SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Visita il sito del podcast e sostieni chi lo crea: www.sbs.com.au
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன? 14.10.2026 18:41
ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலி ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். Liv...
வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்? 14.10.2026 12:55
சூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். சிலர் காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான டொலர்கள...
இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை 14.10.2026 4:00
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
சுமார் 43 வருடங்களாக நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள் 13.10.2026 8:32
இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற ஜூலை கலவரத்திற்கு அரசிடம் நீதிவிசாரணையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Tamil people still waiting for justice after nearly...
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி முன்பதிவு அவசியம் 13.10.2026 2:19
விக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles பாறைகளைக் காண இனி முன்பதிவு அவசியம்; நுழைவுக் கட்டணமும் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களில் புதிய மாற்றம் 13.10.2026 2:33
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2026 - புதன்கிழமை 13.10.2026 4:45
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவாய்க்கிழமை 13/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
How laws are made, and how they affect you | How Australia Works - சட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, உங்களை எவ்வாறு பாதிக்கின்றன|ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுகிறது? 12.10.2026 9:30
How are laws made in Australia? Through Wurundjeri Elder Uncle Dave Wandin’s story of the Birrarung, also known as the Yarra River, learn how an idea becomes a bill, passes through Victoria’s parliament and receives royal assent, the formal approval that makes it law. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? யர்ரா நதி என்றும் அழைக்கப்படும் பரரங் பற்றிய வுருண்ட்ஜெரி மூத்தவரான David...
Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி? 12.10.2026 14:11
Money Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money Laundering தடுப்பு தொடர்பாக சான்றிதழ் பெற்ற நிபுணரும் ஆலோசகருமான Karthick Elangovan அவர்கள். அவரோடு உரையாடுகிற...
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 12.10.2026 8:40
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி; ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு; இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 12 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 12.10.2026 4:31
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
13 கோடி பெயர்களை நீக்கிய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வீதிக்கு வந்த இளைஞர்கள் 11.10.2026 9:06
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026) 09.10.2026 6:14
ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)
உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு 09.10.2026 5:35
2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice
Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள் 09.10.2026 8:16
Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை...
பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா 09.10.2026 24:22
சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர் 09.10.2026 8:31
ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில் அதிகமாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 08.10.2026 4:24
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 03 – 09, 2026) 08.10.2026 8:17
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)
ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்கள்! 08.10.2026 2:58
2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்களின் பட்டியலை Australian Financial Review வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி? 08.10.2026 11:57
நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
உலுரு: இயற்கை செதுக்கிய ஆஸ்திரேலியாவின் புனித அதிசயம் 08.10.2026 8:26
ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் உலுரு, ஒரு பிரமாண்டமான பாறை மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த இயற்கை அதிசயம், இந்த நாட்டின் பூர்வீக மக்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. உலுரு ஏன் அவர்களுக்கு புனிதமானது? உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஏன் இதைக் காண வருகிறார்கள்? உலுருவின் வரலாறு, இயற்கைச் சிறப்புகள் மற்றும் அதன் பண்பாட்டு முக்கி...
போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்? 08.10.2026 13:30
அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் - யார் கையில்? 08.10.2026 8:51
இந்நாட்டில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம், அடுத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையலாம். நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. அத்துடன் இது குறித்து Labor கட்சி, Liberal-National Coalition கூட்டணி மற்றும் One Nation ஆகிய மூன்று கட்சிகளின் திட்டங்களும் வெளிவந்துவிட்ட...
திறன்சார் குடியேற்றம்: யார் என்ன வாக்குறுதி தருகிறார்கள்? 08.10.2026 8:51
நம் நாட்டின் திறன்சார் குடியேற்றம் பற்றிய அரசியல் விவாதம் இந்த வாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. கடந்த மாதம் அரசும், One Nation கட்சியும் தம் திட்டங்களை அறிவித்திருந்தன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici