ஞானத்தேடல் - Quest for Knowledge

ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com

Autor

ஞானத்தேடல் - Quest for Knowledge

Kategoria

Society

Strona podcastu

podcasters.spotify.com

Ostatni odcinek

26 maj 2024

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

ஞானத்தேடல் - Ep115 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருந்தி, அதிரல், சண்பகம் - (Gnanathedal) 03.12.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப்...

ஞானத்தேடல் - Ep114 - கம்பரின் சமயோசிதம் - (Gnanathedal) 26.11.2023

கம்பரின் சமயோசிதம் கரைக்கு வடக்கிருக்கும் காளிகாள் அம்மைக்கு அரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய் உரைத்தும் மறைக்க வறியாத வன்பேயைக் குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு. ‌ இட்டடி நோவ எடுத்தடிகொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசையக்-கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும். ‌ உருகி உடல்உருகி உள்ளீரல் பற்றி எரிவ தவியாதென் செய்வேன்- வரியரவ நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள் நெஞ்சில...

ஞானத்தேடல் - Ep113 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - போங்கம், திலகம், பாதிரி - (Gnanathedal) 19.11.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க்...

ஞானத்தேடல் - Ep112 - சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன் - (Gnanathedal) 12.11.2023

சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன் Sálim Moizuddin Abdul Ali (12 November 1896 – 20 June 1987) was an Indian ornithologist and naturalist. Sometimes referred to as the "Birdman of India", Salim Ali was the first Indian to conduct systematic bird surveys across India and wrote several bird books that popularized ornithology in India. Along with Sidney Dillon Ripley he wrote the landmark ten vo...

ஞானத்தேடல் - Ep 111 - உலகநீதி (Gnanathedal) 29.10.2023

உலக நீதி - ஆசிரியர்: உலகநாதர் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே. #1 நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒரு...

ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal) 22.10.2023

திருத்தக்க தேவர் அருளிய நரி விருத்தம் அரிய யற்கரி யானை யயர்த்துபோய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே - அப்பர் தேவாரம் (5.100.7) கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரெலி யின்றொழிற் பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம் - சம்பந்தர்தம் தேவாரம் ஆலவாய் பதிகம்(3.39.5) 'கிளிவிருத்தம்' 'எலிவிருத்தம்' என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது. 'வீரசோழியத்தின்' உரை ஆசியர் 'ப...

ஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal) 15.10.2023

நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Arunagirinathar sang Thiruppugazh praising Lord Murugan...

ஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal) 08.10.2023

அனுபவ ஞானம் மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும் தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும் திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச் சிறந்திடும் அரக்காம்பல் எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே ‌ தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா தாம்பல நூல் கற்றாலும் த...

ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal) 01.10.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பா...

ஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal) 24.09.2023

திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம் திகட சக்கரச் செம்முக மைந்துளான்      சகட சக்கரத் தாமரை நாயகன்           அகட சக்கர வின்மணி யாவுறை                விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். வேம்பத்தூராருள்‌ ஒருவராகிய பெருமாளையர் நெல்லைவருக்கக்கோவை என்னும்‌. பிரபந்தத்தை இயற்றி முடித்தார்‌. மொழிக்கு முதலாகும்‌ உயிரெழுத்துக்களிலும்‌ உயிர்‌ மெய்யெழுத்துக்களிலும...

ஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal) 17.09.2023

கம்பர் கட்டிய சுவர் சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம் கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம் “தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை” தாய் + சீ + பொன்னிக்கு கம்பன் அடிமை போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள் கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்-...

ஞானத்தேடல் - Ep104 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை - (Gnanathedal) 10.09.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப்...

ஞானத்தேடல் - Ep103 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா - (Gnanathedal) 03.09.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References பசும்ப...

ஞானத்தேடல் - Ep 102 - அனுபவ ஞானம் - 6 - (Gnanathedal) 27.08.2023

அனுபவ ஞானம் கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப் பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும் சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக வருமெனவே சொல்லி னாலும் நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே ‌ வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும் வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் ப...

ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal) 20.08.2023

வேட்கைப் பத்து மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்; கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே; நூலையோ தைங்குறு நூறு. ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேர...

Ep100 - ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி 13.08.2023

ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி இது ஞானத்தேடலின் 100 வது பதிவு. ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக பதிவுகள் அனுப்பி வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் - Mr. P. Soundara Rajan - Mr. Soundararajan Kidambi - Mr. P. Gopinath - Dr. R. Rajesh - Mr. R. G. Kannan My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://n...

ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal) 06.08.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and...

ஞானத்தேடல் - Ep 98 - கல்வியின் மகத்துவம் - (Power of Education) 30.07.2023

கல்வி கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (393) கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு (397) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (398) பாடை ஏறினும் ஏடது கைவிடேல் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (396) கண்டதை கற்க பண்டிதர் ஆவார் கற்க கசடறக் கற்...

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal) 23.07.2023

அனுபவ ஞானம் வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம் தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ? ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ? ‌ செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிது பேணார் சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார் வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார் வல்வினை விளைவும் பாரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர். ‌ ஆசாரம் செய்வா...

ஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal) 16.07.2023

பதார்த்த சூடாமணி தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார் இயற்றிய பதார்த்த சூடாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great...

ஞானத்தேடல் - Ep95 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை, கருவிளை, பயினி, வானி - (Gnanathedal) 09.07.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை,கருவிளை, பயினி, வானி - (சிறுவானி, பவானி பெயர்க்காரணம்) தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 f...

ஞானத்தேடல் - Ep94 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை - (Gnanathedal) 02.07.2023

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji...

ஞானத்தேடல் - Ep 93 - அனுபவ ஞானம் - 4 - (Gnanathedal) 25.06.2023

அனுபவ ஞானம் அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம் இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம் நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்? ‌ பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார் மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில் பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே! திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க்...

ஞானத்தேடல் - Ep 92 - இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு - (Gnanathedal) 18.06.2023

இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம் தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும் சோரார் உணர்வுடை யார். புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, பாதை, நீர்நிலை, கோயில், நிழல் உள்ள இடம், பசுமந்தை நிற்கிற இடம், சாம்பல் ஆகிய பத்து இடத்திலும் எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். My Books Ancient Wi...

ஞானத்தேடல் - Ep 91 - அனுபவ ஞானம் - 3 - (Gnanathedal) 11.06.2023

அனுபவ ஞானம் கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார் இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல் அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா. ‌ நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார் தல மெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம் குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு ந...

Słuchaj podcastu ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS