SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2561 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Oct 2, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

உணவு பழக்கங்களினால் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியுமா? 06.02.2025

தலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் சிட்னியில் உள்ள உணவியல் நிபுணர் பிரியா ஐயர். அவரோடு உரையாடுபவர் செல்வி.

“தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவர் 06.02.2025

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வீரமாமுனிவர் அவர்கள். கிறிஸ்தவ சமயத்தை போதிக்க தமிழகம் வந்த அவர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டு நிகழ்த்திய சாதனைகளும், பங்களிப்பும் அளப்பெரிது. ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் பற்றிய காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

சிட்னி பல்கலைக்கழகத்திற்கு 100 மில்லியன் நன்கொடை வழங்கி சாதனை படைத்த பில்லியனர் 06.02.2025

அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம்பெறும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த ஏதுவாக, சிட்னி பல்கலைக்கழகத்திற்கு வரலாற்றுச் சாதனைத் தொகையான 100 மில்லியன் டொலர்கள் நன்கொடையை Robin Khuda என்ற பில்லியனர் வழங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

யூத எதிர்ப்பு நடவடிக்கைக் குற்றங்களுக்கு சிறைத்தண்டனை - பெடரல் அரசு ஒப்புதல்! 06.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 06/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Seatbelt அபராதங்கள் மூலம் ஆறு மாதங்களில் 34 மில்லியன் டொலர்கள் வருமானமீட்டிய NSW அரசு 05.02.2025

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த ஆறு மாதங்களில் ஆசனப்பட்டி -சீட் பெல்ட் தொடர்பான அபராதங்கள் மூலம் சுமார் 34 மில்லியன் டொலர்கள் வருமானமீட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Medicare திட்டம் காலாவதியான ஒன்றா? 05.02.2025

ஆஸ்திரேலியாவின் Medicare கட்டமைப்பு காலாவதியானது என்றும், இன்றைய நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நாட்டின் உச்ச மருத்துவ அமைப்பு Australian Medical Association தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு! 05.02.2025

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 - ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்து விரிவாக உரையாடுகிறார்கள் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு கர்ணன் சிதம்பரபாரதி மற்றும் செயலாளர் திரு அனகன் பாபு. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.

இந்திய நிதிநிலை அறிக்கை, மீனவர்கள் கைது & இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் 05.02.2025

இந்திய நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய மாநிலங்கள், தொடரும் தமிழக மீனவர்கள் கைது மற்றும் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

தமிழர் ஒடுக்குமுறை தினம் - கன்பராவில் பேரணி நடத்திய தமிழ் ஏதிலிகள் கழகம் 04.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 05/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

குடும்ப வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவதே இந்நூலின் நோக்கம் -டெபோரா சுகிர்தகுமார் 04.02.2025

ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட டெபோரா சுகிர்தகுமார், Raising Resilient Families என்ற நூலை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த நூல் 2025 ஆம் ஆண்டு Able Golden Book விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படும் பெயர்கள் எவை தெரியுமா? 04.02.2025

ஆஸ்திரேலிய மக்கள் தமது குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களில் மிகவும் பிரபலமானவை எவை என்ற புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இலங்கையில் உள்ளவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் புலமைப்பரிசில்! 04.02.2025

ஆஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின்கீழ் இலங்கையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் Australia Awards புலமைப்பரிசிலின் 2026ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

குயின்ஸ்லாந்தின் பிரபல சுற்றுலாத் தீவில் சுறா தாக்கி 17 வயதுப் பெண் பலி 04.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

Pink Sari நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்! 03.02.2025

பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இதனை முன்னிட்டு Pink Sari அமைப்பு பிப்ரவரி 9-ஆம் தேதி ஒரு விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நடைபயணம் குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி வெங்கட்ராமனுடன் உரையாடுகிறார் செல்வி.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 03.02.2025

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட் 2025 ஆதரவும் எதிர்ப்பும், ஈரோடு இடைத்தேர்தல் - திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் மற்றும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'பெரியார் சர்ச்சை' போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Donald Trump எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா? 03.02.2025

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, அமெரிக்க மண்ணில் பிறந்தால் போதும் என்று அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அதனை மாற்றுவேன் என்று Donald Trump கூறியிருந்தார். அதிபர் பொறுப்பேற்ற முதல் நாளே, Executive order என்று அறியப்படும் அதிபரால் விடுக்கப்படும் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து விட்டார்.

இணையவழி நியோ- நாஸி வலையமைப்பு மீது நிதித் தடைகளை விதித்த ஆஸ்திரேலியா 03.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

சீனாவின் புதிய DeepSeek AI Chatbot ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எவை? 02.02.2025

சீனாவின் புதிய DeepSeek AI Chatbot கடந்த வாரம் வெளிவந்து உலகளாவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய AI Chatbot இந்தளவு பிரபலமாக என்ன காரணம்? இது ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இ...

Important tips for cycling in Australia - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான முக்கிய குறிப்புகள் 02.02.2025

Riding a bicycle is a common and affordable form of transport in Australia, with people cycling for sport, recreation and to commute. Cycling also comes with some rules to keep all road users safe. - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுவதென்பது ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 01.02.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (25 ஜனவரி – 01 பிப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 01 பிப்ரவரி 2025 சனிக்கிழமை.

ஆஸ்திரேலியாவில் Paracetamol மாத்திரைகளின் விற்பனைக்கு கட்டுப்பாடு! 31.01.2025

ஆஸ்திரேலியாவில் Paracetamol மாத்திரைகளின் விற்பனை தொடர்பிலான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் எந்தப்பகுதியில் நில அதிர்வு ஏற்படக்கூடிய அதிக ஆபத்து உள்ளது? 31.01.2025

ஆஸ்திரேலியாவின் அதிக ஆபத்துள்ள பூகம்ப மண்டலங்கள் குறித்த மதிப்பீட்டை Geoscience Australia புதுப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

“தமிழருக்கும் பூர்வீக குடி மக்களுக்குமான உறவு மிக நீண்டது” 31.01.2025

Dr ப்ரியா ஸ்ரீனிவாசன் ஒரு கலை இயக்குனர், நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நூலாசிரியர். இவர் பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். கலை மூலம் சமூக நீதி பிரச்சினைகளை நோக்கிச் செல்ல கோட்பாடு மற்றும் நடைமுறையை இணைக்கிறார்.

நாட்டில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த விமர்சனங்களை பிரதமர் நிராகரித்தார் 31.01.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள் :31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை.

Dementia - மறதிநோய் வராமல் தடுக்க முடியுமா? 30.01.2025

நாட்டில் பல லட்சம் ஆஸ்திரேலியர்கள் மறதிநோயுடன் வாழ்கின்றனர். நான்கு முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் மறதிநோய் வருவதை தாமதப்படுத்தலாம் என புதிய மருத்துவ ஆய்வு முயற்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.