Viji Venkat

கதைப் பயணம்

Kids TA ↓ 211 episodes

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கதைப் பிரியர்கள் அனைவரும் கேட்டு மகிழும் கதைகள்

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

Viji Venkat

Category

Kids

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 19, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மேஜிக் மாலினி - 13 30.08.2021

அருங்காட்சியகத்தில் திருடுவதற்காக சதி செய்த மங்காத்தாவின் திட்டத்தை 'மம்மத்' யானை உதவியுடன் மாலினி முறியடித்தாள்.

வீர யுக நாயகன் வேள்பாரி- அத்தியாயம் - 23 24.08.2021

இள‌மருதன் கோட்டையின் அமைப்பையும் அது அமைக்கப்பட்டிருந்த வானவியல் அமைப்பையும் பார்த்து வியத்தல்.

மேஜிக் மாலினி - 12 24.08.2021

மாலினியின் பள்ளியில் அருங்காட்சியகம் அழைத்துச் சென்ற ஆசிரியர். மங்காத்தா மற்றும் வடிவு செய்த கள்ளத்தனம். மாலினி போட்ட மந்திரம் செய்த வேலையென்ன?

மாஜிக் மாலினி - 11 03.08.2021

மேஜிக் மாலினி டென்னிஸ் கோர்ட்டில் செய்த மந்திரம். பள்ளி மாணவிகள் தாங்கள் செய்யும் தவறை அவர்களே ஒத்துக் கொள்ள மாஜிக் மாலினி போட்ட மந்திரம்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 22 27.07.2021

மதுரைக் கோட்டைக்குள் சென்ற இளமருதன் மதுரையின் அழகையும் கலைநயத்தையும் பார்த்து வியத்தல். கோட்டைக் கதவுகள் மூடி விட்டபடியால் அவர்கள் உள் நுழைய மேற்கு வாசல் தளபதி மாரையன் செய்த கடுமையான‌முயற்சி. யானையைக் கொண்டே திறக்கப்படும் அந்தக் கோட்டைக் கதவு திறப்பதற்காக செய்த முயற்சியில் மாரையன் அடைந்த பரிதாப நிலை.

Magic Malini - 10 27.07.2021

பாழடைந்த கிணற்றில் பதுக்கி வைத்திருந்த அத்தனை பணமும் நாணயங்களாக மாறி விட்டது மாலினி போட்ட மந்திரத்தால். மங்காத்தாவின் மாமாவும் அவனது கூட்டாளிகளும் பணத்திற்காக சண்டையிட மாலினி மந்திரம் போட அவர்கள் போலிஸிடம் எப்படி மாட்டினார்கள்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 21 24.07.2021

இள மருதன் தனக்கு மிகவும் பிடித்தமான "ஆலா" குதிரையில் செல்லும் நீண்ட பயணத்துக்காக காத்திருந்தான். இள மருதன் தந்தை மையூர்கிழார் வெங்கல் நாட்டுத் தலைவர். பாண்டிய வேந்தனுக்கு கட்டுப்பட்ட சிறுகுடி மன்னன். இளவரசன் பொதியவெற்பனின் மண விழாவுக்கு இளைஞன் காராளி வடிவமைத்த கலைநுட்பமான "காமன் விளக்கு" மற்றும் பறம்பு நாட்டின் தெய்வவாக்கு விலங்கு இரண்டையும் பரிசாக கொடுத்து வெங்கல் நாட்டின் பெருமையைப் பாண்டிய மன்ன...

மாஜிக் மாலினி - 9 24.07.2021

மங்காத்தா திருடிய வெள்ளிக் கோப்பையை மாலினி கண்டுபிடித்து எலிசபெத் டீச்சரிடம் ஒப்படைத்தாள். மங்காத்தாவின் மாமா ஜெயிலில் இருந்து தப்பித்து மங்காத்தாவைப் பார்க்க பள்ளிக்கு வருதல். பேங்க் பணத்தை திருடியதால் போலிஸ் தேடிக் கொண்டிருக்க பள்ளியில் அவரைப் பார்த்த மாலினிக்கு அதிர்ச்சி.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 20 21.07.2021

நாகங்கள் தீக்களியில் பிரண்டு தங்கள் இனத்தைக் காத்துக் கொண்டதை அறிந்து மிஞ்சியிருந்த நாகர் குல மக்கள் மகிழ்தல். தீயில் இறங்கிய இணையர்களில் பாரியின் மகள் அங்கவையும் என்று பாரியைக் கேட்டு அறிந்து கொண்ட கபிலர். பதினேழாம் நாள் கூத்து வேளீருக்கு உரியது என்றும் அந்த ஆட்டத்தை உடலெங்கும் குருதி பூசி ஆடப்போவது வேள்பாரி என்றும் உதிரம் சொல்லக் கேட்டு அதிர்ந்த கபிலர்.

மாஜிக் மாலினி - 8 21.07.2021

மாலினி போட்ட மந்திரத்தால் குழந்தைகளான மங்காத்தாவும் வடிவும் பட்ட பாடு. மாலினி போடும் மந்திரங்கள் பலிக்க ஆரம்பித்து விட்டது. வெள்ளிக் கோப்பையை திருடிய மங்காத்தாவின் நிலை.

மாஜிக் மாலினி -7 19.07.2021

மீனழகியாக மாறிய மாலினி மீண்டும் பழைய மாலினியாக மாறினாள். வடிவும் மங்காத்தாவும் மாலினியை தங்களோடு அழைத்துச் சென்று தவறு செய்யத் தூண்டுதல்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 19 11.07.2021

நாகர் குலத்தின் தலைவன் பிடாரனை மீண்டும் அவனிடத்திற்கே அனுப்பி வைத்தல். மூத்தப் பிடாரன் நாகர் குடியினரை அழிக்கப் பெருஞ்சேரலிடம் திட்டமிடுதல். நாகர் குடியினரின் போர் உத்தியில் சேரலர் வீரர்கள் பயந்து ஓடுதல். மாறாக பிடாரன் அவர்களை எதிர்த்த விதம் கண்டு பதுமன் பாராட்டுதல். பதுமனின் மரணத்தினால் பிடாரன் சொன்ன யோசனையைச் செயலாற்றிய சேரலன்.

மாஜிக் மாலினி - 6 11.07.2021

மங்காத்தா தன் மனதுக்குள் நினைத்தது மந்திரமாகி விடவே மங்காத்தா தன் நினைவின்றி பிடில் (வயலின்) வாசிக்க ஆரம்பித்து விட்டாள். மீண்டும் மாலினி போட்ட மந்திரம் தப்பாக்கி விடவே தாத்தா வந்து அவளைக் காப்பாற்றப் பிறகு என்ன நடந்தது?

வீரம் யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 18 05.07.2021

பெருஞ்சேரலின் ஆசையினால் ஏற்பட்ட வீரர்களின் இழப்பு. மூலிகையைப் தேடி நாகர் குலத்தினரிடம் உதவி கோருதல்.

மேஜிக் மாலினி - பாகம் 5 05.07.2021

மாலினி மீது மங்காத்தா வைத்த குறி ஆசிரியரைக் தாக்க ஆசிரியர் கோபப்பட்டு அனைவரும் வகுப்பறையை சுத்தம் செய்யக் கட்டளை இடுதல். கருப்பு பூனை தாத்தா மாலினிக்கு உதவுதல்.

வீர யுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் - 17 29.06.2021

செம்பாவின் ஆவேசமான ஆட்டத்தினால் நடக்கவிருந்த பெரும் நிகழ்வை தடுத்து நிறுத்திய குலநாகினி. கோவனின் தொண்டைக் குழிக்குள் இறங்கிய இரண்டு கொம்புகளால் கிள்ளியின் உடலெங்கும் கோலம் போட்ட செம்பா. கபிலருக்கு ஏற்பட்ட அச்சம். செம்பா யாரென்பதை அறிந்து அவளிடம் அளவற்ற மதிப்பு கொண்ட கபிலர்.

மேஜிக் மாலினி - பாகம் 4 29.06.2021

மங்காத்தா போட்ட திட்டத்தை மாலினி எப்படி முறியடித்தாள். மீண்டும் மங்காத்தா தீட்டிய திட்டத்தில் மாலினி அகப்பட்டாளா?

வீர யுக நாயகன் வேள்பாரி அத்தியாயம்-16 23.06.2021

கிள்ளிக்கு செம்பாவின் மீதும் கிள்ளியின் தந்தைக்கு அவர்களிடத்தில் உள்ள மணிக்கற்களின் மீதும் ஏற்பட்ட தவறான காதல். கோவன் மற்றும் செம்பாவின் மனமார்ந்த காதல். கோவன் தங்களது குலம் காப்பாற்றும் கிடை(மாடு) களை வைத்து உறையூர் படையுடன் மிகச் சிறப்பாக போர் செய்து அவர்களை விரட்டியடித்து விட்டு அவன் செய்த எதிர்பாராத செயல்.

மேஜிக் மாலினி - 3 23.06.2021

மாலினியின் மேஜிக் குல்லாவைக் கழட்ட முற்பட்டு தலைமை ஆசிரியை தோல்வியடைந்து நொந்து போனார்கள். மங்காத்தா மற்றும் மற்ற சிறுமிகள் மாலினியின் மேல் கோபம் கொள்ளுதல். மாலினி தன் மந்திரக் குல்லாயைக் கழற்றும் மந்திரத்தை மறந்து போதல்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 15 21.06.2021

இரண்டாம் நாள் கூத்து - செம்பாதேவியின் கதை. கால்நடைகளை மேய்த்து பல்கிப் பெருகிய குலம். குலத்துக்கு அடையாளமாக ஆண்கள் தங்கள் உடலில் சூட்டுக்காயங்கள் இட்டும் பெண்கள் தங்கள் தலை முடிகளைப் பிட்டிங் கொண்டும் குல அடையாளங்கள் கொள்ளுதல். கோவன் மற்றும் செம்பாவின் காதல்.

மேஜிக் மாலினி -2 21.06.2021

புதிய பள்ளிக்கூடத்திற்குள் தாத்தா கருப்பு பூனையுடன் நுழைந்த மாலினி அங்கிருந்த பொல்லாத பெண்களிடம் சிக்கி எப்படி தன் மந்திர வித்தையைக் காட்டித் தப்பித்தாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 14 18.06.2021

மயிலாவின் பார்வையில் நீலன். தான் கண்டறியாத கேட்டறியாத நீலனின் மற்றுமொரு முகம். அசுணமா பறவை பற்றி கபிலர் பாரியிடம் கூறுதல். அசுணமா பறவையின் சிறப்பு பற்றி அறிந்து பாரி மகிழ்தல். அழிவுச் சக்திகள் எங்கிருந்தாலும் அழிப்பேன் என்ற பாரியின் சபதம்.

மேஜிக் மாலினி -1 18.06.2021

மேஜிக் மாலினியின் அறிமுகம்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 13 10.06.2021

கொற்றவைக் கூத்தின் விளக்கம். மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட குலங்களின் தோன்றல்கள் சூளுரைக்கும் கூத்து. வேளாண்மையின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்த அகுதையின் குலம் அழித்தல். அகுதையின் வம்சக்கொடி சூளுரைக்க முன் வருதல்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 12 10.06.2021

கோட்டைச்சுவரே இல்லாத நகரத்தின் பாதுகாப்பு பற்றி பாரி கபிலரிடம் விளக்குதல். ஏழிலைப் பாலையின் குணம் கேட்டு கபிலர் அதிசயித்தல். முருகன் வள்ளியை கவர உதவி செய்த அதிசய மரத்தின் பண்பினை கபிலரிடம் பாரி சொல்லைக் கேட்டு வியத்தல். குலநாகினியின் வரவு.

Listen to the கதைப் பயணம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.