறுத்த Putin ஒப்புக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்’ – அமெரிக்க அதிபர் 14.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்துமா: எப்படி கட்டுப்படுத்துவது? எப்படி குணமாக்குவது? 13.08.2025

ஆஸ்துமா நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம், குணமாக்கலாமென்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph. D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். முதலில் பதிவு செய்யப்பட்ட நாள்: 28 மே 2018.

புதிய இந்திய சமூக மையங்களை அமைக்க நிதியுதவி – விக்டோரியா அரசு அறிவிப்பு 13.08.2025

மெல்பனில் புதிய இந்திய சமூக மையங்களை அமைப்பதற்கு விக்டோரியா அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.