Viji Venkat

கதைப் பயணம்

Kids TA ↓ 211 episodes

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கதைப் பிரியர்கள் அனைவரும் கேட்டு மகிழும் கதைகள்

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

Viji Venkat

Category

Kids

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 19, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

நீதிக்கதைகள் - உணர்வு (தீபாவளி கதை) 07.11.2021

இதயம் எப்போதெல்லாம் அன்பு, மென்மை, கனிவு, மிருதுவான தன்மை இவற்றால் நிரப்பப் படுகிறதோ அப்போது நாம் அதிக அளவுக்கு உருவாக்கும் சக்தியையும் அதிக அளவுக்கு இணக்கமான தன்மையையும் கொண்டவராகின்றோம்.

"மார்ஷ் மல்லோவ் தியரி". (Marsh Mallow Theory) சிறுகதை 27.10.2021

சிறுவர்களுக்கான கதைகள்

விமர்சனங்கள் சிறுகதை 27.10.2021

குழந்தைகளுக்கான சிறுகதைகள்

வீர யுக நாயகன் வேள்பாரி- அத்தியாயம் 31 19.10.2021

போருக்கான ஆயத்தங்கள் மற்றும் பொற்சுவையின் சிலம்பு திருவிழா.

நீதிக்கதைகள் 2 - மகாபாரதக் கதை 18.10.2021

குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்

கவிதை - நம்பிக்கை 18.10.2021

விஜிவெங்கட்டின் கவிதைகள்

நீதிக்கதை - 1 (சிறுவர் கதைகள்) 15.10.2021

சிறுவர்களுக்கான கதைகள்

மாயக் கண்ணாடி - சிறுவர் கதைகள் 06.10.2021

சாப்பிட்டு சாப்பிட்டு குண்டான ராஜா எப்படி கட்டுடல் கொண்ட அழகனா மாறினார்?

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 30 05.10.2021

வீர யுக நாயகன் வேள்பாரி 30

மேஜிக் மாலினி - பாகம் 19 05.10.2021

மங்காத்தாவும் வடிவும் பள்ளி விழாவில் போட்ட நாடகத்தில் செய்யவிருந்த திருட்டுத்தனத்தை மாலினி தன் மந்திரம் போட்டு தடுத்து நிறுத்தினாள்.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - டிரெடில்(1958) 26.09.2021

எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள்

நரியும் சின்ன முயலும் 26.09.2021

சிறுவர் கதைகள்

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 29 25.09.2021

முதுவன் திசைவேழரின் வானியல் அறிவைப் பற்றி வியத்தல். பொற்சுவை சுகமதியிடம் தன் மனக் கவலைகளை மிக வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளுதல். திருமணக் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பமாகியது.

மாஜிக் மாலினி - 18 25.09.2021

மங்காத்தா ஆசிரியர் சொன்ன வீட்டுப் பாடத்தை முடிக்காமல் மாலினியின் வீட்டுப் பாடத்தை எடுத்துக்கிழிக்க ஆசிரியர் அவளைக் கண்டித்து வீட்டுப்பாடத்தை எழுதச் சொன்னார். இது பிடிக்காமல் அந்தப் பள்ளியை விட்டுப் போக நினைத்தாள். அதனைத் தடுக்க மாலினி போட்ட மந்திரம் விளையாட்டாய் முடிந்தது.

The Time machine 25.09.2021

Henry loses his love and faith from Amber.

வீரயுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 28 21.09.2021

திரையர்கள் காட்டெருமையை வீழ்த்தி அவர்கள் குல வழக்கப்படி வெற்றிலையை வைத்து அவ்வூர் பெண்ணை மணந்து கொள்ளும் வழக்கம் அறிந்த சூலிவேள் காட்டெருமையை வீழ்த்த ஆவல் கொண்டான். தூதுவை சூலிவேளின் மனம் அறிந்து மகிழ்தல். காட்டெருமை மையை வீழ்த்துவதற்கான யுக்தியை அவ்வூர் கிழவியிடம் அறிந்து காட்டெருமையை வெற்றி கொண்டு தூதுவளையை மணம் முடித்தல்.

Magic Malini -17 21.09.2021

மங்காத்தாவும் மாலினியும் பரீட்சை கேள்வித்தாளை தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் எடுக்க மாலினியை வைத்து போட்ட திட்டத்தை மாலினி தன் மேஜிக் மூலம் எப்படி முறியடித்தாள்?

வீர யுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் - 27 16.09.2021

கபிலருக்கு பாரி திரையர்கள் பற்றிய கதையைக் கூறத் தொடங்குதல். காடு பற்றி அறிவதற்கு தேக்கன் சூலிவேள் மற்றும் சிலரை அழைத்துக் கொண்டு போக அங்கு ஏற்பட்ட நிகழ்வில் சூலிவேல் ஆற்று வெள்ளத்தில் மாட்டிக் கொள்ளுதல். பிறகு தூதுவளை என்ற பெண்ணினால் காப்பாற்றப்படுதல். தன்னைக் காப்பாற்றியவர்கள் திரையர்கள் என சூலிவேள் அறிந்து கொள்ளுதல்.

மாஜிக் மாலினி - 16 16.09.2021

மங்காத்தா திருடும் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி மாலினியை தனக்கு மாணவியாக்கப் பார்த்தாள். இதற்கு மறுத்த மாலினியை மிரட்டியவள் பிறகு மாலினியின் மந்திரத்தினால் நடந்த நிகழ்வில் பயந்து போனாள்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 26 (முதல் பாகம் முற்றிற்று) 14.09.2021

குல சேகர பாண்டியனும், சூழ்கடல் முதுவனும் வெற்றிலை வைத்த தட்டுக்களை திருமண நிகழ்விற்காக மாற்றிக் கொள்ளுதல். உதிரன் கபிலருக்காகப் பேரெலி வேட்டைக்கு சில வீரர்களுடன் பாரி மற்றும் கபிலருடன் காட்டுக்குச் செல்லுதல். வெற்றிலையைக் கண்டறிந்த மாவீரர்களின் கதையை கபிலரிடம் பாரி சொல்லத் தொடங்குதல்.

மேஜிக் மாலினி - 15 14.09.2021

மாலினி போட்ட தவறான மந்திரம் பலித்ததால் காட்டுக்குள் மாட்டிக் கொண்ட அனைவரையும் மீண்டும் மந்திரம் போட்டுத் தவறினை சரி செய்தாள் மாலினி. யாருக்கும் தெரியாமல் மங்காத்தா சினிமாவுக்கு போய் விட்டு வந்து தனக்கு பிடித்த கதாபாத்திரம் பாகி என்று சொல்லி மாலினியை ஆச்சரியப்படுத்தினாள்.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் - 25 07.09.2021

வானியல் அறிஞர் திசைவேழர் பாண்டரங்கத்தில் வரையப் பட்டிருந்த ஓவியங்களின் தவறுகளைப் பார்த்து அதிர்ந்து போதல். முசுகுந்தர் மற்றும் வெள்ளி கொண்டார் தலைமையில் யானையால் இறந்த தளபதிக்கான விசாரணையில் யானையும் யானைப்பாகனும் மைதானத்தில் போட்டிக்காக தனித்து விடப்பட்டிருந்தனர்.

மாஜிக் மாலினி - 14 07.09.2021

தங்களைத் துரத்திய பூனையை கடத்தி ரங்கனிடம் விற்றுப் பணம் வாங்க திட்டம் போட்டனர் மங்காவும் வடிவும். இதை அறியாத மாலினி மந்திரம் போட அவளும் கருப்பு பூனை தாத்தாவோடு மாட்டிக் கொண்டாள். மாலினி மீண்டும் போட்ட தவறான மந்திரத்தால் என்ன நிகழ்ந்தது அவர்களுக்கு???

Lunch theif in tamil 06.09.2021

Chu Chu and Chika are friends. Chu Chu is having a sandwich for lunch but in lunch break it is not in her box. W here did it go is the question.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 24 31.08.2021

கபிலருக்கு உதிரன் பணிவிடை செய்ததும் பாரியின் நற்பண்பு மற்றும் அவனது நாட்டில் அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து தனது நாட்டின் உரிமைக்காக போராடுவதும் கபிலருக்கு ஏன் நாம் இந்த நாட்டை தாய்நாடு என சொல்லக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. இளவரசியாரின் வருகை மதுரை மா நகரையே விழாக்கோலமாக மாற்றிக் கொண்டிருந்தது.

Listen to the கதைப் பயணம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.