SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.sbs.com.au
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
அரசு ஏன் சர்வதேச மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு (Graduate Diploma course) வீசாவை நீக்கியது? 05.10.2026 9:05
சர்வதேச மாணவர் வீசா முறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இன்று, அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் ஒரு டிப்ளோமா படிப்புக்காக வழங்கப்படும் வீசா நீக்கப்படுகிறது. ஆனால் அதற்குள், கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் அந்தப் படிப்பில் சேர, கடைசி நிமிடத்தில், அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கை மூலம், “ஏமாற்ற முயலாதீர்கள்!” என்று - கல்லூரிக...
இன்றைய செய்திகள்: 05 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 05.10.2026 4:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 04.10.2026 9:26
தமிழகத்தை உலுக்கி வரும் 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு - 'ஜெம்' வீரமணி மீது குண்டர் சட்டம்; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) 02.10.2026 6:13
ஆஸ்திரேலியாவின் இந்த வார (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (27 September – 3 October 2026)
Western Sydney விமான நிலையத்திலிருந்து City செல்ல பேருந்து கட்டணம் எவ்வளவு? 02.10.2026 2:50
சிட்னியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புதிய Western Sydney சர்வதேச விமான நிலையத்திலிருந்து Sydney CBD-க்கு இயக்கப்படவுள்ள நேரடி Shuttle பேருந்து சேவைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி? 02.10.2026 8:05
Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்று...
ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் இன்று முதல் புதிய மாற்றங்கள் 02.10.2026 10:55
அக்டோபர் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் விளக்குகிறார் Ramyam Australian Education and Visa Services நிறுவனரும் குடிவரவு முகவருமான Dr அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
புதிய நாடு, புதிய வாழ்க்கை, புதிய சவால்கள்: சர்வதேச மாணவர்கள் என்ன செய்யலாம்? 02.10.2026 12:36
ஆஸ்திரேலியாவில் படிக்கும் பல சர்வதேச மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தனிமை, பண அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் மனஅழுத்தம் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ரா...
இன்றைய செய்திகள்: 02 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 02.10.2026 4:18
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 01.10.2026 8:19
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தின் வரைபு அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்ட வரைபு தொடர்பில் பலரும் எதிர்ப்பு; இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 2500 பேர் உயிரிழப்பு இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது! 01.10.2026 3:29
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் Oct 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நடுவானில் நடந்த திகில்: Flydubai விமானத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் 01.10.2026 8:47
நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த Flydubai விமானம்… பயணிகள் கண்முன்னே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம். உயிருக்கு ஆபத்தான சூழலில், விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 174 பேரையும் காப்பாற்றிய அந்த சில நிமிடங்கள் எப்படி இருந்தன? இச் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் ஈம்யு: ஆச்சரிய தகவல்கள் 01.10.2026 8:46
கங்காருவைப் போலவே ஆஸ்திரேலியாவின் அடையாளமாக அறியப்படும் இன்னொரு உயிரினம் ஈம்யு. பறக்க முடியாது; ஆனால் மிக வேகமாக ஓடும். கடும் வெப்பத்தையும் உணவுப் பற்றாக்குறையையும் தாங்கும். அதிலும், முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது ஆண் ஈம்யு என்பது இன்னொரு ஆச்சரியம். இப்படிப் பல தனித்துவங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் ஈம்யு பறவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிற...
முதன்முறையாகப் பறை இசைக்குக் கலைமாமணி வென்ற பனையூர் ராஜா! 01.10.2026 14:15
கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவர்களுக்கு வருடாவருடம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. 8 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அதன்போது, முதன்முறையாக, ஒரு பறை இசைக் கலைஞருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த விருது பெற்ற டாக்டர் பனையூர் ராஜாவுடன் குலசேகரம் சஞ்சயன் 20...
சிட்னி விமானநிலையத்திலிருந்து பயணிப்பது ஆபத்தானதா? 01.10.2026 11:05
சிட்னி விமான நிலையத்தில் ஜூலை 27ஆம் தேதி இரண்டு பயணி விமானங்கள் ஒன்றுக்கொன்று வெறும் 120 மீட்டர் தூரத்தில் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டன. ஒரு விமானத்தில் 157 பேர். மற்றதில் 55 பேர். ஒரு பெரும் அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. பதிவுகள் 2003ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான ஓடுபாதை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று, நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை...
இன்றைய செய்திகள்: 01 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 01.10.2026 4:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 01/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Bathlaவின் சரிவு: வீடு கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? 30.09.2026 16:25
ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வீட்டுச் சந்தை மாற்றங்கள், அதிகரித்த கட்டுமானச் செலவுகள் மற்றும் நிதி அழுத்தங்களுக்கு மத்தியில், Bathla Group போன்ற பெரிய கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணியில், Bathla நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், கட்டுமானத் துறையில் அனுபவம் கொண்டவரும், சிட்னியில் Sydneywide Homes எனும் கட்டுமான...
இன்றைய செய்திகள்: 30 செப்டம்பர் 2026, புதன்கிழமை 30.09.2026 3:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/09/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
நான்காவது தடவையாக உயர்ந்த வட்டி விகிதம்: வீட்டுக்கடன் வைத்திருப்பவர்களை எவ்வாறு பாதிக்கும் 30.09.2026 7:45
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதத்தை 4.6 ஆக உயர்த்தும் தனது முடிவினை ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 29ம் திகதி அறிவித்தது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீட்டுக் கடன் பெற்ற மில்லியன் கணக்கான குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிக உயர்ந்த வட்டி வீதம் இதுவாகும். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
திலீபன் நினைவுச் சிலை அகற்றம்: வடக்கு – கிழக்கில் போராட்டங்கள் 29.09.2026 8:32
யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவு நாள் நிகழ்வின் போது அமைக்கப்பட்ட சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைக்க கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு. தமிழ் தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast
நாட்டின் வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது 29.09.2026 2:32
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
படகு மூலம் வந்த 30,000 பேருக்கு ஆஸ்திரேலிய அரசு நிரந்தர விசா வழங்கியுள்ளதாக தகவல் 29.09.2026 3:20
2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை படகு வழியாக ஆஸ்திரேலியா வந்த 30,000-க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 29 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 29.09.2026 4:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 29/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
Who really runs Australia, and where you fit in - ஆஸ்திரேலியாவை உண்மையில் யார் நடத்துகிறார்கள், அதில் உங்கள் பங்கு என்ன? 28.09.2026 8:56
Do you know who can help you with a business permit, a rental problem or family support? Through the stories of Fedele, Carol and Abeer, learn how Australia’s three levels of government work. Find out what local, state or territory, and federal governments are responsible for and where to turn for help. - தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான வணிக அனுமதி, வாடகை பிரச்சனை அல்லது குடும்ப ஆதரவு என்பனவற்றுக்கு...
You are already inside the system | How Australia Works - முன்னோட்டம்: நீங்கள் ஏற்கனவே இந்த அமைப்பின் ஒரு பகுதி | ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது? 28.09.2026 4:05
How do Australia’s governments, laws and public services affect your everyday life? Through real stories, this introduction to the series shows you where to start when you need information and support, and how to question a decision. - ஆஸ்திரேலிய அரசு, சட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? உண்மையான கதைகள் மூலம், உங்களுக்குத் தகவல்களும் ஆதரவ...
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS