SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட எங்கே, எப்படி உதவிபெறலாம்? 18.09.2025

கடந்த செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வையூட்டும் நோக்கிலும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் நமது சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பிலும் இதற்கு எப்படி எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் உளவியலாளரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார்...

Autism உள்ள குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் என்ன உள்ளது? 18.09.2025

Autism உள்ள குழந்தைகளை NDIS-இலிருந்து மாற்றி "Thriving Kids" என்ற புதிய திட்டத்திற்குள் உள்வாங்கும் திட்டத்தை அரசு அண்மையில் அறிவித்தது. இதுகுறித்த விவரணத்தை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

Ozone படலத்தை பாதுகாக்க தவறினால் என்ன நடக்கும்? 18.09.2025

செப்டம்பர் 16ஆம் தேதி - சர்வதேச ozone பாதுகாப்பு தினம். Ozone படலம் என்றால் என்ன? அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் மேலும் ozone படலத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் குறித்து விரிவான தகவல்களுடன் ஒரு விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி : ஓய்வூதிய தொகை செப்டம்பர் 20 முதல் உயர்கிறது! 18.09.2025

எதிர்வரும் செப்டம்பர் 20 முதல், பல்வேறு Centrelink கொடுப்பனவுகளின் விகிதங்கள் மற்றும் வரம்புகள் சீரமைக்கப்படுவதால், Centrelink கொடுப்பனவு பெறுபவர்கள் கூடுதல் தொகை பெறுவர். குறிப்பாக ஓய்வூதியத் தொகையும் சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் 18.09.2025

தென்னாப்பிரிக்காவில் காந்தி அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ரெட்டமலை சீனிவாசன் அவர்கள். தலித் சமூகத் தலைவர், தமிழகத்தின் மூத்த குடிகளான ஆதி திராவிட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு கடந்தவாரம் ( 18 செப்டம்பர்) அனுசரிக்கப்பட்டது. அவர் தொடர்பான காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

இன்றைய செய்திகள்: 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை 18.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

'Ambition gap': Why most people believe they'd step in to stop hate - but don't - வெறுப்பு சம்பவத்தை தடுக்க ஆசைப்பட்டாலும், நடைமுறையில் அதை செய்வதில்லை - ஏன்? 17.09.2025

Aaron says he made a "snap decision" to intervene when he witnessed racism. But many people say they don't know what to do if they see hate or harassment. - நீங்கள் எப்போதாவது துன்புறுத்தல் அல்லது வெறுப்பு சம்பவத்தை கண்டதுண்டா? அதற்கு எதிராகக் குரல் கொடுத்தீர்களா, இல்லை அமைதியாக நின்றீர்களா?

Centrelink கொடுப்பனவு தொகை அதிகரிப்பு: யாரெல்லாம் பெறமுடியும்? 17.09.2025

Centrelink கொடுப்பனவு பெறுபவர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கான உதவித்தொகை, செப்டம்பர் 20 முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் – சாப்பிடுவது பாதுகாப்பானதா? 17.09.2025

பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் பூச்சிக்கொல்லி (pesticide) மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகள், அதன் தாக்கத்தை குறைக்குக் எளிய வழிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டில் உள்ள சமீபத்திய விதிமுறைகள் அல்லது கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Food Technologist-ஆக பணியாற்றும் ஜனனி சிவமைந்தன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி: கழிவறையிலும் கைபேசி பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! 17.09.2025

கழிவறையில் இருக்கும்போது உங்கள் கைபேசியைப் பயன்படுத்துவது மூலநோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என புதிய ஆய்வு முடிவு கூறுகின்றது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 17செப்டம்பர் 2025 புதன்கிழமை 17.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: தொடரும் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 16.09.2025

கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களையும் விவசாய நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கோரி இரு வருடங்களாக மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் "இனிய இலக்கிய சந்திப்பு" 16.09.2025

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் "இனிய இலக்கிய சந்திப்பு" செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி சிட்னி - Wentworthville எனும் நகரில் நடைபெறுகிறது. இது குறித்து கலந்துரையாடுகின்றனர் இந்த அமைப்பின் தலைவர் அனகன்பாபு, செயலர் கர்ணன் மற்றும் இந்த இலக்கிய விழாவில் சிறப்புரை நிகழ்த்தவிருக்கும் சிதம்பரபாரதி ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

பிரதமரின் Marrickville தேர்தல் அலுவலகம் மூடப்பட்டது- காரணம் என்ன? 16.09.2025

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னியின் உள்-மேற்கில் இயங்கிவந்த பிரதமர் Anthony Albaneseயின் தேர்தல் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

புதிதாக இரண்டு விடுமுறை நாட்களைப் பெறவுள்ள ஆஸ்திரேலிய மாநிலம்! 16.09.2025

மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு புதிதாக இரண்டு விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 16 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 16.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

உபயோகித்த துணிகளை சேகரித்து உலக சாதனை! 15.09.2025

துபாயில் பயன்படுத்திய துணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த...

ஆஸ்திரேலிய பாதுகாப்பு விசா விண்ணப்ப மோசடி: 7 குடிவரவு முகவர்கள் நாடுகடத்தல் 15.09.2025

ஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட குடிவரவு முகவர்கள் 7 பேர் நாடுகடத்தப்படுவதாக எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

How S Shakthidharan gathers his world in a single breath - ஒரே மூச்சில் தனது உலகை ஒன்று சேர்த்த எஸ். சக்திதரனின் கதை 15.09.2025

Writer and playwright S. Sakthitharan’s newly published book Gather Up Your World in One Long Breath has already provoked thoughtful reflection among readers. In this interview with Kulasegaram Sanchayan, he shares his insights into the book’s origins, the stories it weaves, and the wider social contexts they explore. - எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர் எஸ். சக்திதரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள (ஒரு ந...

இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை 15.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! 15.09.2025

வார இறுதியில் நாட்டின் அனைத்து தலைநகரங்கள் மற்றும் சில பிராந்திய பகுதிகளில், பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் இரு மாறுபட்ட குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 14.09.2025

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் எதிர்க்கட்சிகள்; 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' - தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா; திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கிய த.வெ.க. தலைவர் விஜய் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு - தமிழக அரசியலில் அதிர்வு அலைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக...

ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guineaக்கு நாளை வயது 50! 14.09.2025

ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guinea நாடு தனது 50ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16 September 2025) கொண்டாடுகிறது. அந்த நாடு எப்படி சுதந்திரம் பெற்றது, அது இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (7 – 13 செப்டம்பர் 2025) 13.09.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (7 – 13 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 13 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் முக்கிய உயிரினம் எது 12.09.2025

ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் உயிரினங்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.