SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (18 – 24 அக்டோபர் 2026) 23.10.2026 6:12
ஆஸ்திரேலியாவின் இந்த வார (18 – 24 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (18 – 24 October 2026)
கதைகளும் அனுபவங்களும்: ஆஸ்திரேலியாவில் கதை சொல்லி பவா செல்லத்துரை 23.10.2026 13:00
தமிழுலகு நன்கறிந்த கதைசொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது நிகழ்வுகள் பிரிஸ்பேன், மெல்பன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன. அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்தும் கதை சொல்லல் அனுபவம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
கொழும்பு–பெர்த் நேரடி விமான சேவை குறித்து SriLankan Airlines பரிசீலனை 23.10.2026 2:16
SriLankan Airlines நிறுவனம், கொழும்பு-பெர்த் இடையிலான நேரடி விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
What does it mean to be an upstander? - பிறரின் நலனுக்காகத் துணிந்து நிற்பது என்றால் என்ன? 23.10.2026 10:26
Advocacy groups and researchers have called for more upstander intervention to combat racism and discrimination. What happens when someone steps in to help? - ஒருவர் துன்புறுத்தப்படுவதையோ, இனவெறி அடிப்படையில் அவமதிக்கப்படுவதையோ நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? #sbsaudiopodcast - #sbsaudiopodcast
இந்தவாரம் திறக்கப்படும் புதிய விமான நிலையம் – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை 23.10.2026 8:33
மேற்கு சிட்னியில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில், விமானப் பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கவுள்ளன? விமானக் கட்டணங்கள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 23 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 23.10.2026 4:24
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (23 October 2026 - Friday)
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 17 – 23, 2026) 22.10.2026 8:15
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 17 – 23) என்று கடந்த 07 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 17 – 23, 2026)
வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம் 22.10.2026 8:45
ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான தனித்துவமான விலங்குகளில் ஒன்று வாம்பேட். மார்சுபியல் விலங்குகளில் கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்காகக் கருதப்படும் வாம்பேட்டின் தனிச்சிறப்புகள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Wombat...
சாலைகளில் ஓடும் கார்கள் இனி வானிலும் பறக்குமா? Teslaவின் புதிய தொழில்நுட்பம்! 22.10.2026 11:03
Tesla நிறுவனம் புதிய Roadster கார் - பறக்கும் கார் ஒன்றை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து பறக்கும் வாகனம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தக் காரின் தொழில்நுட்பம் என்ன? இது உண்மையிலேயே பறக்குமா? இதன் விலை என்ன? என்று பல கேள்விகளுக்கான பதில்களை தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். Will cars soon tak...
மகிழ்ச்சியான சுற்றுலா பயணத்திற்கு அவசியமான குறிப்புகள்! 22.10.2026 14:37
விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள இந்தவேளையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள் குறித்த கலந்துரையாடல். இதில் பங்குபெறுபவர்கள் பயண முகவர் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட யசோ ஷண்முகசோதி மற்றும் ஹோட்டல் வர்த்தகத்தில் பல வருடங்கள் அனுபவம் கொண்ட ரவி நானா. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Travel tips for holiday travellers!
குழந்தையா, வேலையா? - 12 ஆண்டுகளாக மாறாத கர்ப்பகால பாகுபாடு 22.10.2026 10:45
‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்ற வார்த்தைகள் ஒரு குடும்பத்துக்கு மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் பல பெண்களுக்கு, இதே சொற்களை வேலையிடத்தில் சொன்ன நாளிலிருந்தே சிக்கல்கள் தொடங்குகின்றன, பதவி உயர்வு கை நழுவுகிறது, வேலை நேரம் குறைகிறது, சில நேரங்களில், வேலையே பறிபோகிறது. இது ஒரு சிலரின் கதை அல்ல - பரவலான, ஆழமான பிரச்சனை என்கிறது இந்த வாரம் வெளியான ஒரு தேசிய அறிக்கை. இது குறி...
இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 21.10.2026 3:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 22/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
வன்முறை உறவிலிருந்து வெளியேறுவோருக்கான சட்டப் பாதுகாப்பும் நிதி உரிமைகளும் 21.10.2026 13:34
குடும்ப வன்முறை உறவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பொருளாதார ரீதியாக உள்ள உரிமை என்ன? அதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடும்பச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிபுணரும் சட்டத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும் Sun Legal நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞருமான அபூர்வா சுந்தர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sb...
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நிதி தேவையா? என்னென்ன தெரிவுகள் உள்ளன? 21.10.2026 7:58
வணிகங்கள் வங்கிக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Finance & Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 21 அக்டோபர் 2026, புதன்கிழமை 21.10.2026 3:39
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசாரர் என்கின்ற பௌத்த துறவியின் விவகாரம் 20.10.2026 8:32
நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசார தேரர் விவகாரம்; அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பௌத்த பிக்குகள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
பெருநகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்குக் குடிபெயரும் ஆஸ்திரேலியர்கள்: காரணம் என்ன? 20.10.2026 2:32
ஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து முக்கிய தலைநகரங்களை விட்டு regional-பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines மீதான தாக்குதலை நடத்தியது யார்? பிந்திய தகவல்கள் 20.10.2026 7:30
சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines, விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் உள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு வெளியே வாகனம் மோதியதில் ஆபத்தான நிலையில் உள்ளார். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் என வர்ணிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் A warning this story contains distressing descriptions, please listen with care.
இன்றைய செய்திகள்: 20 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை 19.10.2026 4:35
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
How laws change, and why it takes time - How laws change, and why it takes time 19.10.2026 7:16
How do laws change in Australia? Through Rodney Croome’s campaigns for human rights and marriage equality, learn how personal stories, community action, courts and parliament can help change the law, and why the process can take time. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன? மனித உரிமைகள் மற்றும் திருமண சமத்துவத்திற்காக Rodney Croome முன்னெடுத்த பிரச்சாரங்களின் வாயிலாக, தனிப்பட்ட கதைகள், சம...
மெல்பன் சிறுமி அம்ரிதாவின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் – மரண விசாரணை அறிக்கை 19.10.2026 3:43
மெல்பன் Monash சிறுவர் மருத்துவமனையில், 2022ஆம் ஆண்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
மெல்பனில் மலரும் அஞ்சுவண்ணப்பூ 19.10.2026 18:31
பல்திறன் கொண்ட இசைக்கலைஞர் அருண் குமாரசாமி அவர்கள் Arun & Band என்ற இசைக்குழுவையும், Gum-Leaf Entertainment என்ற நிறுவனத்தையும் நிறுவி இயக்கி வருகிறார். அவரது முன்னெடுப்பில் ‘அஞ்சுவண்ணப் பூவே’ என்ற ஒரு இசை நிகழ்ச்சி மெல்பன் நகரில் நடக்கவிருக்கிறது. அவரது இசைப் பயணம் குறித்தும், நடக்கவிருக்கும் நிகழ்ச்சி குறித்தும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகமும் குடும்ப வன்முறையும்: அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், தகவல்களும் 19.10.2026 19:59
ஆஸ்திரேலியச் சமூகங்களில் குடும்ப மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இடம்பெறும் வன்முறை ஒரு முக்கியமான பிரச்சினையாகத் தொடர்கிறது. குடும்ப வன்முறையின் பல்வேறு வடிவங்கள் என்ன? வன்முறைக்கான எச்சரிக்கை அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் உதவியையும் ஆதரவையும் பெற என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட பல கேள்விகளோடு பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்ப...
வேலையற்றோர் விகிதம் அதிகரிப்பதால் குடியேற்றத்தில் எழும் புதிய சவால்கள்! 19.10.2026 6:58
ஆஸ்திரேலியாவில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருவதால், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கவரும் நாட்டின் முயற்சிகளுக்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New challenges arising from the rising unemployment rate
இன்றைய செய்திகள்: 19 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 19.10.2026 4:55
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.