SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இன்றைய செய்திகள்: 18 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 17.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

மாறுகண்ணை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா? 17.11.2025

Crossed eyes- மாறுகண் என்பது பலரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இது ஏன் ஏற்படுகிறது என்பது பற்றியும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

‘தமிழ் சமூகம் தொழில் முனைவோரை உருவாக்க தவறியதே வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம்‘ -‘Kissflow’ சுரேஷ் 17.11.2025

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வ...

செய்தியின் பின்னணி : உணவு பொருட்கள் மீது Health Star Rating கட்டாயமாக்கப்பட வேண்டுமா? 17.11.2025

உணவு உற்பத்தியாளர்கள் 70% பொருட்களில் Health Star Rating HSR-ஐ பயன்படுத்த வேண்டும் என நான்கு ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 37% பொருட்களில் மட்டுமே HSR பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2025 - திங்கட்கிழமை 17.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 16.11.2025

பீகார் மாநில சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி; ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து. 9 பேர் பலி; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமத...

எளிய பின்னணியுடன் பல மில்லியன் டாலர் நிறுவனத்தை எப்படி உருவாக்கினேன்? –‘Kissflow’ சுரேஷ் 16.11.2025

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வ...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (9 – 15 நவம்பர் 2025) 15.11.2025

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (9 – 15 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

மெல்பன், சிட்னி, கான்பரா நகரங்களை இணைக்கும் புதிய நேரடி பேருந்து சேவை 14.11.2025

ஐரோப்பாவில் பிரபலமான பயணிகள் பேருந்து சேவை நிறுவனம் Flixbus ஆஸ்திரேலியாவிலும் கால்பதிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நியூசிலாந்தில் வேலை செய்வதற்கான இரண்டு புதிய விசாக்கள் அறிமுகம்! 14.11.2025

நியூசிலாந்து அரசு, Accredited Employer Work விசாவின் கீழ் இரண்டு புதிய பருவகால வேலை விசாக்களை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

This form of discrimination is growing in Australia - from assault to segregated birthday parties - ஆஸ்திரேலியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இருக்கிறதா? 14.11.2025

Experts say caste discrimination and the practice of ‘untouchability’ are on the rise in Australia. But some South Asians are fighting back. - ஆஸ்திரேலியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் ‘தீண்டக்கூடாதவர்’ என்ற நடைமுறை அதிகரித்து வருகிறது. ஆனால் சில தெற்காசியர்கள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செய்தியின் பின்னணி : நாம் வாங்கும் உணவு பொருட்களில் மறைந்திருக்கும் ஆபத்து! 14.11.2025

நாட்டில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களை ஆராய்ந்ததில் பலவற்றில் இன்னும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்துறை ட்ரான்ஸ் கொழுப்புகள் இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி

குழந்தைகள் தமிழ் கற்பது பெற்றோரின் கையில் இருக்கிறதா அல்லது குழந்தைகளுக்கும் பங்கு உண்டா? 14.11.2025

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோரோடு ஒரு சந்திப்பு. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரின் பெற்றோரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொ...

What are Australia’s fishing laws and rules? - நீங்கள் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் செல்பவரா? இத்தகவல் உங்களுக்கானது! 14.11.2025

Thinking of going fishing in Australia? Make sure you are familiar with local regulations, including licensing systems, closed seasons, size limits, permitted gear, and protected species. - ஆஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்தல் என்பது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதை பலர் அறியாமல் இருக்கலாம். உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து, மீன்பிடிக்க உரிமம் தேவையா இல்லையா, தடைசெய...

இன்றைய செய்திகள்: 14 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை 14.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 14/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 13.11.2025

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு படைத்தரப்பு காரணம் என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டை ஆளுந்தரப்பு மறுக்கிறது; புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை வெளியேற்ற அரச உயர் மட்டத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்தோம் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவா...

சூடானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்வது ஏன்? 13.11.2025

சூடானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, நிலைமை மிக மோசமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சூடானில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 13.11.2025

இந்தியா, பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; காசா நிலவரம்; மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள்; G20 மாநாட்டை புறக்கணிக்கும் அமெரிக்கா; மலேசியா- தாய்லாந்து எல்லை அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு விபத்து; லிபியா குடியேறிகள் படகு விபத்து: 42 பேர் பலி; ஈராக் தேர்தல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவிலிருந்து விடைபெறுகிறது Menulog! 13.11.2025

ஆஸ்திரேலியாவில் தனது வணிகத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக Menulog அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

NSW மாநிலத்தில் ஒரு டாலருக்கு விற்கப்படும் வீடுகள்! 13.11.2025

நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கரைப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மலிவு விலையில் விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சைவ உணவு மட்டும் உண்ணுவதற்கும் மனச்சிதைவு நோய்க்கும் உள்ள தொடர்பு !! 13.11.2025

Schizophrenia ஒரு வகையான மனச்சிதைவு நோய் - இந்திய பின்னணி குறிப்பாக தமிழர்களுக்கு இந்நோய் தாக்குவதற்கு காரணி உள்ளதா? உள்ளது எனில் அந்நோய் ஏற்படுவதற்கான DNA மூலக்கூறுகள் என்ன? போன்று Schizophrenia குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம். இந்த ஆய்வில் தரவு ஆய்வாளராக (Data Analyst) பணிபுரியும் சதிஷ் பெரியசாமி அவர்கள் செல்வியுடன் இது குறித்து கலந்துரையாடுகிறார்.

செய்தியின் பின்னணி: விக்டோரியா மாநிலத்தில் குற்றமிழைக்கும் சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை? 13.11.2025

“Adult Time for Violent Crime” எனப்படும் புதிய சட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை பெரியவர்களுக்கான நீதிமன்றத்தில் விசாரித்து, தேவையானால் ஆயுள்த்தண்டனை (life imprisonment) வரை வழங்கும் வாய்ப்பு ஏற்படும். இதுபற்றிய செய்தியின் பின்னணியி...

இன்றைய செய்திகள்: 13 நவம்பர் 2025 வியாழக்கிழமை 13.11.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 13/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஏன் மெல்பனிலிருந்து Cairnsக்கு குடிபெயர்ந்தேன்? Cairns சிறப்பானதா? 12.11.2025

SBS ஊடக அனுசரணையுடன் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரில் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் திஷான் அவர்களை சந்தித்தோம். இளைஞர்கள் பலரும் உள்ளூர் பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரும்போது, திஷான் அவர்கள் மெல்பனிலிருந்து பிராந்திய நகரமான Cairnsக்கு குடிபெயர்ந்து வாழ்ந்துவருகிறார். Cairns நகரில் அவரை நேரடியாக சந்தித்து அவரின் கதையைக் கேட...

ஐ. நா. மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவி பிள்ளை கூறுவது என்ன? 12.11.2025

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் கௌரவம் மிக்க விருது சிட்னி அமைதி விருது - Sydney Peace Prize. 2025 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுக்கொண்டார் தமிழ் பின்னணி கொண்ட நவி பிள்ளை அவர்கள். தென்னாப்பிரிக்க நாட்டைச் சார்ந்த அவர், ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஆவார். SBS ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்முகம் இது.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.