SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தமிழ் மற்றும் இந்து சமூகங்களுக்கு சேவை: அரசின் உயரிய விருது பெறும் தமிழன் 25.01.2026 6:40
ஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் மெல்பன் நகரில் வாழும் திரு செல்லையா நல்லையா அவர்கள் பெற்றுள்ளார். விக்டோரியா மாநிலத்தின் தமிழ் மற்றும் இந்து சமூகங்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித...
உயர்நிலைக் கல்வி சேவை: ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருது பெறும் தமிழன் 25.01.2026 6:25
ஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் மெல்பன் நகரில் வாழும் கௌரவ பேராசிரியர் செஸ்னி றொமேஷ் நாகராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்நிலைக் கல்விக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித்து, பேராசிரியர் நா...
தமிழ் மற்றும் இந்திய சமூகங்களுக்கு சேவை: அரசின் உயரிய விருது பெறும் தமிழன் 25.01.2026 8:40
ஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் பிரிஸ்பன் நகரில் வாழும் திரு பழனிச்சாமி ஓச்சத்தேவர் தேவர் அவர்கள் பெற்றுள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தமிழ் மற்றும் இந்திய சமூகங்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும்...
பொறியியல் மேன்மை, புதுமை, சேவை: ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருது பெறும் தமிழன் 25.01.2026 12:21
ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான AO எனப்படும் Officer of the Order of Australia என்ற கௌரவத்தை சிட்னி வாழ் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, மின்சார பொறியியல், தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் ஆஸ்திரேலிய இலங்கை சமூகத்திற்கான சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசினால் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்களுடன் அவரது சேவைகள்...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (18 – 24 ஜனவரி 2026) 24.01.2026 7:15
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (18 – 24 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
இந்திய Driver Licenseஐ NSW உரிமமாக மாற்றுவதில் புதிய விதிமுறைகள் 23.01.2026 2:47
NSW மாநிலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த ஓட்டுநர் உரிமங்களை மாற்றும் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
ஆஸ்திரேலியாவில் இந்தியா உட்பட சில நாடுகளின் மாணவர் விசா பரிசீலனை கடுமையாகிறது! 23.01.2026 12:54
மாணவர் விசா விண்ணப்பங்களில் சமீப காலமாக போலியான விண்ணப்பங்கள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்திய உட்பட சில நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் விண்ணப்ப பரிசீலனை நடைமுறையில் சில மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளது. இது குறித்து விளக்குகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உ...
“தடை செய்யப்பட்ட ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?” – எல்லைகளில் சுங்கம், மையத்தில் உலகம் 23.01.2026 11:25
உலக வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதிலும், நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சுங்க அதிகாரிகளின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாக ஜனவரி 26 அன்று உலகெங்கும் கொண்டாடப்படும் சர்வதேச சுங்க தினம் (International Customs Day - ICD) குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
செய்தியின் பின்னணி: வீடு, பணம், எதிர்காலம் - ஆஸ்திரேலியாவில் செல்வம் யாரின் கையில்? 23.01.2026 6:29
ஆஸ்திரேலியா ஒரு செல்வந்த நாடு என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த செல்வம் யாரிடம் உள்ளது? ஏன் ஒரு தலைமுறைக்கு வீடு எளிதாக கிடைத்தது, இன்னொரு தலைமுறைக்கு அது கனவாக மாறியது? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 23 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை 23.01.2026 4:52
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 22.01.2026 6:53
கிரீன்லாந்து விவகாரம், சிரியாவில் பின்வாங்கும் குர்து படையினர், மொசாம்பிக்கில் கடும் மழை, பாகிஸ்தானில் தீ விபத்து; கியூப அரசை அகற்ற அமெரிக்கா திட்டமா? உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
உலகில் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது தெரியுமா? 22.01.2026 2:43
2026ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் பாதுகாப்பான 25 விமான நிறுவனங்களின் பட்டியலை AirlineRatings.com வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
'பெற்றோர் குழந்தைகளுடன் தமிழில் பேசவேண்டும்' 22.01.2026 10:39
கனடாவில் வாழும் எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர், வாழ்வியல் மற்றும் பயணக் கட்டுரையாளர், துறையூரான் என்ற புனைபெயர் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்கள் 2014ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக்கூடத்தில் வைத்து நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
தொட்டிகளில் காய்கறிகள் வளர்ப்பது எப்படி? 22.01.2026 12:59
அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் காய்கறிகள் பயிரிட்டு வளர்க்க விரும்பினால் தொட்டிகளில் எவ்வாறு வளர்க்கலாம்? என்னென்ன காய்கறிகள் வளர்க்கலாம் போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிவருபவருமான தர்மன் சவரிமுத்து அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
செய்தியின் பின்னணி: மக்கள் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட சட்டம் என்ன சொல்கிறது? 22.01.2026 9:30
கடந்த மாதம் ஒரு யூத விழாவில் 15 பேர் கொல்லப்பட்ட Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, புதிய துப்பாக்கி கட்டுப்பாடு மற்றும் வெறுப்பிற்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கமாக வழியில் இந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை. Edwina Guinan மற்றும் Deborah Groarke எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய துப்பாக்கி கட்டுப்பாடு குற...
இன்றைய செய்திகள்: 22 ஜனவரி 2026 வியாழக்கிழமை 22.01.2026 3:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 22/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
மருந்து வாங்கும் செலவு இந்த ஆண்டு முதல் குறைகிறது - எப்படி? 21.01.2026 2:45
2026 முதல் Pharmaceutical Benefits Scheme (PBS) சலுகை பெற்ற மருந்துகளை வாங்கும் போது நோயாளிகள் செலுத்தும் தொகை குறைந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
செய்தியின் பின்னணி: Pauline Hansonஇன் One Nation கட்சி முக்கிய எதிர்க்கட்சியாகுமா? 21.01.2026 9:49
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில், Pauline Hanson தலைமையில் இயங்கும் One Nation கட்சி Liberal–National Coalitionஐ விட அதிகமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதாக Newspoll அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 21 ஜனவரி 2026, புதன்கிழமை. 21.01.2026 3:06
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் 20.01.2026 8:16
அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தக்கோரி இலங்கையின் பல பகுதிகளிலும் பெற்றோர் ஆர்ப்பாட்டதிதில் ஈடுபட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Your guide to camping in Australia - ஆஸ்திரேலியாவில் camping செல்ல தயாராவது எப்படி? : ஒரு வழிகாட்டி 20.01.2026 7:49
Going camping is an incredible way to experience Australia’s great outdoors whilst also taking a break from technology and daily routines. We unpack the benefits of camping, the preparation required, the equipment you should consider taking, and how to be a considerate camper. - கடற்கரையிலிருந்து பாலைவனப் பகுதிவரை, ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகை அனுபவிக்க camping சிறந்த வழியாகும். இது குறித்து ஆங்கில...
பெர்த்தில் விளையும் மாம்பழம் ஒன்றின் எடை ஒரு கிலோ! 20.01.2026 2:38
மேற்கு ஆஸ்திரேலியா பெர்த்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் விளைச்சல் சாதனை அளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
தினமும் 6 லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பில்லியனர்கள்! 20.01.2026 3:09
ஆஸ்திரேலிய பில்லியனர்களின் செல்வம் கடந்த வருடம் அசாதாரண வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 20 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை 20.01.2026 4:55
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இந்த ஒரு தவறால் பலர் அதிக மின்சார கட்டணம் செலுத்தக்கூடும்! 19.01.2026 2:53
ஆஸ்திரேலியாவில் பலர் அறியாமல் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை மின்சார கட்டணமாக கூடுதலாக செலுத்தி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.