SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மொழிபெயர்ப்பாளர்கள் ஏன் நமக்குத் தேவை? 02.10.2025

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டி மொழிபெயர்ப்பாளர்களான அண்ணாமலை மகிழ்நன், ராமலிங்கம் நந்தகுமார் மற்றும் NAATI அமைப்பின் National Operations Manager Michael Nemarich ஆகியோரது கருத்துக்களுடன் சிறப்பு விவரணம் ஒன்றைப் படைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

பர்மாவில் வாழும் தமிழர்கள்! 02.10.2025

பர்மா தற்பொழுது மியன்மார் என்று அழைக்கப்படும் ஆசிய நாட்டில் தற்போது பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பர்மாவில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் அவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து பர்மாவில் வசிக்கும் அண்ணாதுரை மற்றும் அவரின் சகோதரி மணிமேகலை இருவரும் மனம் விட்டு பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்...

இன்றைய செய்திகள்: 2 அக்டோபர் 2025 வியாழக்கிழமை 02.10.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 2/10/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

வெளிநாட்டு பயணிகளுக்கு டிஜிட்டல் வருகை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா! 01.10.2025

E-Arrival Card - டிஜிட்டல் முறையில் வருகை அட்டைகளை நிரப்பும் வசதியை இந்தியா இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Superannuation சேமிப்பை நாம் ஏன் கண்காணிக்க வேண்டும்? 01.10.2025

Superannuation வைத்திருக்கும் பலர் தங்களின் super கணக்கில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. Super கணக்கு உள்ள ஒவ்வொருவரும் தங்களின் super கணக்கில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொ...

வங்கிகள் தரும் Credit Card/Debit Cardகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது? 01.10.2025

வங்கிகள் தரும் Credit Card மற்றும் Debit Card போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது, எமாற்றப்படுவதை தவிர்ப்பது குறித்து விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

செய்தியின் பின்னணி: காஸாவுக்கான புதிய அமைதித் திட்டத்தில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது? 01.10.2025

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்திற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேநேரம் ஹமாஸ் இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாகக் கூறுகிறது.இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 01 அக்டோபர் 2025 புதன்கிழமை 01.10.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: மன்னார் காற்றாலை திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கின்றனர்? அரசு ஏன் கைவிட மறுக்கிறது? 01.10.2025

மன்னார் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இங்கு செயற்படுத்தப்பட்டு வரும் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக மன்னார் மக்களின் போராட்டம் தீவிரம் பெற்று வருகின்றது. இந்நிலையில் போராடும் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! 30.09.2025

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Coles மற்றும் Woolworthsக்கு போட்டியாக கேரள முதலாளியை களமிறக்க விரும்பும் ஆஸ்திரேலிய பிரதமர்! 30.09.2025

LuLu hypermarket கிளையை ஆஸ்திரேலியாவில் தொடங்குமாறு பிரதமர் Albanese அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 30 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 30.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

How do you legally change your name in Australia? - ஆஸ்திரேலியாவில் உங்கள் பெயரை மாற்றுவதற்கான நடைமுறைகள் எவை? 29.09.2025

Choosing to legally change your name is a significant life decision that reflects your personal circumstances. Each year, tens of thousands of Australians lodge an application through the Registry of Births, Deaths & Marriages. If you’re considering a change of name, this episode takes you through the process. - உங்களது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் அல்லது குடும்பப் பெயரை எப்படி மாற்றுவது என்பத...

செய்தியின் பின்னணி : அமெரிக்காவின் விசா கெடுபிடி ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பாக அமையுமா? 29.09.2025

அமெரிக்காவின் skilled migrant visa - திறமை அடிப்படையில் குடிபெயர்வோருக்கான விசா விண்ணப்பக் கட்டணத்தை $100,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது ஆஸ்திரேலியாவிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வாங்குகிறார் செல்வி.

செக்ஸ்: தாம்பத்திய உறவில் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன? 29.09.2025

டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...

இன்றைய செய்திகள்: 29 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை 29.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 29.09.2025

லடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி; கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சார கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம், 'திட்டமிட்ட சதி' என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

கரூர் துயரம்: Gen Z இளைஞர்களின் திரைப்பட ஈர்ப்பு குறித்த பார்வை 28.09.2025

தமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்களை தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. தமிழக அரசியலைக் கவனித்து வரும் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர் Gen Z இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு, ரசிக மனப்பான்மை, நடிகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றி அலசுகிறார். அவரோடு உர...

நடிகர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 39 பேர் பலி: பெருந்துயரத்தின் பின்னணி 28.09.2025

தமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 27 செப்டம்பர் 2025) 26.09.2025

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (21 – 27 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 27 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

செய்தியின் பின்னணி : சர்வதேச மாணவர்கள் சேர்க்கையில் வீழ்ச்சி? ஏன்? 26.09.2025

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மிகுந்த வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் கல்வித் துறைக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குபவர் செல்வி.

பதற்றம்: காரணிகளும் தீர்வுகளும் நூல் வெளியீடு 26.09.2025

மெல்பனைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் பிரின்ஸ் கென்னட் அவர்களது இரண்டாவது நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 27 சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 26 செப்டம்பர் 2025 வெள்ளிக்கிழமை 26.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 26.09.2025

அதிபர் அனுரகுமார திசநாயக்க பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மேலும் மன்னார் காற்றாலை, திருகோணமலை விவசாய மக்களின் தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 25.09.2025

காசா மீது தொடரும் தாக்குதல்கள்; பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முக்கிய நாடுகள்; டென்மார்க்கில் ட்ரோன் ஊடுருவல்கள் முயற்சி: ரஷ்ய தலையீடா?; அமெரிக்கா: H1B விசா கட்டண உயர்வு; நாடு திரும்பிய 10 லட்சம் சிரிய அகதிகள்; ஆப்கானிஸ்தானில் விமானத்தளத்தை திரும்ப பெற முயற்சிக்கும் அமெரிக்கா; ரகாசா புயல் பாதிப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.